இந்தியாவில் 400 நகரங்களில் வாடிக்கையாளர்களை பெற்றுள்ள ஆம்பியர்!! விற்பனை 1 லட்சத்தை கடந்தது

ஆம்பியர் எலக்ட்ரின் வாகன பிராண்டை கொண்டுள்ள க்ரீவ்ஸ் காட்டன் லிமிடெட் நிறுவனம் சந்தையில் விற்பனையில் புதிய மைல்கல்லை அடைந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் 400 நகரங்களில் வாடிக்கையாளர்களை பெற்றுள்ள ஆம்பியர்!! விற்பனை 1 லட்சத்தை கடந்தது

க்ரீவ்ஸ் காட்டன் லிமிடெட் நிறுவனம் இந்தியாவில் சுமார் 400 நகரங்களில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இவ்வளவு பெரிய நெட்வொர்க்கை வைத்துள்ளதால் மிக விரைவாகவே தற்போது 1 லட்ச வாடிக்கையாளர்களை க்ரீவ்ஸ் காட்டன் நிறுவனத்தால் பெற முடிந்துள்ளது.

இந்தியாவில் 400 நகரங்களில் வாடிக்கையாளர்களை பெற்றுள்ள ஆம்பியர்!! விற்பனை 1 லட்சத்தை கடந்தது

இந்த இமாலய விற்பனை எண்ணிக்கையை ஆம்பியர் மற்றும் இஎல்இ பிராண்ட்களின் மூலம் இந்த நிறுவனம் சாத்தியமாக்கியுள்ளது. ஆம்பியர் வாகனங்கள் நிறுவனம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 3-சக்கர எலக்ட்ரிக் வாகன நிறுவனமான பெஸ்ட்வே ஏஜென்சிஸியை வாங்கியிருந்தது.

இந்தியாவில் 400 நகரங்களில் வாடிக்கையாளர்களை பெற்றுள்ள ஆம்பியர்!! விற்பனை 1 லட்சத்தை கடந்தது

பெஸ்ட்வே ஏஜென்சியில் 74 சதவீத பங்குகளை ஆம்பியர் கொண்டுள்ளது. இ-ரிக்‌ஷாக்கள் இஎல்இ பிராண்டில் விற்பனை செய்யப்படுகின்றன. அதாவது இந்த மொத்த எண்ணிக்கையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமின்று எலக்ட்ரிக் 3-சக்கர வாகனங்களும் அடங்குகின்றன.

இந்தியாவில் 400 நகரங்களில் வாடிக்கையாளர்களை பெற்றுள்ள ஆம்பியர்!! விற்பனை 1 லட்சத்தை கடந்தது

எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை கடந்த சில வருடங்களில் பெரிய அளவில் முன்னேறி இருப்பதற்கு கொரோனா வைரஸ் பரவலினால் உருவாகியுள்ள அசாதாரண சூழலும் ஒரு காரணமாகும். ஏனெனில் வைரஸ் தொற்று அச்சத்தால் பொதுமக்கள் பலர் பொது பயன்பாட்டு வாகனங்களை பயன்படுத்த பயப்படுகின்றனர்.

இந்தியாவில் 400 நகரங்களில் வாடிக்கையாளர்களை பெற்றுள்ள ஆம்பியர்!! விற்பனை 1 லட்சத்தை கடந்தது

இதுவே அவர்களை தங்களுக்கென சொந்தமாக ஒரு வாகனத்தை வாங்க வைக்கிறது. பெட்ரோல் & டீசல் விலை அதிகரிப்பால் சொந்தமாக எலக்ட்ரிக் வாகனத்தையே வாங்கி கொள்ளலாம் என மக்கள் விரும்புகின்றனர். அதிலும் முக்கியமாக இக்கால இளம் தலைமுறையினர் மத்தியில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவது வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் 400 நகரங்களில் வாடிக்கையாளர்களை பெற்றுள்ள ஆம்பியர்!! விற்பனை 1 லட்சத்தை கடந்தது

அதேநேரம் பைக் டாக்ஸி போன்ற வணிக பயன்பாட்டிற்காகவும் எலக்ட்ரிக் 2 வீலர்ஸ் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன. எரிபொருள் இருசக்கர வாகனங்களை போன்று எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களும் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்றவைகளாக விளங்குகின்றன.

இந்தியாவில் 400 நகரங்களில் வாடிக்கையாளர்களை பெற்றுள்ள ஆம்பியர்!! விற்பனை 1 லட்சத்தை கடந்தது

எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களினால் எரிபொருள் செலவு மிக பெரிய அளவில் மிச்சமாகுவது மட்டுமின்றி, பெரும்பாலும் இ-2வீலர்ஸ் எடை குறைவானவைகளாகவும், வீட்டிலேயே சார்ஜ் செய்து கொள்ளக்கூடியவைகளாகவும் உள்ளதால் வாடிக்கையாளர்கள் பலர் இ-ஸ்கூட்டர்களை வாங்க தயாராகி வருகின்றனர்.

இந்தியாவில் 400 நகரங்களில் வாடிக்கையாளர்களை பெற்றுள்ள ஆம்பியர்!! விற்பனை 1 லட்சத்தை கடந்தது

மத்திய அரசாங்கமும் தனது பங்கிற்கு எலக்ட்ரிக் வாகன விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் ஃபேம்-2 திட்டத்தில் சில திருத்தியமைப்புகளை சமீபத்தில் கொண்டுவந்திருந்தது. இதனால் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான அரசாங்க மானியங்கள் அதிகரித்துள்ளன.

இந்தியாவில் 400 நகரங்களில் வாடிக்கையாளர்களை பெற்றுள்ள ஆம்பியர்!! விற்பனை 1 லட்சத்தை கடந்தது

அதேபோல் சில மாநில அரசாங்கங்களும் மானியங்களை அறிவித்துள்ளதால், குஜராத் போன்ற சில மாநிலங்களில் இ-ஸ்கூட்டர்களின் விலைகள் மிகவும் குறைக்கப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகளும் எலக்ட்ரிக் வாகன விற்பனையில் 1 லட்சம் என்கிற இமாலய எண்ணிக்கையை மிக விரைவாக பெற க்ரீவ்ஸ் காட்டன் நிறுவனத்திற்கு உதவியாக இருந்துள்ளன.

இந்தியாவில் 400 நகரங்களில் வாடிக்கையாளர்களை பெற்றுள்ள ஆம்பியர்!! விற்பனை 1 லட்சத்தை கடந்தது

ஆம்பியர் இந்தியாவில் அதன் வாடிக்கையாளர்கள் தொடு மையத்தை 500-ஆக அதிகரித்து இருந்தது. இதில் இ-ஸ்கூட்டர்களுக்கான 350 டீலர்ஷிப் ஷோரூம்களும், இஎல்இ பிராண்டின் இ-ரிக்‌ஷாக்களுக்கான 165 டீலர்ஷிப் ஷோரூம்களும் அடங்குகின்றன. இதனால் க்ரீவ்ஸ் காட்டன் நிறுவனத்தின் சில்லறை விற்பனை நெட்வொர்க் மிகவும் வலுவானதாகவே விளங்குகின்றது.

இந்தியாவில் 400 நகரங்களில் வாடிக்கையாளர்களை பெற்றுள்ள ஆம்பியர்!! விற்பனை 1 லட்சத்தை கடந்தது

விற்பனை மட்டுமின்றி விற்பனைக்கு பிந்தைய சேவைகளையும் நன்கு பயிற்சி பெற்ற மெக்கானிக்குகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இந்த நிறுவனம் வழங்குகிறது. அத்துடன் சில கூட்டணி நிறுவனங்களின் மூலமாக சில கவர்ச்சிகரமான பொருளாதார திட்டங்களையும் தனது தயாரிப்பு வாகனங்களை வாங்குவோர்க்கு க்ரீவ்ஸ் காட்டன் வழங்குகிறது.

இந்தியாவில் 400 நகரங்களில் வாடிக்கையாளர்களை பெற்றுள்ள ஆம்பியர்!! விற்பனை 1 லட்சத்தை கடந்தது

அடுத்த 10 வருடங்களுக்கு ரூ.700 கோடியை முதலீடு செய்யவுள்ள இந்த நிறுவனம் நமது தமிழகத்தில், ராணிப்பேட்டையில் புதியதாக தொழிற்சாலை ஒன்றை நிறுவி வருகிறது. கிட்டத்தட்ட சுமார் 14 லட்ச சதுர அடியில் உருவாக்கப்பட உள்ள இந்த தொழிற்சாலை ஆனது இந்தியாவின் மிக பெரிய இ-மொபைலிட்டி தயாரிப்பு தொழிற்சாலையாக விளங்கவுள்ளது.

இந்தியாவில் 400 நகரங்களில் வாடிக்கையாளர்களை பெற்றுள்ள ஆம்பியர்!! விற்பனை 1 லட்சத்தை கடந்தது

ஆம்பியர் பிராண்டில் இருந்து தற்சமயம் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் உள்ளன. ஆம்பியர் வி 48, ரெயோ எலைட், ரெயோ, ஜியல், மேக்னஸ் என்பவை இந்த 5 இ-ஸ்கூட்டர்கள் ஆகும். இவற்றின் விலைகள் குறைந்தப்பட்சமாக ரூ.39,021-இல் இருந்து அதிகப்பட்சமாக ரூ.66,159 வரையில் உள்ளன.

Most Read Articles

English summary
Ampere Electric Scooter, EVs Record 1 Lakh Sales Milestone.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X