இப்போது சென்னை வாசிகளும் Bajaj Chetak இ-ஸ்கூட்டரை புக் செய்யலாம்... ரொம்ப நாள் காத்திருப்பிற்கு முற்று புள்ளி!

Bajaj Chetak இ-ஸ்கூட்டரை சென்னை வாசிகளும் புக் செய்து கொள்ளலாம் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இ-ஸ்கூட்டர்குறித்த முழு விபரத்தையும் இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

இப்போது சென்னை வாசிகளும் Bajaj Chetak இ-ஸ்கூட்டரை புக் செய்யலாம்... ரொம்ப நாள் காத்திருப்பிற்கு முற்று புள்ளி!!

இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் Bajaj (பஜாஜ்) நிறுவனம், வெகு நீண்ட நாட்களுக்கு பிறகு ஸ்கூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது. Chetak எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பிலேயே நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருகின்றது. இதனை நாட்டின் குறிப்பிட்ட சில மாநிலங்களின் முக்கிய நகரங்களில் மட்டுமே நிறுவனம் விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

இப்போது சென்னை வாசிகளும் Bajaj Chetak இ-ஸ்கூட்டரை புக் செய்யலாம்... ரொம்ப நாள் காத்திருப்பிற்கு முற்று புள்ளி!!

இந்த நிலையை மாற்றியமைக்கும் வகையில் மேலும் சில முக்கிய நகரங்களில் பஜாஜ் சேத்தக்கை விற்பனைக்குக் களமிறக்கும் பணியில் பஜாஜ் தற்போது ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், புதிதாக சென்னை மற்றும் ஹைதராபாத்தில் சேத்தக்கிற்கான புக்கிங் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

இப்போது சென்னை வாசிகளும் Bajaj Chetak இ-ஸ்கூட்டரை புக் செய்யலாம்... ரொம்ப நாள் காத்திருப்பிற்கு முற்று புள்ளி!!

முன்னதாக புனே, நாக்பூர், பெங்களூரு, அவுரங்காபாத், மைசூர் மற்றும் மங்களூரு ஆகிய ஆறு நகரங்களில் மட்டுமே பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைத்து வந்த நிலையில் தற்போது மேலும் இரு நகரங்களில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டிருக்கின்றது. விற்பனை வர்த்தகத்தை விரிவாக்கும் செய்யும் நோக்கில் இரு புதிய நகரங்களில் சேத்தக்கின் விற்பனை தொடங்கப்பட்டிருக்கின்றது.

இப்போது சென்னை வாசிகளும் Bajaj Chetak இ-ஸ்கூட்டரை புக் செய்யலாம்... ரொம்ப நாள் காத்திருப்பிற்கு முற்று புள்ளி!!

பஜாஜ் சேத்தக்கிற்கான புக்கிங் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. முன்பதிவிற்கு ரூ. 2,000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனடிப்படையிலேயே புக்கிங் செய்யப்படுகின்றது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கான நிறம், வேரியண்ட் மற்றும் அருகாமையில் இருக்கும் விற்பனையாளர் ஆகிய அனைத்தையும் அவர்களே தேர்வு செய்துகொள்ள வேண்டும்.

இப்போது சென்னை வாசிகளும் Bajaj Chetak இ-ஸ்கூட்டரை புக் செய்யலாம்... ரொம்ப நாள் காத்திருப்பிற்கு முற்று புள்ளி!!

அனைத்து தகவல்களும் வழங்கிய செய்த பின்னர் முன் தொகை செலுத்த வேண்டும். இவையனைத்தும் வெற்றி கரமாக நடைபெற்ற பின்னர் உரிய வாடிக்கையாளருக்கான சேத்தக் ஆர்டர் உறுதி செய்யப்படும். பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வரையில் மட்டுமே விற்பனைச் செய்யப்பட இருக்கின்றது. ஒவ்வொரு லாட்டாக அவை விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இப்போது சென்னை வாசிகளும் Bajaj Chetak இ-ஸ்கூட்டரை புக் செய்யலாம்... ரொம்ப நாள் காத்திருப்பிற்கு முற்று புள்ளி!!

ஆகையால், விற்பனைக்கு ஒதுக்கப்பட்ட யூனிட்டுகள் அனைத்திற்கும் புக்கிங் கிடைக்குமானால் தற்காலிகமாக புக்கிங் பணிகளை பஜாஜ் நிறுத்திவிடும். சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.8kW எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மின் மோட்டார் 5.4 பிஎச்பி மற்றும் 16.2 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

இப்போது சென்னை வாசிகளும் Bajaj Chetak இ-ஸ்கூட்டரை புக் செய்யலாம்... ரொம்ப நாள் காத்திருப்பிற்கு முற்று புள்ளி!!

இந்த மின் மோட்டாருக்கு தேவையான மின்சாரத்தை 3kWh IP67 ரேடட் லித்தியம் அயன் பேட்டரி வழங்கும். ஒற்றை முழுமையான சார்ஜில் 90 கிமீ வரையிலான ரேஞ்ஜை இந்த பேட்டரி வழங்கும். ஈகோ மோடில் வைத்து இயக்கினால் மட்டுமே இந்த ரேஞ்ஜை நம்மால் பெற முடியும். இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரங்களே போதுமானது.

இப்போது சென்னை வாசிகளும் Bajaj Chetak இ-ஸ்கூட்டரை புக் செய்யலாம்... ரொம்ப நாள் காத்திருப்பிற்கு முற்று புள்ளி!!

பஜாஜ் சேத்தக் ஓர் பிரீமியம் தர எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இதில் ரிவர்ஸ் அசிஸ்ட் மோட், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் வதி, ஐபிஎம்எஸ் (Intelligent Battery Management System), எல்இடி மின் விளக்குகள், யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட் மற்றும் ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் ஆகிய வசதிகள் இந்த ஸ்கூட்டரில் இடம் பெற்றிருக்கின்றன.

இப்போது சென்னை வாசிகளும் Bajaj Chetak இ-ஸ்கூட்டரை புக் செய்யலாம்... ரொம்ப நாள் காத்திருப்பிற்கு முற்று புள்ளி!!

பஜாஜ் சேத்தக் அர்பன் மற்றும் பிரீமியம் என இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ரூ. 1.41 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்துடன், இளஞ்சிவப்பு, நீலம், கருப்பு, சிவப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை ஆகிய பன்முக நிற தேர்விலும் சேத்தக் விற்பனைக்குக் கிடைக்கிறது.

Most Read Articles

English summary
Bajaj opens chetak electric scooter bookings in chennai
Story first published: Saturday, September 4, 2021, 17:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X