நாட்டின் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள் எது... இது 2021 ஏப்ரல் மாத லேட்டஸ்ட் ரிப்போர்ட்...

நாட்டின் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள் எது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

நாட்டின் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள் எது... இது 2021 ஏப்ரல் மாத லேட்டஸ்ட் ரிப்போர்ட்...

இந்தியாவில் அதிகம் விற்பனையாகக் கூடிய பைக் எது என்பது பற்றிய தகவல் வெளியாகியிருக்கின்றது. 2021 ஏப்ரல் மாத மோட்டார்சைக்கிள் விற்பனை தரவுகளின் அடிப்படையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இத்துடன், கடந்த மாதத்தில் எந்தெந்த நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் எத்தனை யூனிட்டுகள் வரை விற்பனையாகியிருக்கின்றன என்பது பற்றிய தகவலும் வெளியிடப்பட்டுள்ளன.

நாட்டின் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள் எது... இது 2021 ஏப்ரல் மாத லேட்டஸ்ட் ரிப்போர்ட்...

2021 ஏப்ரல் மாதத்தின்படி நாட்டின் நம்பர் 1 விற்பனையாகும் மோட்டார்சைக்கிள் என்ற பட்டத்தை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பைக் தட்டிச் சென்றிருக்கின்றது. கடந்த சில மாதங்களாக இப்பைக்கே இவ்விடத்தை பிடித்து வருகின்றது.

நாட்டின் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள் எது... இது 2021 ஏப்ரல் மாத லேட்டஸ்ட் ரிப்போர்ட்...

ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 1,93,508 யூனிட் வரை ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனையாகியிருக்கின்றன. இந்த அதிகபட்ச எண்ணிக்கையை வேறு எந்த நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களும் பெறவில்லை.

நாட்டின் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள் எது... இது 2021 ஏப்ரல் மாத லேட்டஸ்ட் ரிப்போர்ட்...

எனவேதான் இந்தியாவின் அதிகம் மற்றும் சிறந்த விற்பனையாகும் பைக்காக ஸ்பிளெண்டர் இருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தை ஹோண்டா நிறுவனத்தின் சிபி ஷைன் பிடித்திருக்கின்றது. ஒட்டுமொத்தமாக 79,416 யூனிட்டுகளை விற்பனைச் செய்து இவ்விடத்தை சிபி ஷைன் பிடித்துள்ளது.

நாட்டின் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள் எது... இது 2021 ஏப்ரல் மாத லேட்டஸ்ட் ரிப்போர்ட்...

ஹோண்டா சிபி ஷைன் பைக்கை அடுத்து மூன்றாம் இடத்திலும் தனது ஆதிக்கத்தை ஹீரோ நிறுவனம் செலுத்தியிருக்கின்றது. இந்நிறுவனத்தின் ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக்கே 3வது இடத்தை பிடித்துள்ளது. 71,294 யூனிட்டுகள் வரை இது விற்பனையாகியிருக்கின்றது.

நாட்டின் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள் எது... இது 2021 ஏப்ரல் மாத லேட்டஸ்ட் ரிப்போர்ட்...

நாட்டின் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள்களின் பட்டியலில் நான்காவது இடத்தை பஜாஜ் பல்சர் பைக் பிடித்துள்ளது. 66,586 யூனிட்டுகள் வரை பஜாஜ் பல்சர் பைக்குகள் விற்பனையாகியிருக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக இருக்கும் ஐந்தாம் இடத்தையும் பஜாஜ் நிறுவனத்தின் தயாரிப்பே பிடித்துள்ளது.

நாட்டின் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள் எது... இது 2021 ஏப்ரல் மாத லேட்டஸ்ட் ரிப்போர்ட்...

பஜாஜின் பிளாட்டினா பைக்கே அவ்விடத்தைப் பிடித்துள்ளது. 2021 ஏப்ரல் மாதத்தில் மட்டும் 35,467 யூனிட்டுகள் வரை இந்த மலிவு விலை பைக் விற்பனையாகியிருக்கின்றது. இதைத் தொடர்ந்து, டிவிஎஸ் அப்பாச்சி பைக் ஆறாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது. 29,458 யூனிட்டுகள் வரை விற்பனைச் செய்து இவ்விடத்தை டிவிஎஸ் அப்பாச்சி பிடித்துள்ளது.

நாட்டின் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள் எது... இது 2021 ஏப்ரல் மாத லேட்டஸ்ட் ரிப்போர்ட்...

அடுத்ததாக இருக்கும் 7வது இடத்தை ஹீரோ கிளாமர் பைக்கும், எட்டாவது இடத்தை ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 பைக்கும் பிடித்திருக்கின்றன. 23,627 யூனிட்டுகள் வரை ஹீரோ கிளாமர் விற்பனையாகியிருக்கின்றது. இதற்கு அடுத்த இடத்தை பிடித்திருக்கும் கிளாசிக் 23,298 யூனிட்டுகள் வரை விற்பனையாகியிருக்கின்றது.

நாட்டின் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள் எது... இது 2021 ஏப்ரல் மாத லேட்டஸ்ட் ரிப்போர்ட்...

மேலும், 9வது இடத்தையும் ஹீரோ நிறுவனத்தின் தயாரிப்பே பிடித்திருக்கின்றது. ஹீரோவின் பேஸன் பைக் இவ்விடத்தைப் பிடித்துள்ளது. 17,748 யூனிட்டுகள் வரை இப்பைக் விற்பனையாகியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. கடைசியாக பத்தாவது இடத்தை ஹோண்டா யூனிகார்ன் பைக் பிடித்துள்ளது.

நாட்டின் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள் எது... இது 2021 ஏப்ரல் மாத லேட்டஸ்ட் ரிப்போர்ட்...

16,602 யூனிட்டுகள் வரை இப்பைக் விற்பனையாகி இருக்கின்றது. இவையே 2021 ஏப்ரல் மாதத்தில் நாட்டில் அதிகம் விற்பனையாகிய டாப் 10 மோட்டார்சைக்கிள்களாகும். இந்த பட்டியலில் பெரும்பாலான இடங்களை ஹீரோ நிறுவனத்தின் தயாரிப்புகள் பிடித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

நாட்டின் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள் எது... இது 2021 ஏப்ரல் மாத லேட்டஸ்ட் ரிப்போர்ட்...

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தயாரிப்புகள் அதிகபட்சமாக 4 இடங்களைப் பிடித்துள்ளது. இதேபோன்று, ஹோண்டா மற்றும் பஜாஜ் தலா இரு இடங்களைப் பிடித்திருக்கின்றன. முந்தைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் 2021 ஏப்ரல் மாதத்தில் குறைந்த அளவிலேயே இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியிருப்பதாக ஆட்டோபண்டிட்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

நாட்டின் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள் எது... இது 2021 ஏப்ரல் மாத லேட்டஸ்ட் ரிப்போர்ட்...

இருசக்கர வாகனங்களின் விற்பனை பற்றிய விபரம்:

வரிசை எண் மாடல் ஏப்ரல் 2021
1 ஹீரோ ஸ்பிளெண்டர் 1,93,508
2 ஹோண்டா சிபி ஷைன் 79,416
3 ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் 71,294
4 பஜாஜ் பல்சர் 66,586
5 பஜாஜ் பிளாட்டினா 35,467
6 டிவிஎஸ் அப்பாச்சி 29,458
7 ஹீரோ கிளாமர் 23,627
8 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 23,298
9 ஹீரோ பேஷன் 17,748
10 ஹோண்டா யூனிகார்ன் 16,602
Most Read Articles

English summary
April 2021 Top 10 Selling Bikes In India. Read In Tamil.
Story first published: Wednesday, May 26, 2021, 17:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X