Just In
- 7 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 8 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 9 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
- 10 hrs ago
சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... முன்னெப்போதும் இல்லாத வகையில் கார்களை விற்று தள்ளிய எம்ஜி மோட்டார்!
Don't Miss!
- News
அமெரிக்கா, பிரேசில், இத்தாலி, ரஷ்யா, இந்தியா ஆகிய ஐந்து நாடுகளில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
பஜாஜின் பிரபலமான மோட்டார்சைக்கிள் மாடல்களுள் ஒன்றான அவென்ஜெர்ஸின் எக்ஸ்ஷோரூம் விலைகள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. அவற்றை பற்றி அட்டவணையுடன் இந்த செய்தியில் பார்ப்போம்.

வருடந்தோறும் அதிகரித்துவரும் வாகன பாகங்களின் விலைகளினால் வழக்கம்போல் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அதன் தயாரிப்புகளின் விலைகளை இந்த 2021 துவக்கத்திலும் அதிகரித்து வருகிறது.

இந்த வகையில் தற்போது பஜாஜ் அவென்ஜெர் 160 ஸ்ட்ரீட் மற்றும் 220 க்ரூஸ் பைக்குகளின் எக்ஸ்ஷோரூம் விலைகள் முறையே ரூ.1,498 மற்றும் ரூ.2,004 உயர்த்தப்பட்டுள்ள. முன்பு அவென்ஜெர் 160 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1,01,094 ஆக இருந்தது.
Model | New Price | Old Price | Difference |
Avenger 160 Street | ₹1,02,592 | ₹1,01,094 | ₹1,498 |
Avenger 220 Cruise | ₹1,24,634 | ₹1,22,360 | ₹2,004 |

அவென்ஜெர் 220 பைக்கின் விலை ரூ.1,22,630ஆக இருந்தது. ஆனால் தற்போது இந்த விலை அதிகரிப்பினால் இவை இரண்டையும் ரூ.1,02,592 மற்றும் ரூ.1,24,634 என்ற விலைகளில்தான் வாங்க முடியும். இந்த விலை உயர்விற்கு ஏற்ப இந்த அவென்ஜெர்ஸ் பைக்குகளில் எந்த அப்கிரேடும் கொண்டுவரப்படவில்லை.

பஜாஜ் அவென்ஜெர் 160 பைக்கிற்கு விற்பனையில் சுஸூகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் இண்ட்ரூடர் 150 பைக் போட்டியாக உள்ளது. விலை அதிகரிக்கப்பட்டிருப்பினும் அவென்ஜெர் 160 ஸ்ட்ரீட் பைக்கிற்கும், 220 க்ரூஸ் மாடலுக்கும் இடையே ரூ.21,000 அளவிலான வித்தியாசம் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

பஜாஜ் அவென்ஜெர் 160 பைக்கில் 160சிசி, ஏர்-கூல்டு, ஃப்யுல் இன்ஜெக்ஷன் என்ஜின் பிஎஸ்6 தரத்தில் வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-ல் 14.79 பிஎச்பி மற்றும் 7,000 ஆர்பிஎம்-ல் 13.7 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

சஸ்பென்ஷன் அமைப்பாக முன்பக்கத்தில் உராய்வை தடுக்கும் புஷ் உடன் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் 5 நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய இரட்டை ஷாக் அப்சார்பரும் வழங்கப்படுகிறது. ப்ரேக்கிங் பணியினை கவனிக்க முன் சக்கரத்தில் 280மிமீ டிஸ்க்கும், பின் சக்கரத்தில் 130மிமீ ட்ரம்மும் பொருத்தப்படுகிறது.

பஜாஜ் அவென்ஜெர் 220 பைக்கில் ஏர்/ஆயில்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர், 219.9சிசி என்ஜின் வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 18.8 பிஎச்பி மற்றும் 17.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

இவ்வாறு பஜாஜ் அவென்ஜெர் பைக்குகளின் விலைகள் அதிகரிக்கப்பட்ட போதிலும், இவைதான் தற்சமயம் இந்தியாவில் கிடைக்கும் மலிவான க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள்களாகும். ஏனெனில் அவென்ஜெர் 160 போட்டி மாடலான சுஸுகி இண்ட்ரூடர் 150 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை கிட்டத்தட்ட ரூ.1.24 லட்சமாகும். இதன் உடன் ஒப்பிடுகையில் அவென்ஜெர் 220 பைக்கின் விலை வெறும் ரூ.2- 3 ஆயிரம் மட்டுமே அதிகமாகும்.