இந்தியாவில் விற்பனைக்கு வந்தது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Aprilia RS 660... இதோட விலை ரொம்ப அதிகம்!

Aprilia நிறுவனம் அதன் RS 660 பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இப்பைக்கின் விலை மற்றும் பிற முக்கிய விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Aprilia RS 660... இதோட விலை ரொம்ப அதிகம்!

பிரீமியம் தர இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்து வரும் நிறுவனம் Aprilia (அப்ரில்லா). இந்நிறுவனம் இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட RS 660 (ஆர்எஸ் 660) பைக் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இப்பைக்கை நிறுவனம் Completely Built-Up (முழுமையாக கட்டியமைக்கப்பட்ட) வாகனமாக இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Aprilia RS 660... இதோட விலை ரொம்ப அதிகம்!

ஆகையால், இதன் விலை சற்று அதிகமானதாக காட்சியளிக்கின்றது. ரூ. 13.39 லட்சம் என்ற உச்சபட்ச விலை இதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஓர் நடுத்தர எடைக் கொண்ட சூப்பர் ஸ்போர்ட் ரக மோட்டார்சைக்கிள் ஆகும். இப்பைக்கிற்கான புக்கிங்கை நிறுவனம் பிப்ரவரி 2021-லேயே தொடங்கிவிட்டது குறிப்பிடத்தகுந்தது. இதன் டெலிவரி பணிகள் மிக விரைவிலேயே தொடங்கப்பட இருக்கின்றது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Aprilia RS 660... இதோட விலை ரொம்ப அதிகம்!

நிற தேர்வுகள்:

  • ஆசிட் கோல்டு (Acid Gold)
  • அபெக்ஸ் பிளாக் (Apex Black)
  • லாவா ரெட் (Lava Red)
  • எஞ்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் :

    அப்ரில்லா நிறுவனம் ஆர்எஸ்660 பைக்கில் லிக்யூடு கூல்டு, டிஓஎச்சி, பாரல்லல் ட்வின் சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 659 சிசி திறனை வெளியேற்றக் கூடியது. மேலும், இது 10,500 ஆர்பிஎம்மில் 99 பிஎச்பி மற்றும் 8500 ஆர்பிஎம்மில் 67 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

    இந்தியாவில் விற்பனைக்கு வந்தது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Aprilia RS 660... இதோட விலை ரொம்ப அதிகம்!

    இந்த எஞ்ஜின் ஆறு ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப் அசிஸ்ட் க்ளஸ்ட் தொழில்நுட்ப வசதியில் இயங்கும். இத்துடன், அப்ரில்லாவின் பை-டைரக்ஷனல் குயிக் ஷிஃப்டர் வழக்கமான அம்சமாக வழங்கப்படுகின்றது.

    இந்தியாவில் விற்பனைக்கு வந்தது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Aprilia RS 660... இதோட விலை ரொம்ப அதிகம்!

    டிசைன் மற்றும் அம்சங்கள்:

    அப்ரில்லா நிறுவனம் ஆர்எஸ்660 பைக்கை அதன் பிரபல தயாரிப்புகளில் ஒன்றான ஆர்எஸ்வி4 பைக்கை தழுவி உருவாக்கியிருக்கின்றது. ஆகையால், மிகவும் முரட்டுத் தனமான தோற்றத்தில் இப்பைக் காட்சியளிக்கிறது. இத்துடன், ஓர் ரேஸ் ரக பைக்கை போலவும் அது காட்சியளிக்கின்றது.

    இந்தியாவில் விற்பனைக்கு வந்தது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Aprilia RS 660... இதோட விலை ரொம்ப அதிகம்!

    முக்கிய அம்சங்களின் பட்டியலைக் கீழே பார்க்கலாம்:

    • எல்இடி டிஆர்எல்கள் உடன் எல்இடி ஹெட்லேம்ப்
    • எல்இடி வால் பகுதி மின் விளக்கு
    • விண்ட்ஸ்கிரீன்
    • அன்டர்பெல்லி எக்சாஸ்ட்
    • ரேஸ்-ஸ்பெக் மாடலிலான ஹேண்டில் பார்
    • 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட ப்யூவல் டேங்க்
    • இந்தியாவில் விற்பனைக்கு வந்தது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Aprilia RS 660... இதோட விலை ரொம்ப அதிகம்!

      இணைப்பு தொழில்நுட்பம்:

      அப்ரில்லா ஆர்எஸ்660 பைக்கில் 5 அங்குல டிஎஃப்டி திரை வழங்கப்பட்டுள்ளது. இது இரு பிரிவுகளைக் கொண்டிருக்கின்றது. இது செல்போன் இணைப்பு வசதியைக் கொண்டது. இதைக் கொண்டு ஸ்மார்ட் ஃபோனை இணைக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்களை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். மேலும், இதில் மல்டிமீடியா வசதியும் வழங்கப்பட்டிருக்கின்றது.

      இந்தியாவில் விற்பனைக்கு வந்தது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Aprilia RS 660... இதோட விலை ரொம்ப அதிகம்!

      ரைடுக்கான பிற சிறப்பம்சங்கள்:

      • அப்ரில்லா டிராக்சன் கன்ட்ரோல்
      • அப்ரில்லா வீலி கன்ட்ரோல்
      • அப்ரில்லா க்ரூஸ் கன்ட்ரோல்
      • அப்ரில்லா எஞ்ஜின் பிரேக்
      • அப்ரில்லா எஞ்ஜின் மேப்
      • ஏபிஎஸ் வசதி
      • இந்தியாவில் விற்பனைக்கு வந்தது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Aprilia RS 660... இதோட விலை ரொம்ப அதிகம்!

        இந்த மோட்டார்சைக்கிளை அலுமினியம் இரட்டை பீம் சேஸிஸைக் கொண்டு அப்ரில்லா வடிவமைத்திருக்கின்றது. பைக்கின் ஒட்டுமொத்த எடை 185 கிலோ ஆகும். இதன் இருக்கை உயரம் 820 மிமீ ஆகும்.

        இந்தியாவில் விற்பனைக்கு வந்தது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Aprilia RS 660... இதோட விலை ரொம்ப அதிகம்!

        சஸ்பென்ஷன்:

        41 மிமீ கயபா யுஎஸ்டி ஃபோர்க் முன் பக்க வீலிலும், பின் பக்கத்தில் மோனோஷாக் அப்சார்பரும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இரண்டும் அட்ஜெஸ்டபிள் வசதிக் கொண்டவை ஆகும்.

        டயர்:

        முன் பக்க வீலில் 17 இன்சிலான அலாய் மற்றும் 120/70 அளவிலான டயரும், பின் பக்க வீலில் அதே 17 இன்சிலான அலாய் வீல் மற்றும் 180/55 அளவிலான டயர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

        இந்தியாவில் விற்பனைக்கு வந்தது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Aprilia RS 660... இதோட விலை ரொம்ப அதிகம்!

        பிரேக்:

        பைக்கின் முன் பக்க வீலில் 320 மிமீ ட்யூவல் டிஸ்கும், ப்ரெம்போ 4-பாட் ரேடியல் காலிபர்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதேபோல், பின் பக்க வீலில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும், ப்ரெம்போ காலிபர்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆகையால், மிகுந்த சிறந்த பிரேக்கிங் அனுபவத்தை இதன் வாயிலாக பெற முடியும் என்பது உறுதியாக தெரிகின்றது.

Most Read Articles
மேலும்... #அப்ரில்லா #aprilia
English summary
Aprilia launched rs 660 bike in india here is full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X