ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 மேக்ஸி ஸ்கூட்டரின் டெலிவரி தொடங்கியது... வாடிக்கையாளர்கள் உற்சாகம்...

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 மேக்ஸி ஸ்கூட்டரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 மேக்ஸி ஸ்கூட்டரின் டெலிவரி தொடங்கியது... வாடிக்கையாளர்கள் உற்சாகம்...

தனது புதிய மற்றும் பிரீமியம் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் ஏப்ரிலியா வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. எஸ்எக்ஸ்ஆர்160 (Aprilia SXR 160) என பெயரிடப்பட்டுள்ள இது மேக்ஸி ஸ்கூட்டர் ஆகும். தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 மேக்ஸி ஸ்கூட்டருக்கு நேரடி போட்டி என எந்த மாடலும் இல்லை.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 மேக்ஸி ஸ்கூட்டரின் டெலிவரி தொடங்கியது... வாடிக்கையாளர்கள் உற்சாகம்...

எனவே இந்திய சந்தையில் புதிதாக ஒரு செக்மெண்ட்டை ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 மேக்ஸி ஸ்கூட்டர் தற்போது உருவாக்கியுள்ளது. இந்த மேக்ஸி ஸ்கூட்டருக்கு 1.26 லட்ச ரூபாய் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த சூழலில் இந்தியாவில் ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 ஸ்கூட்டரின் டெலிவரி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 மேக்ஸி ஸ்கூட்டரின் டெலிவரி தொடங்கியது... வாடிக்கையாளர்கள் உற்சாகம்...

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 ஸ்கூட்டரின் சாவியை வாடிக்கையாளர்களிடம் டீலர்ஷிப் ஒப்படைக்கும் புகைப்படங்களை Alwaye Motors Vespa பதிவிட்டுள்ளது. கடந்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டுள்ளதை இந்த புகைப்படங்கள் உறுதி செய்துள்ளன.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 மேக்ஸி ஸ்கூட்டரின் டெலிவரி தொடங்கியது... வாடிக்கையாளர்கள் உற்சாகம்...

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 மேக்ஸி ஸ்கூட்டரில், ஏர்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் ப்யூயல்-இன்ஜெக்டட் 160 சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7600 ஆர்பிஎம்மில் 10.8 பிஎச்பி பவரையும், 6000 ஆர்பிஎம்மில் 11.6 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த மேக்ஸி ஸ்கூட்டர் கவர்ச்சிகரமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 மேக்ஸி ஸ்கூட்டரின் டெலிவரி தொடங்கியது... வாடிக்கையாளர்கள் உற்சாகம்...

இந்த ஸ்கூட்டரின் முன்பகுதியில் ஒருங்கிணைந்த எல்இடி டிஆர்எல்கள் உடன் ட்ரிபிள் ஹெட்லேம்ப் செட்அப் இடம்பெற்றுள்ளது. இதுதவிர பெரிய முன் பகுதி அப்ரான், எல்இடி டெயில்லைட்கள், அலாய் வீல்கள் மற்றும் மிரட்டலான தோற்றம் கொண்ட எக்ஸாஸ்ட் அமைப்பு ஆகியவற்றையும் ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 மேக்ஸி ஸ்கூட்டர் பெற்றுள்ளது.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 மேக்ஸி ஸ்கூட்டரின் டெலிவரி தொடங்கியது... வாடிக்கையாளர்கள் உற்சாகம்...

மேலும் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், யுஎஸ்பி சார்ஜிங் ஸ்லாட் ஆகிய வசதிகளும் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஓட்டுபவருக்கும், பின்னால் அமர்ந்து பயணம் செய்பவருக்கும் அகலமான இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சௌகரியமான பயணத்தை இந்த ஸ்கூட்டர் உறுதி செய்யும்.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 மேக்ஸி ஸ்கூட்டரின் டெலிவரி தொடங்கியது... வாடிக்கையாளர்கள் உற்சாகம்...

க்ளோஸி ரெட், மேட் ப்ளூ, க்ளோஸி ஒயிட் மற்றும் மேட் பிளாக் ஆகிய நான்கு வண்ண தேர்வுகளில் ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 மேக்ஸி ஸ்கூட்டர் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டரின் முன் பகுதியில் டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் ட்ரம் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதியும் உள்ளது.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 மேக்ஸி ஸ்கூட்டரின் டெலிவரி தொடங்கியது... வாடிக்கையாளர்கள் உற்சாகம்...

சிறப்பான செயல்திறனுடன் நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற ஒரு ஸ்கூட்டரை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 மேக்ஸி ஸ்கூட்டர் ஏற்றதாக இருக்கும். இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இன்னும் பல்வேறு நிறுவனங்கள் மேக்ஸி ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image Courtesy: Alwaye Motors Vespa

Most Read Articles
மேலும்... #அப்ரிலியா #aprilia
English summary
Aprilia SXR 160 Maxi-scooter Deliveries Commence In India. Read in Tamil
Story first published: Tuesday, January 5, 2021, 23:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X