2-வீலர்ஸில் ஏர்பேக்-ஐ பொருத்த தயாராகும் முன்னணி நிறுவனம்!! நடைமுறையில் சாத்தியமாகுமா?

ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார்சைக்கிகளிலும் ஏர்பேக் எனப்படும் காற்றுப்பை முதன்முறையாக அறிமுகப்படுத்த முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்று ஆயத்தமாகி வருகிறது. எந்த நிறுவனம் அது? 2-வீலர்ஸில் ஏர்பேக், இது சாத்தியமா? என்பது போன்ற கேள்விகளுக்கு பதில்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2-வீலர்ஸில் ஏர்பேக்-ஐ பொருத்த தயாராகும் முன்னணி நிறுவனம்!! நடைமுறையில் சாத்தியமாகுமா?

காலம் உருண்டோட ஆட்டோமொபைல் துறையில் பல்வேறான புதுமைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. எந்த அளவிற்கு என்றால், முதல்முறையாக கார் உருவாக்கப்பட்ட காலத்தில் கார்களில் செல்பவர்களை, ஏதோ தமக்கு காயம் ஏற்படுத்த வருபவர்கள் போல நினைத்த மக்களும் இருந்தனர்.

ஆனால் தற்போது காரில் செல்லவில்லை என்றால்தான் கௌரவ குறைச்சல். ஏர்பேக்குகள் கார்களில் முதன்முறையாக பயணிகள் பாதுகாப்பு அம்சமாக அறிமுகப்படுத்தப்பட்ட போது பலத்த வரவேற்பு அனைவரிடத்தில் இருந்தும் கிடைத்தது. தற்போது இந்திய ஆட்டோமொபைல் துறையில் மற்றொரு புதுமையாக இருசக்கர வாகனங்களில் காற்றுப்பையை வழங்க பியாஜியோ க்ரூப் களமிறங்கியுள்ளது.

இதற்காக ஆட்டோலிவ் என்ற ஆட்டோமொபைல் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கும் நிறுவனத்துடன் பியாஜியோ கூட்டணி சேர்ந்துள்ளது. இந்த கூட்டணியின் மூலம் ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களில் ரைடர்களின் பாதுகாப்பை பலப்படுத்த முடியும் என பியாஜியோ க்ரூப் நம்புகிறது. ஏனெனில் இந்த இரு நிறுவனங்கள் இருசக்கர வாகனங்களில் பாதுகாப்பிற்கான ஏர்பேக்குகளை வழங்குவதற்காகவே கூட்டணி சேர்ந்துள்ளன.

2-வீலர்ஸில் ஏர்பேக்-ஐ பொருத்த தயாராகும் முன்னணி நிறுவனம்!! நடைமுறையில் சாத்தியமாகுமா?

மிகவும் மில்லி நொடியில் செயல்படக்கூடியவைகளாக உருவாக்கப்படும் இந்த காற்றுப்பைகள் வாகனத்தின் மேற்புறத்தில், ஹேண்டில்பார் பகுதியில் ஃப்ரேமிற்கு உள் பகுதியில் பொருத்தப்படும் என தெரிகிறது. ஆட்டோலிவ் நிறுவனம் 2-வீலர்ஸில் பொருத்தப்பட உள்ள காற்றுப்பைகளின் சில கான்செப்ட்களை வடிவமைத்து வைத்துள்ளது.

மேலும் அவை எவ்வாறு விபத்தின்போது வாகனத்தில் செயல்படும் என்பதை அதிநவீன கருவிகளுடன் உருவகப்படுத்தி வைத்துள்ள ஆட்டோலிவ் நிறுவனம் வடிவமைக்கப்படும் ஏர்பேக்கிற்கான முழு மோதல் சோதனைகளையும் மேற்கொள்ளவுள்ளது. இதற்கெல்லாம் நீண்ட வருடம் ஆகலாம் என்றாலும், இந்த கூட்டணியில் இருந்து எதிர்காலத்தில் இருசக்கர வாகனங்களுக்கான காற்றுப்பைகள் வெளிவரும் என்பது மட்டும் உறுதி.

நிச்சயம் இந்த வசதி தினந்தோறும் இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவோர்க்கு ஓர் நம்பிக்கையான பயணத்தை வழங்க உதவும். இதுகுறித்து ஆட்டோலிவ் நிறுவனத்தின் சிஇஓ-வும், தலைவருமான மைக்கேல் ப்ராட் கருத்து தெரிவிக்கையில், இந்த கூட்டணியானது, 2030ஆம் ஆண்டுக்குள் வருடத்திற்கு 1 லட்ச உயிர்களை காப்பாற்றும் எங்கள் இலக்கை நோக்கி நாங்கள் எடுத்து வைக்கும் முக்கியமான படியாகும் என்றார்.

2-வீலர்ஸில் ஏர்பேக்-ஐ பொருத்த தயாராகும் முன்னணி நிறுவனம்!! நடைமுறையில் சாத்தியமாகுமா?

தற்போதைக்கு இருசக்கர வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்களாக, ஏபிஎஸ், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் மட்டுமின்றி, சில வாகனங்களில் சறுக்கல்-எதிர்ப்பு ஒழுங்குமுறை (ASR), ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக் அவசரகால அழைப்பு அமைப்புகள் உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன.

இவ்வளவு ஏன், பிரபல இருசக்கர வாகன பிராண்ட்களுள் ஒன்றான ஹோண்டா அதன் விலையுயர்ந்த பைக்குகளின் முன்பக்கத்தில் ரேடார்களை பொருத்தவே ஆரம்பித்துவிட்டது. அந்த அளவிற்கு தொழிற்நுட்ப கண்டுப்பிடிப்புகள் விரிவடைந்துவிட்டதால், இருசக்கர வாகனங்களில் ஏர்பேக் வந்தாலும் பெரியதாக ஆச்சிரியப்படுவதிற்கில்லை.

எப்படியிருந்தாலும், காற்றுப்பை ரைடருக்கு கூடுதல் பாதுகாப்பு அரணாக இருக்கும் என்பது மட்டும் உறுதி. பியாஜியோ க்ரூப் மட்டுமல்ல, மோட்டார்சைக்கிள்களுக்கு காற்றுப்பையை வடிவமைக்க பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பணியாற்றி வருகின்றன. ரேடார்களை பொருத்த ஆரம்பித்திருக்கும் ஹோண்டா கூட ஏர்பேக் தயாரிக்க துவங்கிவிட்டது.

ஹோண்டா வடிவமைத்த ஏர்பேக் ஆனது ரைடரின் முன்னோக்கிய வேகத்தை குறைப்பதாக இருந்தது. இவ்வாறு முயற்சிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தாலும், முதலில் எந்த இருசக்கர வாகனங்களில் காற்றுப்பை வழங்கப்படும் என்பதை தற்போதைக்கு கணிக்க முடியவில்லை. கண்டிப்பாக, இதற்கு நீண்ட வருடம் காத்திருக்க வேண்டியிருக்காது என்றே நினைக்கிறேன். பொறுத்திருந்து பார்ப்போம்.

Most Read Articles
மேலும்... #பியாஜியோ #piaggio
English summary
Airbag for scooters and motorcycles in development, will deploy in milliseconds (Autoliv Airbag).
Story first published: Wednesday, November 10, 2021, 2:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X