புதிய டுவோனோ 660 பைக்கின் தோற்றத்தை வெளிக்காட்டியது அப்ரில்லா!! பைக் உண்மையிலேயே செமையா இருக்கு...
அப்ரில்லா நிறுவனம் அதன் புதிய மிடில்வெய்ட் மோட்டார்சைக்கிளான டுவோனோ 660-இன் வீடியோவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பிரபலமான அப்ரில்லா ஆர்எஸ்660 சூப்பர்ஸ்போர்ட் பைக்கின் குடும்பத்தில் இருந்து கொண்டுவரப்படும் புதிய டுவோனோ 660 பைக் ஆர்எஸ்660-ஐ போல் அல்லாமல் பைக்கின் என்ஜின் அமைப்பை தெளிவாக பார்க்க இயலும் விதத்தில் குறைவான கூடுதல் பேனல்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதிலும் தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோ பைக்கின் டிசைன் வளைவுகள் அனைத்தையும் தெள்ள தெளிவாக நமது கண் முன் நிறுத்துகிறது. என்ஜின் உள்பட பெரும்பான்மையான எலக்ட்ரானிக் தொகுப்புகளை ஆர்எஸ்660 பைக்கில் இருந்து பெற்றுவரலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய டுவோனோ 660 பைக்கின் விலை 9,700 கிரேட் பிரட்டன் பவுண்ட் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.9.82 லட்சமாகும். என்ன தான் அதன் என்ஜினை பெற்றிருந்தாலும், என்ஜின் வெளிப்படுத்த கூடிய ஆற்றல் (டுவோனோவில் 95 பிஎச்பி) இரண்டிலும் சற்று வேறுபடும். மற்ற அப்ரில்லா டுவோனோ பைக்குகளை போன்று இந்த புதிய பைக்கின் சேசிஸ் மற்றும் ரன்னிங் கியரும் கிட்டத்தட்ட அதன் ஸ்போர்ட் வெர்சனையே பெரிதும் ஒத்திருக்கும்.

இதன்படி டுவோனோ 660 பைக் சஸ்பென்ஷன், சேசிஸ், ப்ரேக்குகள் மற்றும் ஸ்விங்கார்ம் உள்ளிட்டவற்றை அதன் ஸ்போர்ட் வெர்சனான ஆர்எஸ்660 பைக்கில் இருந்து பகிர்ந்து கொண்டுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் அம்சங்களை பொறுத்தவரையில், டுவோனோ 660 பைக் முழுவதும் நிரப்பட்ட மிடில்-வெய்ட் மோட்டார்சைக்கிளாக வெளிவரவுள்ளது.

ஏனெனில் இந்த பைக்கில் கார்னரிங் ஏபிஎஸ், ட்ராக்ஷன் கண்ட்ரோல், வீலிங் கண்ட்ரோல், ஸ்டாண்டர்ட் அப் & டவுன் குயிக்ஷிஃப்டர், என்ஜின் ப்ரேக் கண்ட்ரோல், 3 ரைடிங் மோட்கள், இரு ட்ராக் மோட்கள் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் என தற்போதைய ஆர்எஸ்660 சூப்பர்ஸ்போர்ட் பைக்கில் வழங்கும் அனைத்து எலக்ட்ரானிக் பாகங்களையும் அப்ரில்லா நிறுவனம் வழங்கும்.

கான்செப்ட் ப்ளாக், இரிடியம் க்ரே மற்றும் புதிய ஆசிட் கோல்ட் என்ற மூன்று விதமான நிறத்தேர்வுகளுடன் விற்பனையை துவங்கவுள்ள அப்ரில்லா டுவோனோ 660 பைக், புதிய 660சிசி இரட்டை ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்படும் இரண்டாவது பைக் மாடலாகும்.

இந்த வரிசையில் மூன்றாவது பைக்காக அப்ரில்லா டுவரெக் 660 இந்த 2021ஆம் ஆண்டின் இறுதியில் வெளியிடப்பட உள்ளது. அப்ரில்லா ஆர்எஸ்660 பைக்குடன் டுவோனோ 660 பைக்கும் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இருந்து இந்திய சந்தையில் விற்பனையை துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








