எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சமையலறையில் வைத்து சார்ஜ் செய்த இளைஞர்... இந்த நிலைமை யாருக்குமே வரக் கூடாது!

பிரபல நிறுவனத்தின் ஜெனரல் மேனஜர் ஒருவர், அவரது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஐந்தாவது மாடியில் இருக்கும் வீட்டிற்கு லிஃப்ட் வாயிலாக எடுத்துச் சென்று சார்ஜ் செய்திருக்கின்றார். இதற்கான காரணம் என்ன என்பது பற்றிய தகவலை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சமையலறையில் வைத்து சார்ஜ் செய்த இளைஞர்... இந்த நிலைமை யாருக்குமே வரக் கூடாது!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் விஷ் காந்தி. இவர் ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒன்றை பயன்படுத்தி வருகின்றார். இந்த மின்சார வாகனத்தையே அவர், அவரது வீட்டில் உள்ள சமையல் அறையில் வைத்து சார்ஜ் ஏற்றியிருக்கின்றார்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சமையலறையில் வைத்து சார்ஜ் செய்த இளைஞர்... இந்த நிலைமை யாருக்குமே வரக் கூடாது!

இதுகுறித்த புகைப்படமே தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இணைய வாசிகளின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டே இதுகுறித்த படத்தை விஷ் காந்தி தனது லிங்க்ட் இன் வலை தளப்பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார். ஆனால், இதை வெறும் இணையவாசிகளின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு மட்டுமே பகிரவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சமையலறையில் வைத்து சார்ஜ் செய்த இளைஞர்... இந்த நிலைமை யாருக்குமே வரக் கூடாது!

கட்டாயத்தின்பேரால் அவர் இதை செய்திருக்கின்றார். விஷ் காந்தி பெங்களூருவில் உள்ள தனியார் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகின்றார். இந்த குடியிருப்பின் சங்கம் பொது சார்ஜிங் மையத்தை நிறுவ அனுமதிக்கவில்லை. ஆகையால், ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சார்ஜ் செய்ய போதுமான வசதி இல்லா நிலை உருவாகியிருக்கின்றது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சமையலறையில் வைத்து சார்ஜ் செய்த இளைஞர்... இந்த நிலைமை யாருக்குமே வரக் கூடாது!

எனவேதான் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஐந்தாவது மாடியில் இருக்கும் வீட்டிற்கு எடுத்துச் சென்று, அங்கிருக்கும் சமையல் அறையில் வைத்து சார்ஜ் செய்திருக்கின்றார். பொதுவான சார்ஜிங் மையத்தை நிறுவுவதன் வாயிலாக அனைவராலும் பலன் பெற முடியும். குறிப்பாக, பெங்களூரு மின் வழங்கல் துறை இதுபோன்ற பொது சார்ஜிங் மையங்களுக்கு ஒரு யூனிட்டிற்கு ரூ. 5 மட்டுமே கட்டணமாக வசூலிக்கின்றது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சமையலறையில் வைத்து சார்ஜ் செய்த இளைஞர்... இந்த நிலைமை யாருக்குமே வரக் கூடாது!

ஆகையால், இதன் வாயிலாக பலரால் அதிகப்படியான லாபத்தை அனுபவிக்க முடியும். ஆனால், இதுபோன்ற ஓர் சார்ஜிங் மையத்தை உருவாக்க தனது குடியிருப்பு சங்கம் ஒப்புக் கொள்ளவில்லை என விஷ் காந்தி வருத்தம் தெரிவித்திருக்கின்றார். பெங்களூருவில் பொது சார்ஜிங் மையம் அமைக்க இரண்டாயிரம் ரூபாயும், அதற்கு மீட்டருடன் கூடிய இணைப்பு வழங்க ரூ. 11 ஆயிரமும் செலவாகும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சமையலறையில் வைத்து சார்ஜ் செய்த இளைஞர்... இந்த நிலைமை யாருக்குமே வரக் கூடாது!

நான்கு மாதங்களாக சங்கத்துடன் போராடியும் தீர்வு எட்டப்படவில்லை என விஷ் காந்தி கூறியிருக்கின்றார். இவர் ஆட்டோகிரிட் இந்தியா நிறுவனத்தின் தயாரிப்பு மேலாண்மை & ஜிஎம் ஆக பணியாற்றி வருகின்றார். உலகம் முழுவதும் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சமையலறையில் வைத்து சார்ஜ் செய்த இளைஞர்... இந்த நிலைமை யாருக்குமே வரக் கூடாது!

இந்த மாதிரியான நிலையில் பெங்களூருவில் சார்ஜிங் மையம் அமைக்க அனுமதிக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த சம்பவம் இன்னும் பலருக்கு மின் வாகனம் குறித்த விழிப்புணர்வை அரசு வழங்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சமையலறையில் வைத்து சார்ஜ் செய்த இளைஞர்... இந்த நிலைமை யாருக்குமே வரக் கூடாது!

அரசு தற்போது வரை மானியம், வரி சலுகை என பல்வேறு திட்டங்களை மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் மேற்கொண்டு வருகின்றது. இதனால் கடந்த காலத்தைக் காட்டிலும் தற்போது இந்தியாவில் மின் வாகனங்களின் கணிசமாக உயர்ந்திருக்கின்றது. இதை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில் தற்போது சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கைகளை அதிகரிக்கச் செய்யும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகின்றது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சமையலறையில் வைத்து சார்ஜ் செய்த இளைஞர்... இந்த நிலைமை யாருக்குமே வரக் கூடாது!

இதனடிப்படையில் நாட்டின் சில முக்கிய பகுதிகளில், குறிப்பாக, மக்கள் கூடும் பகுதிகளில் சார்ஜிங் மையங்கள் மற்றும் பேட்டரி ஸ்வாப்பிங் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இத்துடன் சார்ஜிங் மையங்கள் இருக்கும் இடத்தைக் கண்டறிய உதவும் ஆப்-களை மாநில அரசுகள் பிரத்யேக பயன்பாட்டிற்குக் கொண்டு வந்த வண்ணம் இருக்கின்றன. இதுபோன்ற தனித்துவமான நடவடிக்கையில் சில தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சமையலறையில் வைத்து சார்ஜ் செய்த இளைஞர்... இந்த நிலைமை யாருக்குமே வரக் கூடாது!

இந்திய சந்தையில் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இந்த நிலையில் மூன்றாவது மாடலாக மலிவு விலையில் ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் அண்மையில் வெளியாகின. அந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெட்ரோலால் இயங்கும் ஆக்டிவா ஸ்கூட்டரைக் காட்டிலும் குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இது விற்பனைக்கு வர இன்னும் பல மாதங்கள் ஆகும் என ஏத்தர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Ather e scooter charges in 5th floor apartment here is why
Story first published: Wednesday, September 8, 2021, 18:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X