புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000 சூப்பர் பைக் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

வடிவமைப்பிலும், தொழில்நுட்பத்திலும் முற்றிலும் புதிய மாடலாக மேம்படுத்தப்பட்டுள்ள சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000 சூப்பர் பைக் உலக அளவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பைக்கின் படங்கள் மற்றும் முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000 சூப்பர் பைக் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

உலக அளவில் 1,000சிசி திறன் கொண்ட நேக்கட் ஸ்ட்ரீட் ஃபைட்டர் ரக பைக் மாடல்களில் சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000 பைக் மிக முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. இதன் ரக சூப்பர் பைக் மாடல்களில், ஓட்டுபவருக்கு சிறந்த உணர்வை தரும் மாடலாகவும் பெயர் பெற்றுள்ளது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு மாற்றங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000 சூப்பர் பைக் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000 பைக்கின் டிசைனில் பல கூடுதல் சிறப்பம்சங்களுடன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. புதிய எல்இடி ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டு இருக்கிறது. முந்தைய மாடலைவிட அளவில் பெரிதாகவும், முரட்டுத்தனமாகவும் காட்சி தரும் பெட்ரோல் டேங்க் பார்ப்போரை சுண்டி இழுக்கிறது.

புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000 சூப்பர் பைக் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

அத்துடன் புதிய விங்லெட் அமைப்பும் இந்த பைக்கிற்கு அதிக வசீகரத்தை கொடுத்துள்ளது. பின்புறத்தில் எல்இடி டெயில் லைட் மற்றும் புதிய சைலென்சர் அமைப்பு ஆகியவையும் பைக்கின் வசீகரத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000 சூப்பர் பைக் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

2021 மாடலாக வெளியிடப்பட்டுள்ள புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000 பைக்கில் அதே 4 சிலிண்டர்கள் கொண்ட 999சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின்தான் தக்க வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த எஞ்சின் பல்வேறு புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000 சூப்பர் பைக் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

இதன் எஞ்சின் தற்போது சுஸுகி இன்டெலிஜென்ட் ரைடு சிஸ்டம் என்ற மின்னணு சாதனத்தின் கட்டுப்பாட்டுடன் இயங்கும் வகையில் மாறி இருக்கிறது. காற்று உட்செலுத்தும் அமைப்பும், சைலென்சர் அமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால், இதன் எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎச்பி பவரையும், 105 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும்.

புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000 சூப்பர் பைக் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

இந்த புதிய எஞ்சினில் வழங்கப்பட்டுள்ள புதிய த்ராட்டில் தொழில்நுட்பம் மூலமாக சிறந்த ஓட்டுதல் அனுபவத்தை பெற இயலும் என்று சுஸுகி கூறுகிறது. இந்த பைக் யூரோ-5/பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் வந்துள்ளது. மூனறு விதமான ரைடிங் மோடுகள், பை-டைரக்ஷனல் குயிக் ஷிஃப்டர் வசதியும் இதன் முக்கிய தொழில்நுட்ப வசதிகளாக இருக்கின்றன.

புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000 சூப்பர் பைக் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000 பைக்கில் ஐந்துவிதமான நிலைகளில் இயங்கும் டிராக்ஷன் கன்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000 சூப்பர் பைக் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000 சூப்பர் பைக் பழைய மாடலைவிட பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களுடன் சிறந்த ஓட்டுதல் தரத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலாவதாக ஐரோப்பிய சந்தையில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த ஆண்டு பிற்பாதியில் இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.13 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

English summary
The new Suzuki GSX-S1000 has just been revealed. Suzuki Motor Corporation has revealed the new 2021 GSX-S1000 naked streetfighter. It is an all-new model with lots of changes including an updated engine, a complete redesign, and several new features. Deliveries of the new model for European markets are expected to begin in June.
Story first published: Tuesday, April 27, 2021, 17:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X