கல்லா கட்றாங்க... பெட்ரோல் விலை உயர்வால் பஜாஜ் நிறுவனத்திற்கு கொண்டாட்டம்... காரணம் என்னனு தெரியுமா?

பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே வருவது ஒரு வகையில் பஜாஜ் நிறுவனத்திற்கு நன்மையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கல்லா கட்றாங்க... பெட்ரோல் விலை உயர்வால் பஜாஜ் நிறுவனத்திற்கு கொண்டாட்டம்... காரணம் என்னனு தெரியுமா?

இந்தியாவில் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை உயர்ந்து கொண்டே வருகிறது. பஜாஜ் நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் வெறும் 288 சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 642 ஆக உயர்ந்துள்ளது.

கல்லா கட்றாங்க... பெட்ரோல் விலை உயர்வால் பஜாஜ் நிறுவனத்திற்கு கொண்டாட்டம்... காரணம் என்னனு தெரியுமா?

இதன் மூலம் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், விற்பனையில் 123 சதவீதம் என்ற பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், 3 kWh லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 4 kW எலெக்ட்ரிக் மோட்டாரையும், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்றுள்ளது.

கல்லா கட்றாங்க... பெட்ரோல் விலை உயர்வால் பஜாஜ் நிறுவனத்திற்கு கொண்டாட்டம்... காரணம் என்னனு தெரியுமா?

இந்த எலெக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 16 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் என மொத்தம் 2 ரைடிங் மோடுகள் வழங்கப்படுகின்றன. இதில், பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் ஈக்கோ மோடில் அதிகபட்சமாக 95 கிலோ மீட்டர் தூரமும், ஸ்போர்ட் மோடில் அதிகபட்சமாக 85 கிலோ மீட்டர் தூரமும் பயணிக்க முடியும்.

கல்லா கட்றாங்க... பெட்ரோல் விலை உயர்வால் பஜாஜ் நிறுவனத்திற்கு கொண்டாட்டம்... காரணம் என்னனு தெரியுமா?

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு சுமார் 5 மணி நேரம் ஆகும். அதே சமயம் ஒரு மணி நேரத்தில் சுமார் 25 சதவீதம் வரை பேட்டரியை சார்ஜ் செய்து விட முடியும். பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அர்பன் வேரியண்ட்டின் இரண்டு பக்கமும் ட்ரம் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

கல்லா கட்றாங்க... பெட்ரோல் விலை உயர்வால் பஜாஜ் நிறுவனத்திற்கு கொண்டாட்டம்... காரணம் என்னனு தெரியுமா?

அதே நேரத்தில் பிரீமியம் வேரியண்ட்டின் முன் பகுதியில் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் முழு எல்இடி லைட்டிங், ப்ளூடூத் வசதியுடன் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 12 இன்ச் வீல்கள், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் மற்றும் இன்டலிஜென்ட் பிரேக்கிங் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் ஆகிய வசதிகளையும் இது பெற்றுள்ளது.

கல்லா கட்றாங்க... பெட்ரோல் விலை உயர்வால் பஜாஜ் நிறுவனத்திற்கு கொண்டாட்டம்... காரணம் என்னனு தெரியுமா?

தற்போதைய நிலையில் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருடன், பஜாஜ் சேத்தக் நேருக்கு நேராக போட்டியிட்டு வருகிறது. இதுதவிர ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் 450எக்ஸ் மற்றும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ்1 ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடனும் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் போட்டியிட்டு வருகிறது.

கல்லா கட்றாங்க... பெட்ரோல் விலை உயர்வால் பஜாஜ் நிறுவனத்திற்கு கொண்டாட்டம்... காரணம் என்னனு தெரியுமா?

இதில், ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சமீபத்தில்தான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. எனவே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கு ஏற்ப நிறைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் தற்போது விற்பனைக்கு அறிமுகமாகி வருகின்றன.

கல்லா கட்றாங்க... பெட்ரோல் விலை உயர்வால் பஜாஜ் நிறுவனத்திற்கு கொண்டாட்டம்... காரணம் என்னனு தெரியுமா?

பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே செல்வதால், வரும் காலங்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை வெகுவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் பைக்குகளின் விற்பனை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனைதான் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து வருகிறது.

கல்லா கட்றாங்க... பெட்ரோல் விலை உயர்வால் பஜாஜ் நிறுவனத்திற்கு கொண்டாட்டம்... காரணம் என்னனு தெரியுமா?

இந்த நிலைமையும் கூட வரும் காலங்களில் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் நிறைய நிறுவனங்கள் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளன. ராயல் என்பீல்டு நிறுவனம் கூட எலெக்ட்ரிக் பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டு வருகிறது.

கல்லா கட்றாங்க... பெட்ரோல் விலை உயர்வால் பஜாஜ் நிறுவனத்திற்கு கொண்டாட்டம்... காரணம் என்னனு தெரியுமா?

ஆனால் அதற்கு இன்னும் அதிக காலம் ஆகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் நிறைய எலெக்ட்ரிக் கார்களும் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளன. தற்போதைய நிலையில் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எலெக்ட்ரிக் கார்கள் என்றால், அது டாடா அல்ட்ராஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார்கள்தான்.

கல்லா கட்றாங்க... பெட்ரோல் விலை உயர்வால் பஜாஜ் நிறுவனத்திற்கு கொண்டாட்டம்... காரணம் என்னனு தெரியுமா?

இதில், டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார்தான் முதலில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருவதற்கு கொஞ்ச காலம் ஆகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எது எப்படியோ இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன புரட்சி தொடங்கியிருப்பது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
Bajaj chetak electric scooter september 2021 sales report
Story first published: Sunday, October 31, 2021, 22:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X