இந்த வருடத்தில் 2வது முறையாக பஜாஜ் டோமினார் பைக்குகளின் விலைகள் அதிகரிப்பு!! இனி இவைதான் புதிய விலைகள்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் டோமினார் 400 & 250 மோட்டார்சைக்கிள்களின் விலைகளை இந்த வருடத்தில் இரண்டாவது முறையாக உயர்த்தியுள்ளது.

இந்த வருடத்தில் 2வது முறையாக பஜாஜ் டோமினார் பைக்குகளின் விலைகள் அதிகரிப்பு!! இனி இவைதான் புதிய விலைகள்

புதிய 2021ஆம் வருடம் துவங்கி இன்னும் 4 மாதங்கள் கூட முழுமையாக முடிவடையாத நிலையில் பஜாஜ் டோமினார் மோட்டார்சைக்கிள்களின் விலைகள் இதுவரையில் ரூ.6,000 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த வருடத்தில் 2வது முறையாக பஜாஜ் டோமினார் பைக்குகளின் விலைகள் அதிகரிப்பு!! இனி இவைதான் புதிய விலைகள்

சில வருடங்களாக 400சிசி-யில் மட்டுமே டோமினார் பைக் விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த வருடத்தில் தான் டோமினார் வரிசையில் புதியதாக 250சிசி பைக்கை பஜாஜ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

இந்த வருடத்தில் 2வது முறையாக பஜாஜ் டோமினார் பைக்குகளின் விலைகள் அதிகரிப்பு!! இனி இவைதான் புதிய விலைகள்

இதில் டோமினார் 400 பைக்கின் விலை தற்போது ரூ.3,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த 400சிசி பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.2 லட்சத்தை கடந்து ரூ.2,02,755 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் 2வது முறையாக பஜாஜ் டோமினார் பைக்குகளின் விலைகள் அதிகரிப்பு!! இனி இவைதான் புதிய விலைகள்

டோமினார் 250 பைக்கின் விலை 3,002 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே இனி இந்த பஜாஜ் 250சிசி பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1,70.720 ஆகும். இதற்கு முன்னர் இவை இரண்டின் விலையும் ஏற்கனவே கூறியதுபோல், கடந்த ஜனவரி மாதத்தில் உயர்த்தப்பட்டு இருந்தன.

இந்த வருடத்தில் 2வது முறையாக பஜாஜ் டோமினார் பைக்குகளின் விலைகள் அதிகரிப்பு!! இனி இவைதான் புதிய விலைகள்

தற்போதைய விலை அதிகரிப்பிற்கு ஏற்ப பைக்கில் எந்தவொரு அப்கிரேடும் வழங்கப்படவில்லை. அதேபோல் இந்த விலை உயர்விற்கான காரணமும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்படவில்லை.

இந்த வருடத்தில் 2வது முறையாக பஜாஜ் டோமினார் பைக்குகளின் விலைகள் அதிகரிப்பு!! இனி இவைதான் புதிய விலைகள்

புதிய நிதியாண்டை பெரும்பான்மையான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விலை அதிகரிப்புடன் துவங்கியுள்ளன. இந்த வகையில் தான் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் டோமினார் பைக்குகளின் விலைகளை உயர்த்தி இருக்கும்.

இந்த வருடத்தில் 2வது முறையாக பஜாஜ் டோமினார் பைக்குகளின் விலைகள் அதிகரிப்பு!! இனி இவைதான் புதிய விலைகள்

ஏனெனில் சமீபத்தில் கூட பிரபலமான பல்சர் பைக்குகளின் விலைகளை இந்த நிறுவனம் அதிகப்படுத்தி இருந்தது. வாகன தயாரிப்பிற்கு தொடர்ச்சியாக அதிகரித்துவரும் செலவினை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இத்தகைய விலை உயர்வுகளுக்கு காரணங்களாக சுட்டி காட்டுகின்றன.

இந்த வருடத்தில் 2வது முறையாக பஜாஜ் டோமினார் பைக்குகளின் விலைகள் அதிகரிப்பு!! இனி இவைதான் புதிய விலைகள்

இரும்பு, அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றின் மதிப்பு வருடத்திற்கு வருடம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று தான். மேலும், இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கமும் இன்னும் குறைந்தப்பாடில்லை. ஏனெனில் இதுவும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சில விதங்களில் பண விரியத்தை ஏற்படுத்துகின்றது.

இந்த வருடத்தில் 2வது முறையாக பஜாஜ் டோமினார் பைக்குகளின் விலைகள் அதிகரிப்பு!! இனி இவைதான் புதிய விலைகள்

பஜாஜ் டோமினாரில் பொருத்தப்படும் 373சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்யுடு-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 8000 ஆர்பிஎம்-இல் 39.4 பிஎச்பி பவரையும், 7000 ஆர்பிஎம்-இல் 35 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த பைக்கில் ட்ரான்ஸ்மிஷனுக்கு ஸ்லிப்-உதவி க்ளட்ச் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

இந்த வருடத்தில் 2வது முறையாக பஜாஜ் டோமினார் பைக்குகளின் விலைகள் அதிகரிப்பு!! இனி இவைதான் புதிய விலைகள்

அதுவே பஜாஜ் டோமினார் 250 பைக்கில் 248சிசி, சிங்கிள்-சிலிண்டர் லிக்யூடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 25 பிஎச்பி மற்றும் 23.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் இணைக்கப்படும் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை.

Most Read Articles

English summary
Bajaj Dominar 400 & 250 Prices Increased For The Second Time This Year, New Prices List.
Story first published: Saturday, April 10, 2021, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X