கடும் சந்தைப் போட்டி... கனெக்ட்டிவிட்டி வசதியை கட்டணமில்லாமல் வழங்கும் ஏத்தர்... அதிரடி அறிவிப்பு

ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களுக்கு கனெக்ட்டிவிட்டி வசதியை கட்டணமில்லாமல் பெறுவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி சலுகை எவ்வளவு காலம் வழங்கப்படுகிறது, இதன் கூடுதல் விபரங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கனெக்ட்டிவிட்டி வசதியை கட்டணமில்லாமல் வழங்கும் ஏத்தர்

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பு மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. இதனால், பெரிய இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமின்றி, இந்த சந்தையில் ஏராளமான புதிய நிறுவனங்களும் களமிறங்கி அசத்தி வருகின்றன. வாடிக்கையாளர்களுக்கு அதி நவீன தொழில்நுட்ப வசதிகள், அட்டகாசமான டிசைன் அம்சங்களுடன் வருவதால், புதிய நிறுவனங்களின் தயாரிப்புகளும் அதிக வரவேற்பை பெற்றுள்ளன.

கனெக்ட்டிவிட்டி வசதியை கட்டணமில்லாமல் வழங்கும் ஏத்தர்

அந்த வகையில், இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் ஏத்தர் நிறுவனம் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது. எனினும், தற்போது ஓலா உள்ளிட்ட பல புதிய நிறுவனங்களும், பெரிய நிறுவனங்களும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் இறங்கி அதிரடி காட்டி வருவதால், ஏத்தர் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் முயற்சிகளில் இறங்கி உள்ளது.

கனெக்ட்டிவிட்டி வசதியை கட்டணமில்லாமல் வழங்கும் ஏத்தர்

இதன்படி, தனது பழைய மற்றும் புதிய ஏத்தர் ஸ்கூட்டர் உரிமையாளர்களுக்கு கனெக்ட்டிவிட்டி வசதியை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. ஏத்தர் 450எக்ஸ், ஏத்தர் 450 ப்ளஸ், ஏத்தர் 450 ஆகிய ஸ்கூட்டர் உரிமையாளர்களுக்கு இந்த கட்டணமில்லா திட்டம் அறிவிக்கப்பட்டுள்லது.

கனெக்ட்டிவிட்டி வசதியை கட்டணமில்லாமல் வழங்கும் ஏத்தர்

வரும் நவம்பர் 15ந் தேதி முதல் அடுத்த ஆண்டு மே 15ந் தேதி வரை தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களுக்கு கனெக்ட்டிவிட்டி வசதியை கட்டணமில்லாமல் வழங்குவதாக ஏத்தர் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏத்தர் கனெக்ட் புரோ என்ற அதிகபட்சமான வசதிகளை அளிக்கும் சந்தா திட்டம் கொண்ட கனெக்ட்டிவிட்டி வசதி கட்டணம் இல்லாமல் வழங்கப்பட உள்ளது.

கனெக்ட்டிவிட்டி வசதியை கட்டணமில்லாமல் வழங்கும் ஏத்தர்

அத்துடன், ஏற்கனவே ஏத்தர் கனெக்ட் லைட் மற்றும் புரோ ஆகிய மாதச் சந்தா திட்டத்திற்கு கட்டணம் செலுத்தியவர்களுக்கும், 6 மாதங்களுக்கான கட்டணம் திரும்ப வழங்கப்படும் என்றும் ஏத்தர் தெரிவித்துள்ளது. கட்டணத்தை திரும்ப வழங்கும் இந்த திட்டத்திற்கு ஒரு சில வாரங்கள் பிடிக்கும் என்று ஏத்தர் தெரிவித்துள்ளது.

கனெக்ட்டிவிட்டி வசதியை கட்டணமில்லாமல் வழங்கும் ஏத்தர்

ஏத்தர் கனெக்ட் புரோ என்ற கனெக்ட்டிவிட்டி வசதி மூலமாக நேவிகேஷன் வசதி, நேரடியாக அப்டேட் பெறும் வசதி, வாகனத்தின் இயக்கம் பற்றிய தகவல்கள், ஓட்டுதல் முறை, வாகன இருப்பிடத்தை நிகழ்நேர முறையில் கண்டறியும் வசதி, சார்ஜ் ஏறும் நிலை குறித்து மொபைல்போன் மூலமாக அறிந்து கொள்வதற்கான வசதி என ஏராளமான வசதிகளை இந்த கனெக்ட்டிவிட்டி வசதி வழங்குகிறது.

கனெக்ட்டிவிட்டி வசதியை கட்டணமில்லாமல் வழங்கும் ஏத்தர்

ஏத்தர் புரோ கனெக்ட்டிவிட்டி வசதிக்கு மூன்று மாதங்களுக்கு ரூ.700 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதனையே தற்போது 6 மாதங்களுக்கு இலவசமாக வழங்க உள்ளதாக ஏத்தர் தெரிவித்துள்ளது. இதன்மூலமாக, ஏத்தர் நிறுவனம் தனது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ரூ.1,400 மதிப்புடைய சந்தாவை இலவசமாக வழங்க உள்ளது.

கனெக்ட்டிவிட்டி வசதியை கட்டணமில்லாமல் வழங்கும் ஏத்தர்

ஏத்தர் நிறுவனம் தற்போது ஏத்தர் 450எக்ஸ் மற்றும் 450 ப்ளஸ் ஆகிய இரண்டு மாடல்களை விற்பனை செய்து வருகிறது. வரும் ஆண்டுகளில் அதிக மாடல்களை கொண்டு வருவதற்கும் திட்டமிட்டுள்ளது. மேலும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 50 நகரங்களில் ஷோரூம்களை திறக்கவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 100 நகரங்களில் வர்த்தகத்தை கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஏத்தர் #ather energy
English summary
Ather Energy to offer connect pro connectivity feature for free to customers for next 6 months.
Story first published: Friday, November 5, 2021, 13:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X