Just In
- 3 min ago
எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் காருக்கான முன்பதிவுகள் துவக்கம்!! இந்தியாவின் முதல் செயல்திறன்மிக்க பிஎம்டபிள்யூ கார்..!
- 35 min ago
பிஎஸ்-6 எஞ்சினுடன் விரைவில் வருகிறது ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி... முக்கிய விபரங்கள் வெளியானது
- 2 hrs ago
18 முக்கிய ஆர்டிஓ சேவைகளை இனி வீட்டில் இருந்தே பெறலாம்... கூட்ட நெரிசலை தவிர்க்க மத்திய அரசு அதிரடி!
- 2 hrs ago
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக்கின் விலை குறைவான வேரியண்ட் அறிமுகம்!
Don't Miss!
- Lifestyle
சிவனின் முழு அருளும் கிடைக்கணுமா? அப்ப உங்க ராசிக்கு ஏற்ற சிவ மந்திரத்தை சொல்லுங்க...
- Movies
ராத்திரி நேரத்தில்.. பவித்ரா செய்த வேலை.. தூக்கத்தைத் தொலைத்த ரசிகர்கள்!
- News
சூப்பர் பாமக... தொகுதிப் பங்கீட்டிலும் நம்பர் 1.. தேர்தல் அறிக்கையிலும் முதல் ஆள்.. செம வேகம்!
- Finance
மார்ச் 31க்கு முன் கட்டாயம் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள்..!
- Education
TNPSC 2021: ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கைகான அறிவிப்பு வெளியீடு!
- Sports
மார்க் மை வேர்ட்ஸ்... வரலாற்றிலேயே இதுதான் சிறந்த அணியாக இருக்கும்....சுனில் கவாஸ்கர் உறுதி
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நமது ஓசூரில் திறக்கப்பட்ட ஏத்தரின் புது தொழிற்சாலை!! உள்ளே இவ்வளவு வசதிகள் இருக்கா?
இந்தியாவில் வளர்ந்துவரும் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஏத்தர் வணிகத்தை பெருக்கும் விதமாக தமிழகத்தில் ஓசூரில் புதிய தொழிற்சாலை ஒன்றினை சமீபத்தில் திறந்துள்ளது. அந்த தொழிற்சாலையை சுற்றி பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அதன் மூலம் நாங்கள் அறிந்து கொண்ட விஷயங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

123,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலை மூலப்பொருள் சேமிப்பு, மூலப்பொருட்களின் சோதனை, அசெம்பிள் செய்வதற்கு முந்தைய பகுதி, பேட்டரிக்கான வெப்பநிலை கட்டுப்பாட்டு செல் சேமிப்பு, 37-பே அசெம்பிள் லைன் மற்றும் பேட்டரி உற்பத்தி பகுதி என வெவ்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

அதிகப்பட்சமாக வருடத்திற்கு 1.1 லட்ச எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் 1.2 லட்ச பேட்டரி தொகுப்புகளையும் இந்த தொழிற்சாலையில் தயாரிக்க முடியும். நாங்கள் பார்வை செய்தபோது ஒரு நாளைக்கு 90 ஸ்கூட்டர்கள் தயாரிக்கப்பட்டு அசெம்பிள் செய்யப்படும் அளவில் ஒரே ஷிஃப்டாக தொழிற்சாலை இயங்கி கொண்டிருந்தது.

ஒவ்வொரு 4 நிமிடத்திற்கும் ஒரு ஸ்கூட்டர் முழுவதுமாக தயாரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. ஆனால் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பதற்கு 280 நிமிடங்கள் தேவைப்படுகிறது. மூலப்பொருட்கள் சேமிப்பு இடத்தில் பெரும்பான்மையான பாகங்கள் அனைத்தும் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன.

ஆனால் பேட்டரி செல்கள் மட்டும் கொரியாவில் இருந்து வாங்கப்பட்டுள்ளதாக ஏத்தர் நிறுவனம் கூறுகிறது. ஸ்கூட்டர் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் மூல பொருட்கள் அனைத்தில் இருந்தும் ஒரு மாதிரி எடுக்கப்பட்டு கடுமையான சோதனைகளில் உட்படுத்தப்படுகிறது.

மூல பொருட்கள் சோதிக்கப்பட்டு பின்பு, எலக்ட்ரிக் மோட்டார், பேட்டரி தொகுப்பு, முன்பக்க சஸ்பென்ஷன் மற்றும் டயர்கள் உள்ளிட்டவை ஸ்கூட்டர் உடன் இணைக்கப்படும் பகுதிக்கு அவை அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த இடத்திலேயே பாதி ஸ்கூட்டர் தயாராகிவிடுகிறது.

அதன்பின் அந்த பாதி தயாரான ஸ்கூட்டர்கள் கிட்டத்தட்ட 70 பணியாளர்களை கொண்ட 37-பே அசெம்பிள் லைனிற்கு நகர்த்தப்படுகிறது. இங்கு முழுக்க முழுக்க சோதனை பணிகள் மட்டுமே நடைபெறுகின்றன.

இந்த சோதனைகளில் குறைபாடு உடன் இருக்கும் ஸ்கூட்டர்கள் உடனடியாக பழுதை சரிசெய்யும் இடத்திற்கு அனுப்பப்படுகின்றன. கட்டம்-1இல் தேர்ச்சி பெறும் ஸ்கூட்டர் அடுத்ததாக கட்டம்-2ற்கு அனுப்பப்படுகிறது. இதனையும் கடக்கும் ஸ்கூட்டர்கள் மூன்றாவது சோதனைக்க்குள் நுழைகிறது.

இந்த மூன்றாவது கட்ட சோதனையை ஏத்தர் நிறுவனம், டெலிவிரிக்கு முந்தைய ஆய்வு என அழைகிறது. இதிலும் வெற்றி பெறும் ஸ்கூட்டரை தொழிற்சாலையில் இருக்கும் ரைடர் பொது வெளி சாலையில் சோதனைக்கு ஓட்டி செல்வார்.

ஸ்கூட்டர் அசெம்பிள் லைன் ஒரு புறம் இருக்க பேட்டரி தொகுப்பு தயாரிப்பு லைன் மறுபுறம் இருக்கிறது. இதற்காக இரு தயாரிப்பு லைன்களை இந்த தொழிற்சாலை கொண்டுள்ளது. பேட்டரியை சார்ஜ் செய்தும் சார்ஜை குறைத்தும் நிறுவனம் சோதனை செய்கிறது.

மேலும் இந்த தொழிற்சாலை இணைப்பு தொழிற்நுட்பம் மற்றும் பழுதுநீக்கும் தயாரிப்பு லைன்களுக்காக ஜிரா (JIRA) மென்பொருளையும் பயன்படுத்துகிறது. புகை வெளியேற்றும் பகுதி எதையும் ஏத்தரின் இந்த தொழிற்சாலையில் பார்க்க முடியவில்லை.

அங்கீகரிக்கப்பட்ட மறுசுழற்சியாளர்கள் அனைத்து மின் கழிவுகளையும் கையாளுகின்றனர். மேலும் இன்ஹவுஸ் எஸ்.டி.பி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட நீர் சுழற்சி மற்றும் சுத்திகரிப்பு மற்றும் தோட்டக்கலை ஆகியவற்றால் நீர் வெளியேற்றம் என்பது முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளது.

ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் சிஇஒ-வும், துணை நிறுவனருமான தருண் மெஹ்தா அளித்த பேட்டியில், "இது இதுவரை எங்களுக்கு ஒரு சிறந்த பயணமாக இருந்தது. இந்த தொழிற்சாலையை திறப்பது உண்மையிலேயே ஏத்தருக்கு ஒரு மைல்கல். நுகர்வோர் தேவை பல மடங்காக அதிகரித்துள்ளது, இந்த அதிநவீன தொழிற்சாலை நாடு முழுவதும் உள்ள தேவையை பூர்த்தி செய்யும்" என நம்புவதாக தெரிவித்தார்.

சென்னை, பெங்களூர், மும்பை, புனே, டெல்லி, ஹைதராபாத், கொச்சி, கோயம்புத்தூர், கொல்கத்தா, காலிகட், அகமதாபாத், மைசூர், ஹூப்ளி, ஜெய்ப்பூர், இந்தூர், பனாஜி, புவனேஷ்வர், நாசிக், சூரத், சண்டிகர், விஜயவாடா, விசாகப்பட்டினம், கவுகாத்தி, நாக்பூர், நொய்டா, லக்னோ, மற்றும் சிலிகுரி என 15 மாநிலங்களில் 27 நகரங்களில் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டெலிவிரி செய்யப்பட உள்ளதையும் தயாரிப்பு நிறுவனம் உறுதிப்படுத்தி இருந்தது.

இந்த எண்ணிக்கையை 2021 முடிவதற்குள் 40ஆக அதிகரிக்க ஏத்தர் எனர்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதற்கு இந்த புதிய ஓசூர் தொழிற்சாலை பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.