Just In
- 1 hr ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 3 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 4 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 4 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- News
கொரோனா தடுப்பூசி இரண்டாம் கட்ட பணிகள்.. இதுவரை 50 லட்சம் பேர் பதிவு
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Lifestyle
ஆரோக்கியத்திற்காக நீங்க சாப்பிடும் இந்த நட்ஸ் வகை உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை!
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒரு வருஷம் யூஸ் பண்ணிட்டேன்... ஏத்தர் 450 மின்சார ஸ்கூட்டர் பற்றி நம்மல்ல ஒருத்தர் என்ன சொல்றாரு பாருங்க!!
ஏத்தர் 450 மின்சார ஸ்கூட்டரை ஒரு வருடம் பயன்படுத்திய பின்னர் அந்த ஸ்கூட்டர் எப்படி இருக்கின்றது என ரிவியூ வீடியோ வெளியிட்டுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

கர்நாடாக மாநிலம், பெங்களூவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஏத்தர். இந்நிறுவனம் மின்சார இருசக்கர வாகனங்களை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. அதிலும், குறிப்பாக இந்த நிறுவனம் ஸ்கூட்டர்களை மட்டுமே தற்போது உற்பத்தி செய்து வருகின்றது.

அந்தவகையில், அது விற்பனைக்கு அறிமுகப்படுத்திய பிரபல மின்சார ஸ்கூட்டர் மாடல்களில் ஏத்தர் 450-யும் ஒன்று. இந்த மின்சார ஸ்கூட்டரை ஒரு வருடம் பயன்படுத்திய பின்னர் ஓர் இளைஞர் அதன் அனுபவங்களை பற்றி வீடியோவாக எடுத்து வெளியிட்டிருக்கின்றார். இதுகுறித்த தகவலையே இப்பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

வீடியோவை டால்கிங் கார்ஸ் எனும் தளத்தின் வாயிலாக இளைஞர் வெளியிட்டிருக்கின்றார். இது ஓர் மலையாள யுட்யூப் சேனல் ஆகும். வீடியோவை வெளியிட்டவரும், ஏத்தர் ஸ்கூட்டரை ஒரு வருடம் பயன்படுத்தி, அந்த வாகனம் பற்றிய தகவலை வெளியிட்ட நபரும் மாலையாளி ஆவார்.

தனது தினசரி மற்றும் தொடர் பயன்பாட்டிற்காகவே இந்த இளைஞர் ஏத்தர் 450 மாடல் மின்சார ஸ்கூட்டரை வாங்கியிருக்கின்றார். தொடர்ந்து, கடந்த ஒரு வருடங்களுக்கும் அதிகமாக அந்த வாகனத்தை அவர் பயன்படுத்தியும் வருகின்றார்.

இந்தநிலையிலேயே தான் எதிர்பார்த்ததையும் விட இவ்வாகனம் வியத்தகு பயன்பாட்டை வழங்கியதை அவர் உணர்ந்திருக்கின்றார். இதனைத் தொடர்ந்தே தனது வாகனத்தை சிறப்பிக்கும் விதமாக டால்கிங் கார்ஸ் யுட்யூப் சேனல் வாயிலாக அதன் சிறப்புகள் பற்றிய தகவலை வெளியிட்டிருக்கின்றார்.

பொதுவாக, மின்வாகனங்கள் என்றாலே நடு வழியில் சார்ஜ் தீர்ந்துவிட்டால் என்னவாகும் என்ற எண்ணமே நம்மில் பலரின் பயமாக இருக்கின்றது. ஆனால், பிளான் போட்டு வாகனத்தைப் பயன்படுத்தினால் சார்ஜ் தீர்ந்துவிடும் என்ற பயமே இல்லாமல் பயணிக்கலாம் என்கிறார் அந்நபர்.

தொடர்ந்து, எரிபொருள் எஞ்ஜின் கொண்ட வாகனத்தைக் காட்டிலும் இதில் லாபம் என்றும் அவர் கூறியிருக்கின்றார். குறிப்பாக, ஏத்தர் 450 மின்சார ஸ்கூட்டரை மிக வேகமாக இயக்காமல், சாதுவான வேகத்தில் இயக்கினால் குறிப்பிடப்பட்ட ரேஞ்ஜை காட்டிலும் அதிக கிமீ தூரம் பயணிக்க முடியும் என கூறுகின்றார்.
அந்தவகையில், 80 கிமீ ரேஞ்ஜைப் பெற்றதாகக் தெரிவிக்கின்றார் அவர். இதற்காக, தன்னுடைய ஓட்டும் ஸ்டைலை மட்டுமே அவர் மாற்றியிருக்கின்றார். மேலும், இந்த வாகனம் பயன்பாட்டில் மட்டுமின்றி உருவத்திலும் மிக கவர்ச்சியானதாக இருப்பதாக கூறுகின்றார்.

இதுமட்டுமின்றி, வாகனத்தின் ஆர்சி சான்று, இன்சூரன்ஸ் மற்றும் லைசென்ஸ் ஆகியவற்றைக் கையில் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். ஏனெனில், இந்த வாகனத்தில் டிஜிட்டல் லாக்கர் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் வாகனத்தின் அனைத்து சான்றுகளையும் டிஜிட்டல் முறையில் சேமித்து வைத்துக் கொள்ள முடியும். இதுபோன்ற பன்முக சிறப்பு வசதிகளை ஏத்தர் 450 ஸ்கூட்டர் தன்னுள் தாங்கியிருக்கின்றது. தொடர்ந்து, இந்த ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கும் திரையின் வாயிலாக கூகுள் மேப் மற்றும் பல்வேறு சிறப்பு வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இத்தகைய சிறப்பு வசதிகளின் காரணத்தினாலயே இந்த மின்சார வாகனத்தை தான் அதிகம் விரும்புவதாக அவர் கூறுகின்றார். மேலும், இந்த வாகனத்தின் பராமரிப்பு செலவும் மிக மிக குறைவு என்றும், இதன் மூலம் நம்முடைய பர்சை வெகுவாக பாதுகாத்துக் கொள்ள முடியும் என அவர் கருத்து தெரிவித்தர்.