250சிசி பல்சர் பைக்கின் தயாரிப்பில் தீவிரமாக பஜாஜ்!! கேடிஎம் 250 ட்யூக் போல் இருக்குமா?

புதிய பஜாஜ் பல்சர் 250 பைக் தயாரிப்பு பணிகளில் இருப்பதை மீண்டும் உறுதி செய்யும் விதத்திலான ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

250சிசி பல்சர் பைக்கின் தயாரிப்பில் தீவிரமாக பஜாஜ்!! கேடிஎம் 250 ட்யூக் போல் இருக்குமா?

பஜாஜ் பல்சர், இந்திய மோட்டார்சைக்கிள் துறையில் தவிர்க்க முடியாத ஒரு பிராண்டாக வளர்ந்திருப்பது மறுக்க முடியாத உண்மை. அதிலும் 4-ஸ்ட்ரோக் என்ஜின்களில் ஆதிக்கம் அதிகமான போது பல்சர் பைக்குகளின் பிரபலமும் அதிகமானது.

250சிசி பல்சர் பைக்கின் தயாரிப்பில் தீவிரமாக பஜாஜ்!! கேடிஎம் 250 ட்யூக் போல் இருக்குமா?

கிட்டத்தட்ட 20 வருடங்களாக விற்பனையில் இருந்தாலும், தற்போதைக்கு 125சிசி-யில் இருந்து அதிகப்பட்சமாகவே 220சிசி வரையில் தான் பல்சர் பைக்குகள் உள்ளன. ஆனால் இந்த நிலை இன்னும் சில காலத்திற்கு தான்.

250சிசி பல்சர் பைக்கின் தயாரிப்பில் தீவிரமாக பஜாஜ்!! கேடிஎம் 250 ட்யூக் போல் இருக்குமா?

ஏனெனில் கேடிஎம் ட்யூக் மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளுக்கு இணையான திறனில் 250சிசி-யில் பல்சர் பைக் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. பஜாஜ் நிறுவனம் பல்சர் வரிசை பைக்குகளுக்காக முற்றிலும் புதிய மலிவான ப்ளாட்ஃபாரத்தை வடிவமைக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருகிறது.

250சிசி பல்சர் பைக்கின் தயாரிப்பில் தீவிரமாக பஜாஜ்!! கேடிஎம் 250 ட்யூக் போல் இருக்குமா?

இந்த ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்படுகின்ற புதிய 250சிசி என்ஜின் கேடிஎம்-சார்ந்த 250சிசி என்ஜின் போல் அல்லாமல் சற்று குறைவான அதிநவீனமாக இருக்கும். அதாவது பஜாஜின் இந்த புதிய 250சிசி என்ஜின் காற்று/ஆயில்-கூல்டு செட்அப்பிற்கு பதிலாக 4-வால்வு செட்அப்-ஐ பெற்றுவரலாம்.

250சிசி பல்சர் பைக்கின் தயாரிப்பில் தீவிரமாக பஜாஜ்!! கேடிஎம் 250 ட்யூக் போல் இருக்குமா?

இதனால் புதிய பஜாஜ் பல்சர் 250 பைக்கின் விலை, கேடிஎம் 250சிசி பைக்குகளை காட்டிலும் சற்று குறைவாகவே எதிர்பார்க்கலாம். அதேநேரம் தற்போதைய பல்சர் 220எஃப் பைக்கிற்கு இணையான தரத்திலும் இதன் என்ஜினை எதிர்பார்க்க முடியாது.

250சிசி பல்சர் பைக்கின் தயாரிப்பில் தீவிரமாக பஜாஜ்!! கேடிஎம் 250 ட்யூக் போல் இருக்குமா?

நிச்சயம் அதனை காட்டிலும் அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் வகையிலேயே பல்சர் 250 என்ஜின் வழங்கப்படும். அதேபோல் புதிய 250சிசி என்ஜின் உடன் புதிய ஃப்ரேமையும் பெற்றுள்ளதை தற்போதைய சோதனை மாதிரியை பைக்வாலே செய்திதளம் மூலம் கிடைத்துள்ள ஸ்பை படங்களில் பார்க்க முடிகிறது.

250சிசி பல்சர் பைக்கின் தயாரிப்பில் தீவிரமாக பஜாஜ் ஆட்டோ!!

விலையை கருத்தில் கொண்டு இந்த 250சிசி பைக்கில் வழக்கமான டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் தான் தொடரப்பட வாய்ப்பிருந்தாலும், பின்பக்க மோனோஷாக் செட்அப்பை பஜாஜ் நிறுவனம் அப்கிரேட் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்.

250சிசி பல்சர் பைக்கின் தயாரிப்பில் தீவிரமாக பஜாஜ் ஆட்டோ!!

முன்பே கூறியதுபோல் பல்சர் வரிசை பைக்குகளில் பஜாஜ் நிறுவனம் மிக முக்கியமான மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இந்த வகையில் புதிய 250சிசி பைக் வெளிவரவுள்ளது நமக்கு தெரிந்துவிட்டது. ஆனால் சிறிய மாற்றத்தை ஏற்கவுள்ள பல்சர் பைக்குகள் என்னென்ன என்பது இன்னும் நமக்கு தெரியவில்லை.

250சிசி பல்சர் பைக்கின் தயாரிப்பில் தீவிரமாக பஜாஜ் ஆட்டோ!!

தற்போதைய பல்சர் 125, 150 மற்றும் 180 பைக்குகளில் தான் இந்த அப்கிரேட்கள் இருக்கும் என்றாலும், பல்சர் 250-ஐ போல் பல்சர் 160, பல்சர் 200 பைக்குகளும் வெளிவருவதற்கு இது சரியான தருணமே. என்எஸ், ஆர்எஸ் வரிசையை பொறுத்தவரையில் விற்பனையில் இருக்கும் என்எஸ்160 பைக்கின் விற்பனை நிச்சயமற்றதாகவே உள்ளது.

Most Read Articles
English summary
Next generation Bajaj Pulsar 250 spotted testing. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X