Just In
- 6 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 8 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அதாள பாதாளத்திற்கு செல்லும் பஜாஜின் கமர்ஷியல் வாகன விற்பனை!! ஆனால் மோட்டார்சைக்கிள் ஏற்றுமதி சூடுப்பிடிக்குது!
கடந்த 2021 ஜனவரி மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் உலகளவில் விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. அவற்றை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான பஜாஜ் ஆட்டோ கடந்த ஜனவரி மாதத்தில் மொத்தம் 4,25,199 யூனிட் தயாரிப்பு வாகனங்களை இந்தியா உள்பட உலகளவில் விற்பனை செய்துள்ளது.

அதுவே 2020 ஜனவரி மாதத்தில் இந்த நிறுவனத்தின் 3,94,473 வாகனங்களே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இந்த வகையில் 8 சதவீத வளர்ச்சியை விற்பனையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கண்டுள்ளது.

இந்த மொத்த விற்பனை எண்ணிக்கையில் இந்தியா மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் விற்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் கமர்ஷியல் வாகனங்கள் அடங்குகின்றன. வழக்கமாக இந்தியாவை காட்டிலும் வெளிநாட்டு சந்தைக்களுக்குதான் அதிகளவில் மோட்டார்சைக்கிள்களை பஜாஜ் நிறுவனம் ஏற்றுமதி செய்யும்.

2020 ஜனவரி மாதத்திலும் அவ்வாறுதான் நடந்தது. ஆனால் கடந்த 2021 ஜனவரி மாதத்தில் பஜாஜ் மோட்டார்சைக்கிள்கள் ஏற்றுமதி வழக்கத்தை காட்டிலும் அதிகமாக நடைபெற்றுள்ளதை தற்போது வெளிவந்துள்ள இந்த நிறுவனத்தின் விற்பனை நிலவரங்கள் வெளிக்காட்டுகின்றன.

Particulars | Jan-21 | Jan-20 | Change % |
2-WHEELERS | |||
DOMESTIC | 1,57,404 | 1,57,796 | - |
EXPORTS | 2,27,532 | 1,74,546 | 30 |
SUB-TOTAL | 3,84,936 | 3,32,342 | 16 |
COMMERCIAL VEHICLES | |||
DOMESTIC | 13,353 | 35,076 | -62 |
EXPORTS | 26,910 | 27,055 | -1 |
SUB-TOTAL | 40,263 | 62,131 | -35 |
TOTAL (2-WH + CV) | |||
DOMESTIC | 1,70,757 | 1,92,872 | -11 |
EXPORTS | 2,54,442 | 2,01,601 | 26 |
TOTAL | 4,25,199 | 3,94,473 | 8 |
எந்த அளவிற்கு என்றால் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட பஜாஜ் மோட்டார்சைக்கிள்களுடன் ஒப்பிடுகையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது.

உள்நாட்டு விற்பனையில் 2021 ஜனவரி மாதத்திற்கும் 2020 ஜனவரி மாதத்திற்கும் இடையில் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. ஆனால் வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதி 30 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தமாக (உள்நாட்டு விற்பனை+ ஏற்றுமதி) கடந்த மாதத்தில் 3,84,936 யூனிட் மோட்டார்சைக்கிள்களை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

அதுவே கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரியில் 3,32,342 மோட்டார்சைக்கிள்களை பஜாஜ் விற்றிருந்தது. இந்த வகையில் மோட்டார்சைக்கிள்களின் விற்பனையில் இந்த நிறுவனம் 16 சதவீத முன்னேற்றத்தை கண்டுள்ளது. பஜாஜின் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வழக்கம்போல் பல்சர், சிடி100 மற்றும் டோமினார் பைக்குகள் மூல காரணமாக விளங்கி வருகின்றன.

இதன் காரணமாக பல்சர் என்எஸ்250 மற்றும் ஆர்எஸ்250 பைக்குகளுடன் மொத்த பல்சர் வரிசை பைக்குகளின் புதிய தலைமுறைகளை கொண்டுவர பஜாஜ் நிறுவனம் பணியாற்றி வருகிறது. கமர்ஷியல் வாகனங்களை பொறுத்தவரையில், பஜாஜின் உள்நாட்டு விற்பனை 2020 ஜனவரி உடன் ஒப்பிடுகையில் பெரிய அளவில் குறைந்துள்ளது.

அந்த மாதத்தில் 35,076 பஜாஜ் கமர்ஷியல் வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் கடந்த ஜனவரி மாதத்தில் வெறும் 13,353 கமர்ஷியல் வாகனங்களேயே இந்த நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்த வாகன பிரிவில் வெளிநாட்டு ஏற்றுமதிகளில் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை.

இருப்பினும் உள்நாட்டு விற்பனையில் ஏற்பட்டுள்ள சறுக்கலால் 2020 ஜனவரி உடன் ஒப்பிடுகையில் பஜாஜின் மொத்த கமர்ஷியல் விற்பனை 35 சதவீதம் குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் 2020 ஏப்ரல்- 2021 ஜனவரி மாதங்களுக்கு இடையேயான விற்பனையும் 20 சதவீதம் குறைந்துள்ளது.