ஆக்டிவா 125, டெஸ்டினி 125 ஸ்கூட்டர்களை ஓடவிட விரைவில் வருகிறது டிவிஎஸ் ஜூபிடர்... புதிய அவதாரத்தில்!!

ஆக்டிவா 125 மற்றும் டெஸ்டினி 125 ஸ்கூட்டர்களுக்கு டஃப் கொடுக்கின்ற வகையில் டிவிஎஸ் ஜூபிடர் தயாராகி வருவதகாவம், அதை எப்போது எதிர்பார்க்கலாம் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஆக்டிவா 125, டெஸ்டினி 125 ஸ்கூட்டர்களை ஓடவிட விரைவில் வருகிறது டிவிஎஸ் ஜூபிடர்... புதிய அவதாரத்தில்!!

டிவிஎஸ் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த இருசக்கர வாகனங்களில் ஜூபிடர் ஸ்கூட்டரும் ஒன்று. மிகக் குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் சூப்பர் அம்சங்கள் கொண்ட ஸ்கூட்டராக இது இருக்கின்றது. ஆனால், இதனை 110 சிசி திறனில் மட்டுமே நிறுவனம் விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

ஆக்டிவா 125, டெஸ்டினி 125 ஸ்கூட்டர்களை ஓடவிட விரைவில் வருகிறது டிவிஎஸ் ஜூபிடர்... புதிய அவதாரத்தில்!!

இந்த நிலையை மாற்றும் முயற்சியில் டிவிஎஸ் ஈடுபட்டு வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, விரைவில் 125 சிசி திறன் கொண்ட ஜூபிடரை டிவிஎஸ் களமிறக்க இருக்கின்றது. நாட்டின் சில முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்கனவே இந்திய சந்தையின் மன நிலையை அறிந்து 125 சிசி திறன் கொண்ட டூ-வீலர்களைக் களமிறக்கிவிட்டன.

ஆக்டிவா 125, டெஸ்டினி 125 ஸ்கூட்டர்களை ஓடவிட விரைவில் வருகிறது டிவிஎஸ் ஜூபிடர்... புதிய அவதாரத்தில்!!

இந்த நிலையில் சற்று தாமதமாக 125 ஜூபிடர் ஸ்கூட்டரை களமிறக்கும் முயற்சியில் டிவிஎஸ் களமிறங்கியிருக்கின்றது. புதிய 125சிசி திறன் கொண்ட ஜூபிடர் நடப்பாண்டின் மே மாதத்திலேயே விற்பனைக்கு வரும் இப்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை டிவிஎஸ் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆக்டிவா 125, டெஸ்டினி 125 ஸ்கூட்டர்களை ஓடவிட விரைவில் வருகிறது டிவிஎஸ் ஜூபிடர்... புதிய அவதாரத்தில்!!

டிவிஎஸ் நிறுவனம் ஜூபிடர் ஸ்கூட்டர் மாடலில் 125சிசி திறன் தேர்வை வழங்க தவறியிருந்தாலும் அதன் என்டார்க் ஸ்கூட்டரில் 125 சிசி திறனுடைய ஸ்கூட்டரை எப்பொழுதோ களமிறக்கிவிட்டது. இது இந்நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் ஸ்கூட்டராகும். எனவேதான் முதலில் இந்த ஸ்கூட்டரில் 125 சிசி எஞ்ஜின் தேர்வை அது அறிமுகப்படுத்தியது.

ஆக்டிவா 125, டெஸ்டினி 125 ஸ்கூட்டர்களை ஓடவிட விரைவில் வருகிறது டிவிஎஸ் ஜூபிடர்... புதிய அவதாரத்தில்!!

தற்போது ஜூபிடர் ஸ்கூட்டரிலும் வழங்க அது முடிவு செய்திருக்கின்றது. 125 சிசி திறனில் விற்பனைக்குக் கிடைக்கும் என்டார்க் இந்திய இளைஞர்களின் மிகவும் பிடித்தமான வாகனங்களில் ஒன்றாக மாறியிருக்கின்றது. இதேபோன்று விரைவில் 125 சிசி திறனில் வரவிருக்கும் டிவிஎஸ் ஜூபிடரும் இளைஞர்களின் பிடித்தமான ஸ்கூட்டராக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆக்டிவா 125, டெஸ்டினி 125 ஸ்கூட்டர்களை ஓடவிட விரைவில் வருகிறது டிவிஎஸ் ஜூபிடர்... புதிய அவதாரத்தில்!!

தற்போது, என்டார்க் ஸ்கூட்டரில் முழு டிஜிட்டல் திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஸ்மார்ட்எக்ஸொன்னெக்ட் உள்ளிட்ட சிறப்பு வசதிகளை டிவிஎஸ் வழங்கி வருகின்றது. இதன்மூலம் செல்போனை நேரடியாக ஸ்கூட்டருடன் இணைக்க முடியும். அவ்வாறு இணைக்கும்பட்சத்தில் அனைத்து தகவலையும் செல்போன் திரையிலேயே நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.

ஆக்டிவா 125, டெஸ்டினி 125 ஸ்கூட்டர்களை ஓடவிட விரைவில் வருகிறது டிவிஎஸ் ஜூபிடர்... புதிய அவதாரத்தில்!!

இத்தகைய சிறப்பு வசதியை 125 சிசி திறனில் வரும் ஜூபிடரிலும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் மூலம் ஸ்கூட்டரின் இருப்பிடம், செல்லும் இடம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் நம்மால் பெற முடியும். இதுகுறித்த அனைத்து தகவலும், ஸ்கூட்டர் அறிமுகமாக இருப்பதாகக் கூறப்படும் மே மாதத்திற்கு முன்னரே தெரியவரலாம் என யூகிக்கப்படுகின்றது.

ஆக்டிவா 125, டெஸ்டினி 125 ஸ்கூட்டர்களை ஓடவிட விரைவில் வருகிறது டிவிஎஸ் ஜூபிடர்... புதிய அவதாரத்தில்!!

தற்போது விற்பனையில் இருக்கும் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் ரூ. 62 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரையிலான விலையில் கிடைத்து வருகின்றது. ஆகையால், விரைவில் எதிர்பார்க்கப்படும் 125 சிசி ஜூபிடர் ரூ. 2,500 விலையுயர்வில் எதிர்பார்க்கப்படுகின்றது. இது, ஹோண்டா ஆக்டிவா 125, சுசுகி அக்செஸ் 125 மற்றும் ஹீரோ டெஸ்டினி 125 உள்ளிட்ட ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அமையும்.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
Activa 125 Rival TVS Jupiter 125 Is Expected To Go On Sale In May. Read In Tamil.
Story first published: Saturday, January 2, 2021, 17:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X