இந்த மோட்டார்சைக்கிள யாருக்குதான் பிடிக்காது! RoyalEnfield Classic350 பைக்கை வாங்கிய பிரபல நடிகை! யாருங்க அது?

பிரபல நடிகை ஒருவர் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் பிரபல மோட்டார்சைக்கிள் மாடலான கிளாசிக் 350 (Classic 350)-ஐ வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்த மோட்டார்சைக்கிள யாருக்குதான் பிடிக்காது! Royal Enfield Classic 350 பைக்கை வாங்கிய பிரபல நடிகை! யாருங்க அது?

இருசக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் பழமையான நிறுவனங்களில் ஒன்று ராயல் என்பீல்டு. இந்நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பாக கிளாசிக் 350 இருக்கின்றது. இந்த இருசக்கர வாகன மாடலுக்கு இந்தியர்கள் மத்தியில் தனித்துவமான டிமாண்ட் நிலவி வருகின்றது. குறிப்பாக, ரெட்ரோ தோற்றமுள்ள இருசக்கர வாகனங்களை விரும்புவோரின் மிகவும் பிடித்தமான மோட்டார்சைக்கிளாக இது இருக்கின்றது என்று கூட கூறலாம்.

இந்த மோட்டார்சைக்கிள யாருக்குதான் பிடிக்காது! Royal Enfield Classic 350 பைக்கை வாங்கிய பிரபல நடிகை! யாருங்க அது?

அந்தளவிற்கு நாட்டில் சிறப்பான வரவேற்பை கிளாசிக் 350 பைக் பெற்று வருகின்றது. இந்த பைக்கிற்கு ஆண்கள் மத்தியில் பெண்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ஓர் நிகழ்வு தற்போது நடைபெற்றிருக்கின்றது. பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் கிளாசிக் 350 பைக்கை தனது சொந்த பயன்பாட்டிற்காக வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மோட்டார்சைக்கிள யாருக்குதான் பிடிக்காது! Royal Enfield Classic 350 பைக்கை வாங்கிய பிரபல நடிகை! யாருங்க அது?

இதுகுறித்த தகவலை அந்த நடிகையே அவரது இன்ஸ்டா பக்கத்தின் வாயிலாக வெளியிட்டிருக்கின்றார். கிர்தி குல்ஹரி எனும் பிரபல வட இந்திய நடிகையே பைக்கை வாங்கியவர் ஆவார். இவர் பிங்க், பிளாக்மெயில் மற்றும் உரி போன்ற சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இந்த மோட்டார்சைக்கிள யாருக்குதான் பிடிக்காது! Royal Enfield Classic 350 பைக்கை வாங்கிய பிரபல நடிகை! யாருங்க அது?

தற்போது ராயல் என்பீல்டு 350 பைக்கை வாங்கி, ராயல் என்பீல்டு பைக் பயன்பாட்டாளர்களில் ஒருவராக அவர் மாறியிருக்கின்றார். ஹேலிகன் கிரே நிறத்திலான கிளாசிக் 350 பைக்கையே அவர் வாங்கியிருக்கின்றார். இதுவே தான் வாங்கும் முதல் மோட்டார்சைக்கிள் என நடிகை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த மோட்டார்சைக்கிள யாருக்குதான் பிடிக்காது! Royal Enfield Classic 350 பைக்கை வாங்கிய பிரபல நடிகை! யாருங்க அது?

ஆகையால், நடிகையை கவர்ந்த முதல் மோட்டார்சைக்கிள் என கிளாசிக் 350 பைக்கை கூறலாம். இந்த கிர்தி குல்ஹரியை போல் இந்தியர்கள் பலரை கவர்ந்து வருவது குறிப்பிடத்தகுந்தது. ராயல் என்பீல்டு நிறுவனம் கிளாசிக் 350 பைக் மாடலின் புதிய தலைமுறை வெர்ஷனை ஒரு சில மாதங்களுக்கு முன்னர் நாட்டில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது.

இந்த மோட்டார்சைக்கிள யாருக்குதான் பிடிக்காது! Royal Enfield Classic 350 பைக்கை வாங்கிய பிரபல நடிகை! யாருங்க அது?

பழைய தலைமுறையைப் போலவே இந்த வெர்ஷனும் இருசக்கர வாகன விரும்பிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிகன்றது. ரூ. 1.87 லட்சம் தொடங்கி ரூ. 2.18 லட்சம் வரையிலான விலையில் கிளாசிக் 350 பைக் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

இந்த மோட்டார்சைக்கிள யாருக்குதான் பிடிக்காது! Royal Enfield Classic 350 பைக்கை வாங்கிய பிரபல நடிகை! யாருங்க அது?

இதன் புதிய தலைமுறை வெர்ஷனை ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் 'ஜே' பிளாட்பாரத்தை பயன்படுத்தி உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. புதிய சிறப்பு வசதிகளாக ட்ரிப்பர் நேவிகேஷன் (திருப்பத்திற்கு திருப்பம் வழி பற்றிய தகவலை வழங்கும் திறன் கொண்டது) மற்றும் ப்ளூடூத் இணைப்பு உள்ளிட்டவை இந்த பைக்கில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இந்த மோட்டார்சைக்கிள யாருக்குதான் பிடிக்காது! Royal Enfield Classic 350 பைக்கை வாங்கிய பிரபல நடிகை! யாருங்க அது?

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில் 349 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் டிஓஎச்சி எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 20.2 பிஎச்பி பவரை 6,100 ஆர்பிஎம்மிலும், 27 என்எம் டார்க்கை 4,000 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறன் கொண்டது. இத்தகைய சிறப்பு திறன் கொண்ட மோட்டார்சைக்கிளையே தனது சொந்த பயன்பாட்டிற்கு நடிகை கிர்தி குல்ஹரி வாங்கியிருக்கின்றார்.

இந்த மோட்டார்சைக்கிள யாருக்குதான் பிடிக்காது! Royal Enfield Classic 350 பைக்கை வாங்கிய பிரபல நடிகை! யாருங்க அது?

இதுபோன்ற மிக சிறப்பான வரவேற்பை இந்த பைக் இருசக்கர வாகன பிரியர்கள் பெற்று வருவதனால் அண்மையில் உற்பத்தியில் புதிய மைல்கல்லை அது எட்டியது. புதிய தலைமுறை கிளாசிக் 350 ஒரு லட்சம் உற்பத்தி என்ற மைல்கல்லையே அது எட்டியது. இப்புதிய தலைமுறை வெர்ஷன் கடந்த செப்டம்பர் மாதத்திலேயே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த மோட்டார்சைக்கிள யாருக்குதான் பிடிக்காது! Royal Enfield Classic 350 பைக்கை வாங்கிய பிரபல நடிகை! யாருங்க அது?

இந்த குறுகிய கால இடைவெளியிலேயே கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் ஒரு லட்சம் உற்பத்தி என்ற எண்ணிக்கையை எட்டியது ஒட்டு மொத்த இருசக்கர வாகன உலகிற்குமே பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த பைக் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளான ஐரோப்பா, தெற்கு ஆசியா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சந்தைகள் சிலவற்றிலும் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இது விற்பனைச் செய்யப்படும் அனைத்து நாடுகளிலும் நல்ல வரவேற்பையே பெற்று வருகின்றது. இதன் விளைவாகவே விற்பனைக்கு வந்த சில மாதங்களிலேயே ஒரு லட்சம் உற்பத்தி என்ற புதிய மைல்கல்லை அது எட்டியது.

Most Read Articles

English summary
Actress kirti kulhari buys royal enfield classic 350
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X