Just In
- 2 hrs ago
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- 9 hrs ago
பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!
- 11 hrs ago
200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...
- 14 hrs ago
பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு
Don't Miss!
- News
கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஸ்கூட்டருக்கு இப்படி ஒரு விளம்பர வீடியோவா... இத்தாலிய நிறுவனத்தின் செம்ம நடவடிக்கை... எதற்காக தெரியுமா?
"ஸ்கூட்டருக்கு இப்படி ஒரு வீடியோவா" என்று கூறுமளவிற்கு சிறப்பு வீடியோ ஒன்றை இத்தாலியை நாட்டு மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. அது எந்த நிறுவனம், ஸ்கூட்டரின் சிறப்புகள் என்ன என்பதைக் கீழே காணலாம்.

இத்தாலி நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் அப்ரில்லா நிறுவனம் அதன் சமீபத்திய அறிமுகமான அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டருக்கான புதிய விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. இந்த விளம்பர வீடியோ வாயிலாக அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலையே இப்பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

2020ம் ஆண்டில் நடைபெற்ற இந்திய ஆட்டோ எக்ஸ்போவில்தான் எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டரை முதல் முறையாக அப்ரில்லா நிறுவனம் நாட்டில் அறிமுகப்படுத்தியது. இதையடுத்து வெகு நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பின்னர் கடந்த ஆண்டின் டிசம்பர் மாதத்திலேயே ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வந்தது. விரைவில் புக்கிங்கும் தொடங்கப்பட்டன.

இந்த நிலையிலேயே இதன் விற்பனையை அதிகரிக்கச் செய்யும் விதமாக தற்போது புதிய எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டருக்கான விளம்பர வீடியோவை அப்ரில்லா நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. இதற்காக மட்டுமே இவ்வீடியோ வெளியிடப்பட்டிருக்கின்றது. எனவேதான் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்களை வெளிக்காட்டக் கூடிய காட்சிகள் மட்டுமே இவ்வீடியோவில் பெருமளவில் இடம்பெற்றிருக்கின்றது.

எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டரின் விலை ரூ. 1,25,997 ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இந்தியாவிற்காக இந்தியாவிலேயே தயார் செய்யப்பட்ட அப்ரில்லாவின் தயாரிப்பு இதுவாகும். இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருந்தாலும் இது இத்தாலிய டிசைன் தாத்பரியங்களிலேயே உருவாக்கப்பட்டிருக்கின்றது. எனவேதான் கவர்ச்சியான தோற்றம் கொண்ட இருசக்கர வாகனமாக இது இருக்கின்றது.

இந்த ஸ்கூட்டரில் உயரமான விண்ட் ஸ்கிரீன், ட்வின் எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்கள், பெரிய இருக்கை, ஃபெதர் டச் ஸ்விட்ச் கியர், பூட்டிக் கொள்ளக்கூடிய குளோவ் பாக்ஸ், யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட் என எக்கசக்க வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன. இவையனைத்தும்தான் எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டருக்கு கவர்ச்சியான தோற்றத்தைச் சேர்க்கக் கூடிய அம்சங்களாக உள்ளன.

இதுமட்டுமின்றி 5 ஸ்போக்குகள் கொண்ட 12 இன்ச் அலாய் வீல்கள். இதனுடன் எம்ஆர்எஃப் நிறுவனத்தின் ஜேப்பர் டயர்கள் என பல்வேறு சிறப்பு கூறுகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. எனவேதான் இதனை பிரீமியம் தரத்திலான ஸ்கூட்டராக பார்க்கப்படுகின்றது. இதனையே தற்போதைய விளம்பர வீடியோ வெளிக்காட்டுகின்றது. வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இந்த ஸ்கூட்டரில் 160சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், 3 வால்வ், ஏர் கூல்டு மற்றும் ப்யூவல் இன்ஜெக்டட் திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது. இது அதிகபட்சமாக 10.9 எச்பி மற்றும் 11.6 என்எம் டார்க்கை வெளிப்படுத்தக் கூடியது. இது பல்சர் 150க்கு இணையான திறன் ஆகும்.