Just In
- 2 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 3 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 4 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
- 5 hrs ago
சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... முன்னெப்போதும் இல்லாத வகையில் கார்களை விற்று தள்ளிய எம்ஜி மோட்டார்!
Don't Miss!
- News
ஒட்டுமொத்த நாடும் தேடும் 'அந்த' ஒற்றை நபர்... பிரிட்டனில் பரபரப்பு... காரணம் இதுதான்
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Lifestyle
உங்க திருமண வாழ்க்கை சூப்பராக இருக்கிறது என்பதை உணர்த்தும் உடல் மொழிகள் இதுதானாம்...!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பெங்களூருவில் இருந்து ஓசூருக்கு மாறிய பிரபல மின்வாகன நிறுவனத்தின் உற்பத்தி ஆலை... எந்த நிறுவனம் தெரியுமா?
பிரபல மின் வாகன உற்பத்தி நிறுவனமான ஏத்தர் எனர்ஜி அதன் புதிய மின் வாகன உற்பத்தி ஆலையை தமிழகத்தின் ஓசூரில் தொடங்கியிருக்கின்றது.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஏத்தர் எனர்ஜி. இந்நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்களுக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.-இருப்பினும் குறிப்பிட்ட சில காரணங்களால் நாட்டின் குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே இந்நிறுவனம் மின்சார ஸ்கூட்டர்களை விற்பனைச் செய்து வருகின்றது.

இந்நிலையிலேயே தனது புதிய மின் வாகன உற்பத்தி ஆலையை தமிழகத்தின் ஓசூரில் ஏத்தர் எனர்ஜி அமைத்துள்ளது. முன்னதாக பெங்களூருவின் ஒயிட்ஃபீல்டிலேயே இந்நிறுவனத்தின் உற்பத்தி ஆலை செயல்பட்டு வந்தது. விரிவாக்கம் காரணமாக இதன் ஆலையை தற்போது ஏத்தர் தமிழகத்திற்கு கொண்டு வந்திருக்கின்றது.

கடந்த 2019ம் ஆண்டில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டநிலையில், தற்போது ஆலை முழுமையாக உற்பத்திக்கு தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த புகைப்படம் மற்றும் தகவலை கைடன்ஸ் தமிழ்நாடு (Guidance Tamil Nadu) அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றது.

இந்த ஆலை சுமார் 4 லட்சம் ஏக்கரைக் கொண்ட தயாரிப்பு ஆலை ஆகும். இங்கிருந்தே நாடு முழுவதிற்குமான மின்சார வாகனங்களை ஏத்தர் தயாரித்து விற்பனைச் செய்ய இருக்கின்றது. இதன் வருகைக்கு தமிழக மக்கள் மற்றும் மின் வாகன ஆர்வலர்கள் சிலர் வரவேற்பளித்திருக்கின்றனர்.

இந்த புதிய ஆலையின் மூலம் சுமார் 4,000 பணியாளர்கள் புதிய வேலை வாய்ப்பினை பெற்றிருக்கின்றனர். இதுமட்டுமின்றி, தமிழகத்தின் மின்சார வாகன வளர்ச்சிக்கும் இந்த ஆலையின் வருகை மிகப் பெரிய பங்களிப்பை வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏத்தர் நிறுவனம் இந்தியாவின் குறிப்பிட்ட சில நகரங்களில் தனது மின் வாகனங்களை விற்பனைச் செய்து வருகின்றது.-அந்தவரிசையில் மிக சமீபத்தில் மேலும் சில நகரங்கள் சேர்க்கப்பட்டன. மைசூர், ஹூப்ளி, ஜெய்பூர், இந்தூர், பனாஜி, புபனேஸ்வர், நாசிக், சூரத், சண்டிகர், விஜயவாடா,-விசாகப்பட்டினம், கவுஹாத்தி, நாக்பூர், நொய்டா, லக்னோ மற்றும் சிலிகிரி ஆகிய பகுதிகளிலேயே அறிமுகம் செய்யப்பட்டன.

விடுபட்டிருக்கும் மேலும் சில இரண்டாம் நிலை நகரங்களிலும் மின் வாகனத்தை அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஏத்தர் ஈடுபட்டு வருகின்றது.-அவ்வாறு, புதிய நகரங்களில் கால் தடம் பதிக்கும் மின் வாகன-தேவை அதிகரிக்கும் என்பதனாலயே புதிதாக ஓர் உற்பத்தி ஆலையை தமிழகத்தின் ஓசூரில் ஏத்தர் தொடங்கியிருக்கின்றது.

இந்த புதிய ஆலையின் வாயிலாக ஆண்டு ஒன்றிற்கு 1 லட்சம் மின்சார இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்ய ஏத்தர் எனெர்ஜி திட்டமிட்டிருக்கின்றது. இதனை எதிர்காலத்தில் 5 லட்சங்களாக உயர்த்த அது திட்டமிட்டிருக்கின்றது. நாடு முழுவதும் விற்பனைச் செய்ய இந்த உற்பத்தி திறனே போதுமானது என கூறப்படுகின்றது.

இதுமட்டுமின்றி, விரைவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும்-இந்த உற்பத்தி எண்ணிக்கை பலனளிக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏத்தர் நிறுவனம் தனது உற்பத்தி ஆலை இருக்கும் இடத்தை மாற்றியிருந்தாலும், இதன் கார்பரேட் அலுவலகம் பெங்களூருவிலேயே செயல்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.