125சிசி-யில் அப்ரில்லா பைக்குகள்... 2021 ஆர்எஸ்125 & டுவோனோ125 வெளியீடு!! இந்தியாவிற்கு கொண்டுவரப்படுமா?

புதிய ஆர்எஸ்660 மற்றும் டுவோனோ 660 பைக்குகளை தொடர்ந்து சர்வதேச சந்தைகளுக்கான 2021 ஆர்எஸ்125 மற்றும் டுவோனோ 125 பைக்குகளை அப்ரில்லா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவற்றை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

125சிசி-யில் அப்ரில்லா பைக்குகள்... 2021 ஆர்எஸ்125 & டுவோனோ125 வெளியீடு!! இந்தியாவிற்கு கொண்டுவரப்படுமா?

அப்ரில்லாவின் அப்டேட் செய்யப்பட்ட இந்த 125 வரிசை பைக்குகள் விரைவில் விற்பனையை துவங்கவுள்ளன. ஆனால் இந்திய சந்தையை பொறுத்தவரையில், இவற்றின் வருகை இப்போதைக்கு இருக்காது.

125சிசி-யில் அப்ரில்லா பைக்குகள்... 2021 ஆர்எஸ்125 & டுவோனோ125 வெளியீடு!! இந்தியாவிற்கு கொண்டுவரப்படுமா?

ஆர்எஸ்125 மற்றும் டுவோனோ 125 பைக்குகள் இரண்டும் 2021ஆம் ஆண்டிற்காக உடற் பாகங்களில் குறிப்பிடத்தக்க அப்டேட்களை பெற்றுள்ளன. இந்த வகையில் முக்கிய அம்சமாக இந்த பைக்குகளுக்கு புதிய நிறத்தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

125சிசி-யில் அப்ரில்லா பைக்குகள்... 2021 ஆர்எஸ்125 & டுவோனோ125 வெளியீடு!! இந்தியாவிற்கு கொண்டுவரப்படுமா?

இவை பைக்கை மேலும் முரட்டுத்தனமானதாக காட்டுகின்றது. இவற்றின் முந்தைய தலைமுறைகளில் குறை-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டது. ஆனால் இந்த 2021 மாடலில் முழு-டிஜிட்டல் எல்சிடி யூனிட்களாக அவை மாற்றப்பட்டுள்ளன.

125சிசி-யில் அப்ரில்லா பைக்குகள்... 2021 ஆர்எஸ்125 & டுவோனோ125 வெளியீடு!! இந்தியாவிற்கு கொண்டுவரப்படுமா?

இதன் காரணமாக பைக்குகள் மேலும் ப்ரீமியம் தோற்றத்தை பெற்றுள்ளன. அதேபோல் ஆர்எஸ்125 மற்றும் டுவோனோ 125 பைக்குகளில் வழங்கப்படும் 124சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யூடு-கூல்டு என்ஜினும் யூரோ-5க்கு இணக்கமானதாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

125சிசி-யில் அப்ரில்லா பைக்குகள்... 2021 ஆர்எஸ்125 & டுவோனோ125 வெளியீடு!! இந்தியாவிற்கு கொண்டுவரப்படுமா?

அதிகப்பட்சமாக 10,750 ஆர்பிஎம்-இல் 15 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. என்ஜின் அப்கிரேட்களுடன் இந்த 2021 பைக்குகள் அகலமான டயர்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஏபிஎஸ் சிஸ்டத்தையும் பெற்றுள்ளன.

125சிசி-யில் அப்ரில்லா பைக்குகள்... 2021 ஆர்எஸ்125 & டுவோனோ125 வெளியீடு!! இந்தியாவிற்கு கொண்டுவரப்படுமா?

மற்றப்படி சேசிஸ் மற்றும் மற்ற இயந்திர பாகங்கள் அனைத்தும் அப்படியே தொடரப்பட்டுள்ளன. அப்ரில்லா ஆர்எஸ்125 மற்றும் டுவோனோ 125 பைக்குகள் இந்திய சந்தைக்கு கொண்டுவரப்பட வாய்பில்லை என்பதற்கு முக்கிய காரணம் அவற்றின் விலைகள் தான்.

125சிசி-யில் அப்ரில்லா பைக்குகள்... 2021 ஆர்எஸ்125 & டுவோனோ125 வெளியீடு!! இந்தியாவிற்கு கொண்டுவரப்படுமா?

இந்தியாவில் விற்பனையில் இருக்கும் கேடிஎம் 125சிசி பைக்குகளை காட்டிலும் இவற்றின் விலை பல லட்சங்கள் அதிகமாக நிர்ணயிக்கப்பட வேண்டியிருக்கும். ஆனால் ஆர்எஸ்660 மற்றும் டுவோனோ660 பைக்குகளை இந்திய சந்தையில் களமிறக்க அப்ரில்லா தற்சமயம் தயாராகி வருகிறது.

அதேநேரம் கேடிஎம் ஆர்சி390 பைக்கிற்கு போட்டி மாடல் ஒன்றையும் இந்திய சந்தைக்கென வடிவமைத்து வருவதாகவும் முன்னதாக இந்த நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் இந்த பைக் வருவதற்கு நிச்சயம் பல மாதங்கள் ஆகும்.

Most Read Articles

மேலும்... #அப்ரில்லா #aprilia
English summary
Aprilia reveals 2021 RS 125, Tuono 125 for global markets.
Story first published: Thursday, April 29, 2021, 12:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X