டீலர்ஷிப் மையங்களின் எண்ணிக்கையில் 500-ஐ கடந்தது ஆம்பியர்!! வேகமாக வளர்ந்துவரும் எலக்ட்ரிக் வாகன பிராண்ட்

இந்தியாவில் கொண்டுள்ள தொடு-மையங்களின் எண்ணிக்கையில் ஆம்பியர் எலக்ட்ரிக் நிறுவனம் 500-ஐ வெற்றிக்கரமாக கடந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டீலர்ஷிப் மையங்களின் எண்ணிக்கையில் 500-ஐ கடந்தது ஆம்பியர்!! வேகமாக வளர்ந்துவரும் எலக்ட்ரிக் வாகன பிராண்ட்

இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர மற்றும் மூன்றுசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் ஆம்பியரை, க்ரீவ்ஸ் காட்டன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சொந்தமாக கொண்டுள்ளது.

டீலர்ஷிப் மையங்களின் எண்ணிக்கையில் 500-ஐ கடந்தது ஆம்பியர்!! வேகமாக வளர்ந்துவரும் எலக்ட்ரிக் வாகன பிராண்ட்

தற்சமயம் ஆம்பியர் பிராண்டில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்ய 350 டீலர்ஷிப் மையங்களும், எலக்ட்ரிக் ரிக்‌ஷா வாகனங்களுக்கு 165 டீலர்ஷிப்களும் உள்ளன. இந்த வாடிக்கையாளர்கள் தொடு மைய எண்ணிக்கையிலேயே, ஆம்பியர் எலக்ட்ரிக் நிறுவனம் 500-ஐ கடந்துள்ளது.

டீலர்ஷிப் மையங்களின் எண்ணிக்கையில் 500-ஐ கடந்தது ஆம்பியர்!! வேகமாக வளர்ந்துவரும் எலக்ட்ரிக் வாகன பிராண்ட்

எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களாக தற்சமயம் இ-ஸ்கூட்டர்களை மட்டுமே ஆம்பியர் நிறுவனம் விற்பனை செய்தாலும், சில்லறை விற்பனை & ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டிற்காக மட்டுமே மொத்தமாக வாங்குதல் என இரண்டிலும் ஆம்பியரின் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் நன்றாக செயல்படுகின்றன.

டீலர்ஷிப் மையங்களின் எண்ணிக்கையில் 500-ஐ கடந்தது ஆம்பியர்!! வேகமாக வளர்ந்துவரும் எலக்ட்ரிக் வாகன பிராண்ட்

இ-ரிக்‌ஷாக்களையும் கணிசமான எண்ணிக்கையில் மாதந்தோறும் ரிவோல்ட் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. தற்போது தொடு-மையங்களின் எண்ணிக்கையில் 500-ஐ கடந்திருப்பது குறித்து ஆம்பியர் எலக்ட்ரிக் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குனர் ராய் குரியன் கருத்து தெரிவித்துள்ளார்.

டீலர்ஷிப் மையங்களின் எண்ணிக்கையில் 500-ஐ கடந்தது ஆம்பியர்!! வேகமாக வளர்ந்துவரும் எலக்ட்ரிக் வாகன பிராண்ட்

அவர் கூறுகையில், விரிவாக்கப்பட்ட தடம், சிறந்த ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வாடிக்கையாளர் அனுபவம், நிதியளிப்பவர்கள் உடனான கூட்டணி மற்றும் வாடிக்கையாளர் நட்புறவு திட்டங்களையும் நாங்கள் திறம்பட கையாண்டு வருகிறோம்.

டீலர்ஷிப் மையங்களின் எண்ணிக்கையில் 500-ஐ கடந்தது ஆம்பியர்!! வேகமாக வளர்ந்துவரும் எலக்ட்ரிக் வாகன பிராண்ட்

இ-ஸ்கூட்டரை வாங்குபவர்கள், மொத்தமாக வாங்கும் வாடிக்கையாளர்கள் குழு மற்றும் எங்களுக்கு நிதியளிப்பவர்கள் மத்தியில் வழுவான உறுதி மற்றும் மன அமைதியை நாங்கள் மகிழ்ச்சியுடன் உருவாக்குகிறோம். எங்கள் பங்குத்தாரர்களுக்கான முழுமையான வாழ்க்கை சுழற்சி ஆதரவை நாங்கள் தொடர்ந்து வடிவமைப்போம் என்றார்.

டீலர்ஷிப் மையங்களின் எண்ணிக்கையில் 500-ஐ கடந்தது ஆம்பியர்!! வேகமாக வளர்ந்துவரும் எலக்ட்ரிக் வாகன பிராண்ட்

கவர்ச்சிக்கரமான தோற்றத்தால் வாடிக்கையாளர்களை கவர்ந்துவரும் ஆம்பியர் இ-ஸ்கூட்டர்களில் எடை குறைவான லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்கு முழு ஆயுள் உத்தரவாதம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

டீலர்ஷிப் மையங்களின் எண்ணிக்கையில் 500-ஐ கடந்தது ஆம்பியர்!! வேகமாக வளர்ந்துவரும் எலக்ட்ரிக் வாகன பிராண்ட்

ஆம்பியர் இ-ஸ்கூட்டர்கள் சராசரியாக 1 கிமீ தொலைவிற்கு வெறும் 15 பைசா செலவை மட்டுமே ஏற்படுத்தக்கூடியவைகளாக உள்ளன. விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் இ-ஸ்கூட்டர்களை தேவைக்கு ஏற்ப கஸ்டமைஸ்ட் செய்து கொள்ளும் வசதியையும் ஆம்பியர் எலக்ட்ரிக் நிறுவனம் வழங்குகிறது.

Most Read Articles

English summary
Ampere Electric, a wholly owned electric mobility subsidiary of Greaves Cotton Ltd., continues to accelerate its growth with more than 500 customers touch points all across the country, expanding its EV presence even in these turbulent times. Currently Ampere electric offers 350 dealerships in e2W and 165 dealerships from ELE e-rickshaw segment.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X