Just In
- 47 min ago
ஒரு முறை சார்ஜ் செஞ்சா 70 கிமீ அசால்டா போகலாம்... 2021 சூப்பர் சோகோ சியூமினி மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்...
- 8 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 9 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 10 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
Don't Miss!
- News
வரலாற்று நிகழ்வு.. இஸ்ரேல் நாட்டிற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் தூதர் பொறுப்பேற்பு
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அதிகரிக்கும் ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை!! 300வது ஷோரூமை இந்தியாவில் திறந்தது!
இந்திய எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஆம்பியர் எலக்ட்ரிக் விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2018ல் இருந்து தயாரிப்புகளை விற்பனை செய்துவரும் ஆம்பியர் நிறுவனம் இதுவரையில் மட்டுமே 75,000க்கும் அதிகமாக தயாரிப்புகளை விற்பனை செய்து அசாத்தியமான காரியத்தை புரிந்துள்ளது.

அதேநேரம் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்டின் டீலர்ஷிப் மையங்களின் எண்ணிக்கை 300ஐ தொட்டுள்ளது. 300ஆவது டீலர்ஷிப் மையம் மஹாராஷ்டிரா மாநிலம் பன்வேல் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகமாக இருந்த நேரத்தில் இருந்து இப்போதுவரையில் மட்டுமே 80 டீலர்ஷிப் மையங்களை ஆம்பியர் நிறுவனம் திறந்துள்ளது. மக்கள் மெல்ல மெல்ல எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க ஆரம்பித்து வருவதால் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை இந்த ஊரடங்கு காலத்தில் நன்றாகவே இருந்து வருகிறது.

மாங்கனீசு ப்ரோ ஸ்கூட்டரினால் ஆம்பியர் நிறுவனத்தின் வணிகமும் பெரிய அளவில் மோசமாக இல்லை. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க விரும்புவோர்களின் தேடல்களில் ஒன்றாக இருக்கும் ஆம்பியர் 20 சதவீத மார்க்கெட் பங்கை மொத்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் பெற்றுள்ளது.

தனிபயன்பாட்டிற்காக வாங்கப்படும் அதே நேரத்தில் பொது போக்குவரத்தில் தனிபட்ட இயக்கத்திற்காகவும் ஆம்பியர் ஸ்கூட்டர்கள் வாங்கப்படுகின்றன. ஆம்பியர் நிறுவனத்தில் சமீபத்தில்தான் சிஇஓ-வாக ராய் குரியன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவரது கொள்கையின்படிதான் இனி ஆம்பியர் பிராண்ட் செயல்படும். எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனையை அதிகரிக்க இந்த நிறுவனத்திடம் கவர்ச்சிகரமான பொருளாதார தேர்வுகள், எளிய மாதத்தவணை திட்டங்கள் உள்ளிட்ட ஏகப்பட்டவை உள்ளன.

இணையம், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு மிக மூல காரணமாக விளங்கியது. அதாவது பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்களது வர்த்தகங்களை இணையம் வழியாகதான் மேற்கொள்கின்றனர்.