Just In
- 4 min ago
நமது கோவை, திருச்சியில் விற்பனையை துவங்கிய ஏத்தர்!! 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவிரிகள் துவங்கின
- 8 hrs ago
ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு பெரிய மனசுங்க!! மீட்டியோர் 350 பைக்கில் உத்தரகாண்ட் செல்லும் பெங்களூர் பெண்!
- 12 hrs ago
விபத்தில் சிக்கிய ஆளில்லா இயங்கும் டெஸ்லா கார்!! இருவர் காருக்கு உள்ளேயே கருகி பலி!
- 13 hrs ago
100 கிமீ ரேஞ்ச்.. அசத்தலான புதிய நெக்ஸு எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம்!
Don't Miss!
- News
கொரோனாவை கட்டுப்படுத்த அதி தீவிரம்... நாடு முழுவதும் 73,600 தடுப்பூசி மையங்கள்-12.69 கோடி தடுப்பூசி
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 20.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரப்போகுது…
- Sports
தல... சின்ன தல... ஒவ்வொருத்தரா பெவிலியனுக்கு அனுப்பிய ராஜஸ்தான் பௌலர்... மிகச்சிறப்பு!
- Finance
இனி அமெரிக்க டாப் நிறுவனங்களில் ஈசியா முதலீடு செய்யலாம்.. பேடிஎம்-ன் புதிய சேவை..!
- Movies
காரக் குழம்பு சாப்பிட கனி வீட்டிற்கு சென்ற சிம்பு...வைரலாகும் ஃபோட்டோ
- Education
ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எதிர்பார்த்திராத மிக மிக குறைந்த விலையில் பிளாட்டினா 100 பைக் அறிமுகம்... எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வசதியுடன்...
யாருமே எதிர்பார்த்திராத மிக மிக குறைந்த விலையில் பிளாட்டினா 100 இஎஸ் பைக் நாட்டில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இப்பைக்கில் என்னென்ன சிறப்பு வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன என்பது பற்றிய தகவலை இப்பதிவில் காணலாம்.

பஜாஜ் நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த பைக் மாடல்களில் ஒன்றான பிளாட்டினா 100 பைக்கை புதிய வசதியுடன் நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. எலெக்ட்ரிக் ஸ்டார்ட் (Electric Start) வசதியுடனே அது அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

மேலும், இப்பைக்கில் பிளாட்டினா பிராண்டின் நிரூபிக்கப்பட்ட 'கம்ஃபோர்டெக் தொழில்நுட்பம்' வசதியும் வழங்கப்பட்டிருக்கின்றது. தெளிவாகக் கூற வேண்டுமானால் கரடு-முரடான சாலையில் சென்றாலும்கூட அதிக சிரமத்தை வழங்காத வண்ணம் ஸ்பிரிங்-இன்-ஸ்பிரிங் வசதிக் கொண்ட சஸ்பென்ஷன்கள் இப்பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இது நீண்ட தூர பயணத்தைக்கூட சௌகரியமான மற்றும் அலாதியான பயணமாக மாற்ற உதவும். இத்துடன், ட்யூப்லெஸ் டயர் இப்பைக்கில் சிறந்த இயக்கத்திற்காக வழங்கப்பட்டிருக்கின்றது. இது பாதுகாப்பான மற்றும் பஞ்சரில்லா பயணத்தை வழங்க உதவும்.

பஜாஜ் நிறுவனம் இந்த பைக்கில் 102சிசி திறன் கொண் 4 ஸ்ட்ரோக், சிங்கிள் சிலிண்டர், எஸ்ஓஎச்சி, ஏர் கூல்டு எஞ்ஜினையே பயன்படுத்தியிருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்மில் 7.9 பிஎஸ் பவரையும், 5500 ஆர்பிஎம்மில் 8.34 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டது.

இந்த எஞ்ஜின் 4 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்குகின்றது. பைக்கின் கவர்ச்சியான தோற்றத்திற்காக இரு விதமான நிற தேர்வுகளை பஜாஜ் வழங்குகின்றது. காக்டெயில் ஒயின் சிவப்பு மற்றும் இபோனி கருப்பு (வெள்ளி நிறத்திலான ஸ்டிக்கர்களுடன்) ஆகிய இரு விதமான நிறத்தேர்விலேயே பஜாஜ் பிளாட்டினா 100 இஎஸ் பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர பைக்கின் சிறந்த லுக்கிற்காக துள்ளியமான பார்வை திறனை வழங்கக்கூடிய பின்பக்கத்தைப் பார்க்க உதவும் கண்ணாடிகள் மற்றும் முன் பக்கத்தில் பகல் நேர எல்இடி மின் விளக்குகள் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற ஏராளமான அம்சங்கள் இப்பைக்கில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

பைக்கின் அறிமுகத்தைத் தொடர்ந்து நாட்டின் அனைத்து டீலர்களிடத்திலும் இப்பைக்கை விற்பனைக்காகக் கொண்டு சேர்த்து வருகின்றது பஜாஜ் நிறுவனம். ஆகையால், அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடத்தில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வசதிக் கொண்ட இப்பைக்கை இனி எளிதில் காண மற்றும் வாங்க முடியும்.

தொடர்ந்து, அறிமுக விலையாக பைக்கிற்கு ரூ. 53,920 என்ற மிக குறைந்த விலையையே நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இது, டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும். தினசரி மற்றும் மைலேஜை அதிகம் விரும்பும் வாகன ஓட்டிகளின் தேர்வில் ஒன்றாக இப்பைக் இருக்கின்றது. இப்பைக்கில் கிக் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வசதியை நிறுவனம் அறிமுகம் செய்திருப்பது இளைஞர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

பஜாஜ் பிளாட்டினா 100 எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பைக்கில் இடம் பெற்றிருக்கும் முக்கிய அம்சங்களின் பட்டியல்:
- நீளமான இருக்கை
- கிக் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வசதி
- ஸ்டைலான அலாய் வீல்
- ஸ்மூத் மற்றும் சத்தமே இல்லாத இயக்கம்
- 20சதவீத நீளமான முன் மற்றும் பின்பக்க சஸ்பென்ஷன்கள்
- ட்யூப்லெஸ் டயர்கள்
- பெரிய ரப்பர் கால் வைக்கும் பேட்க்ள்
- எல்இடி டிஆல்எல் ஹெட்லேம்ப்