விரைவில் இந்திய சாலைகளை அலங்கரிக்கவுள்ள புதிய அப்ரில்லா பைக்குகளின் விலைகள் இதுதானா? கசிந்த விபரம்

சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவில் அப்ரில்லா டுவோனோ 660 & ஆர்எஸ்660 பைக்குகளின் முன்பதிவுகள் துவங்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது இந்த பைக்களுக்கு நிர்ணயிக்கப்படவுள்ள எக்ஸ்ஷோரூம் விலைகள் குறித்த விபரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

விரைவில் இந்திய சாலைகளை அலங்கரிக்கவுள்ள புதிய அப்ரில்லா பைக்குகளின் விலைகள் இதுதானா? கசிந்த விபரம்

பிரபலமான இத்தாலியன் மோட்டார்சைக்கிள் பிராண்டான அப்ரில்லா இந்தியாவில் இந்த 2021ஆம் ஆண்டில் டுவோனோ 660 மற்றும் ஆர்எஸ்660 என்ற இரு மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தவுள்ளது.

விரைவில் இந்திய சாலைகளை அலங்கரிக்கவுள்ள புதிய அப்ரில்லா பைக்குகளின் விலைகள் இதுதானா? கசிந்த விபரம்

இருப்பினும் இந்த பைக்குகளின் இந்திய அறிமுக தேதி இதுவரையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இந்த பைக்குகளுக்கான முன்பதிவுகளை இந்திய வாடிக்கையாளர்களிடம் இருந்து ஏற்றுக்கொள்ள அப்ரில்லா நிறுவனம் ஆரம்பித்தது.

விரைவில் இந்திய சாலைகளை அலங்கரிக்கவுள்ள புதிய அப்ரில்லா பைக்குகளின் விலைகள் இதுதானா? கசிந்த விபரம்

இவற்றின் எக்ஸ்ஷோரூம்கள் எப்படியிருந்தாலும் 10 லட்ச ரூபாய்க்கு மேல் தான் நிர்ணயிக்கப்படும் என்றாலும், அவை துல்லியமாக எவ்வளவாக இருக்கும் என்பது கேள்வியாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது அப்ரில்லா டுவோனோ 660 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.13.09 லட்சத்தில் இருந்தும், ஆர்எஸ்660 பைக்கின் விலைகள் ரூ.13.39 லட்சத்தில் இருந்தும் துவங்கும் என இணையத்தில் இதுகுறித்த விபரங்கள் கசிந்துள்ளன.

விரைவில் இந்திய சாலைகளை அலங்கரிக்கவுள்ள புதிய அப்ரில்லா பைக்குகளின் விலைகள் இதுதானா? கசிந்த விபரம்

ஆர்எஸ்660 பைக்கின் விலை ரூ.14 லட்சத்தில் தான் நிர்ணயிக்கப்படும் என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் டுவோனோ 660 பைக்கின் விலை ரூ.10 லட்சம் என்ற அளவில் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில் இதன் விலையும் ரூ.13 லட்சம் அளவில் நிர்ணயிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது சற்று ஏமாற்றத்தை அளிக்கிறது.

விரைவில் இந்திய சாலைகளை அலங்கரிக்கவுள்ள புதிய அப்ரில்லா பைக்குகளின் விலைகள் இதுதானா? கசிந்த விபரம்

இவ்வளவு அதிகமான விலைகளில் இந்த அப்ரில்லா பைக்குகள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ளதற்கு காரணங்களுள் ஒன்று, இவை முழுவதும் தயாரிக்கப்பட்ட நிலையில் (சிபியூ முறையில்) இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

விரைவில் இந்திய சாலைகளை அலங்கரிக்கவுள்ள புதிய அப்ரில்லா பைக்குகளின் விலைகள் இதுதானா? கசிந்த விபரம்

காற்று இயக்கவியலுக்கு மிகவும் இணக்கமானதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக்குகளில், ஒரே ப்ளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், ஆர்எஸ்660 பைக்கை காட்டிலும் டுவோனோ 660-இல் நன்கு சவுகரியான இருக்கை அமைப்பு வழங்கப்படுகிறது.

விரைவில் இந்திய சாலைகளை அலங்கரிக்கவுள்ள புதிய அப்ரில்லா பைக்குகளின் விலைகள் இதுதானா? கசிந்த விபரம்

அட்ஜெஸ்ட் ஆகக்கூடிய வீலிங் கண்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ், என்ஜின் ப்ரேக் கண்ட்ரோல், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் உள்ளிட்டவை அடங்கும் 6-அச்சு ஐஎம்யு போன்ற அட்வான்ஸ்டு எலக்ட்ரானிக்ஸை பெறும் இந்த இரு பைக்குகளிலும் ஒரே மாதிரியான 659சிசி இரட்டை-சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்படுகிறது.

விரைவில் இந்திய சாலைகளை அலங்கரிக்கவுள்ள புதிய அப்ரில்லா பைக்குகளின் விலைகள் இதுதானா? கசிந்த விபரம்

இந்த என்ஜின் ஆர்எஸ் 660 பைக்கில் அதிகப்பட்சமாக 10,500 ஆர்பிஎம்-ல் 99 பிஎச்பி பவரையும், 8,500 ஆர்பிஎம்-ல் 67 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. ஆனால் டுவோனோ 660 பைக்கில் சற்று குறைவாக 99 பிஎச்பி-க்கு பதிலாக 94 பிஎச்பி பவரையே வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #அப்ரில்லா #aprilia
English summary
Aprilia RS660 & Tuono660 India Launched Price Leaked In Online.
Story first published: Thursday, March 11, 2021, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X