அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 125 ஸ்கூட்டருக்கான முன்பதிவு துவங்கியது!! ரூ.5 ஆயிரத்தில் புக் செய்து கொள்ளலாம்...

அப்ரில்லா எஸ்.எக்ஸ்.ஆர் 125 ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை பியாஜியோ க்ரூப் அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 125 ஸ்கூட்டருக்கான முன்பதிவு துவங்கியது!! ரூ.5 ஆயிரத்தில் புக் செய்து கொள்ளலாம்...

சுஸுகி மோட்டார்சைக்கிளின் பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டருக்கு போட்டியாக கொண்டுவரப்படும் இந்த 125சிசி அப்ரில்லா ஸ்கூட்டரின் முன்பதிவிற்கான டோக்கன் தொகையாக ரூ.5,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 125 ஸ்கூட்டருக்கான முன்பதிவு துவங்கியது!! ரூ.5 ஆயிரத்தில் புக் செய்து கொள்ளலாம்...

இந்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட இந்த அப்ரில்லா ஸ்கூட்டரின் வருகை கொரோனா வைரஸ் பரவலினால் தாமதமானது.

அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 125 ஸ்கூட்டருக்கான முன்பதிவு துவங்கியது!! ரூ.5 ஆயிரத்தில் புக் செய்து கொள்ளலாம்...

அறிமுகம் தள்ளிப்போனாலும், முன்பதிவு தற்போது விறுவிறுப்புடன் துவங்கியுள்ளது. இதனால் இன்னும் சில வாரங்களில் அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 125 ஸ்கூட்டரின் டெலிவிரி பணிகள் துவங்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 125 ஸ்கூட்டருக்கான முன்பதிவு துவங்கியது!! ரூ.5 ஆயிரத்தில் புக் செய்து கொள்ளலாம்...

கடந்த டிசம்பர் மாதத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட எஸ்எக்ஸ்ஆர் 160 மேக்ஸி-ஸ்கூட்டரின் அதே டிசைன் மொழியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய 125சிசி மேக்ஸி-ஸ்கூட்டர் எல்இடி டிஆர்எல்களுடன் அப்ரில்லா பிராண்டிற்கே உரிய வடிவில் ஹெட்லேம்ப்பை கொண்டுள்ளது.

அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 125 ஸ்கூட்டருக்கான முன்பதிவு துவங்கியது!! ரூ.5 ஆயிரத்தில் புக் செய்து கொள்ளலாம்...

இதனுடன் பெரிய அளவிலான எதிர்காற்று தடுப்பு கண்ணாடி, எல்இடி டெயில்லைட்கள், அலாய் சக்கரங்கள், பருமனான தோற்றத்தில் எக்ஸாஸ்ட் குழாய் போன்றவற்றை அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 125 ஸ்கூட்டர் பெறுகிறது.

அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 125 ஸ்கூட்டருக்கான முன்பதிவு துவங்கியது!! ரூ.5 ஆயிரத்தில் புக் செய்து கொள்ளலாம்...

முழு டிஜிட்டல் தரத்தில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை ஏற்கும் இந்த ஸ்கூட்டரில் அகலமான இருக்கைகள், ஓட்டுனருக்கு முன்னே இரு க்ளோவ்பாக்ஸ், யுஎஸ்பி சார்ஜர், தேவையான விளக்குடன் இருக்கைக்கு அடியில் சேமிப்பிடம் மற்றும் ப்ளூடூத் மொபைல் இணைப்பு தேர்வு உள்ளிட்டவற்றையும் தயாரிப்பு நிறுவனம் வழங்குகிறது.

அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 125 ஸ்கூட்டருக்கான முன்பதிவு துவங்கியது!! ரூ.5 ஆயிரத்தில் புக் செய்து கொள்ளலாம்...

அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 125 ஸ்கூட்டரில் 125சிசி, சிங்கிள்-சிலிண்டர் ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜின் வழங்கப்பட உள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7,600 ஆர்பிஎம்-ல் 9.3 பிஎச்பி மற்றும் 6,250 ஆர்பிஎம்-ல் 9.2 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 125 ஸ்கூட்டருக்கான முன்பதிவு துவங்கியது!! ரூ.5 ஆயிரத்தில் புக் செய்து கொள்ளலாம்...

சஸ்பென்ஷன் அமைப்பாக ஸ்கூட்டரில் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் இரட்டை-ஷாக் அப்சார்பர் செட்அப்பும் உள்ளது. ப்ரேக்கிங் பணியினை கவனிக்க முன்பக்கத்தில் 220மிமீ-இல் டிஸ்க்கும், பின் சக்கரத்தில் 140மிமீ-இல் ட்ரம் ப்ரேக்கும் வழங்கப்பட உள்ளன.

அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 125 ஸ்கூட்டருக்கான முன்பதிவு துவங்கியது!! ரூ.5 ஆயிரத்தில் புக் செய்து கொள்ளலாம்...

பயணிகளின் கூடுதல் பாதுகாப்பிற்கு இவற்றுடன் இணைக்கப்பட்ட ப்ரேக்கிங் சிஸ்டத்தை (சிபிஎஸ்) இந்த ஸ்கூட்டர் பெற்றுவரவுள்ளது. இதன் 12 இன்ச் அலாய் சக்கரங்களில் ட்யுப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட உள்ளன.

அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 125 ஸ்கூட்டருக்கான முன்பதிவு துவங்கியது!! ரூ.5 ஆயிரத்தில் புக் செய்து கொள்ளலாம்...

7 லிட்டர் கொள்ளளவில் பெட்ரோல் டேங்கை பெற்றுள்ள புதிய எஸ்எக்ஸ்ஆர் 125 ஸ்கூட்டர் மேட் ப்ளாக், பளப்பளப்பான வெள்ளை, மேட் ப்ளூ மற்றும் பளப்பளப்பான சிவப்பு என்ற நான்கு விதமான நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்பட உள்ளது.

Most Read Articles

மேலும்... #அப்ரில்லா #aprilia
English summary
Aprilia SXR 125 Pre-Bookings Begin In India: To Rival Suzuki Burgman Street 125
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X