பல்சர் 150 பைக்கை இந்த நிறத்தில் நிச்சயமாக பார்த்திருக்க மாட்டீர்கள்!! விரைவில் விற்பனைக்கு வருகிறதாம்...

2021 பஜாஜ் பல்சர் 150 பைக் ஒன்று புதிய வெள்ளை நிறத்தில் டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றை வந்தடைந்துள்ளது. இது தொடர்பான வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பல்சர் 150 பைக்கை இந்த நிறத்தில் நிச்சயமாக பார்த்திருக்க மாட்டீர்கள்!! விரைவில் விற்பனைக்கு வருகிறதாம்...

இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள்களுள் ஒன்றான பல்சர் 150 பைக்கை புதிய வெள்ளை நிறத்தில் அறிமுகம் செய்ய பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது.

பல்சர் 150 பைக்கை இந்த நிறத்தில் நிச்சயமாக பார்த்திருக்க மாட்டீர்கள்!! விரைவில் விற்பனைக்கு வருகிறதாம்...

இதன் ஒரு பகுதியாகவே தற்போது புதிய வெள்ளை நிறத்தில் பல்சர் 150 பைக் ஒன்று டீலர்ஷிப் மையத்தை வந்தடைந்துள்ளது. ஜெட் வீல்ஸ் என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள இது தொடர்பான வீடியோவில் பைக்கை பற்றிய முழு விபரத்தையும் தெள்ள தெளிவாக அறிய முடிகிறது.

நிலாவின் வெள்ளை (மூன் வொய்ட்) எடிசன் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படவுள்ள பல்சர் 150 பைக்கின் இந்த ஸ்பெஷல் எடிசன் வழக்கமான கருப்பு & சிவப்பு நிறங்களுடன் புதியதாக வெள்ளை நிறத்தை பெற்றுள்ளது.

பல்சர் 150 பைக்கை இந்த நிறத்தில் நிச்சயமாக பார்த்திருக்க மாட்டீர்கள்!! விரைவில் விற்பனைக்கு வருகிறதாம்...

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், பெயருக்கு ஏற்றாற்போல் வெள்ளை நிறம் தான் பிரதான நிறமாக வழங்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றாற்போல் கிராஃபிக்ஸும் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

பல்சர் 150 பைக்கை இந்த நிறத்தில் நிச்சயமாக பார்த்திருக்க மாட்டீர்கள்!! விரைவில் விற்பனைக்கு வருகிறதாம்...

இதன்படி ‘150' என்ற பிராண்ட் லோகோவின் டிசைன் சற்று திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இவை தவிர்த்து பார்த்தோமேயானால், முன்பக்க மட்கார்ட் கார்பன் ஃபைபர் ஸ்டிக்கர் உடன் பளபளப்பான கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.

பல்சர் 150 பைக்கை இந்த நிறத்தில் நிச்சயமாக பார்த்திருக்க மாட்டீர்கள்!! விரைவில் விற்பனைக்கு வருகிறதாம்...

அதேபோல் அலாய் சக்கரங்கள், என்ஜின் -கியர்பாக்ஸ் அமைப்பு, மைய பாடி பேனல், எக்ஸாஸ்ட் குழாய் மற்றும் என்ஜினை பாதுகாக்கும் விதத்தில் வழங்கப்படும் கம்பிகள் உள்ளிட்டவை கருப்பு நிறத்திலேயே தொரப்பட்டுள்ளன.

பல்சர் 150 பைக்கை இந்த நிறத்தில் நிச்சயமாக பார்த்திருக்க மாட்டீர்கள்!! விரைவில் விற்பனைக்கு வருகிறதாம்...

இவற்றிற்கு ஏற்ப எக்ஸாஸ்ட் குழாய் மேல் பதிக்கப்படும் தகடு, க்ளிப்-ஆன் ஹேண்டில்பார், பின்பக்க முனையில் வழங்கப்படும் க்ராப்-ரெயில் உள்ளிட்டவை பளபளப்பான கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.

பல்சர் 150 பைக்கை இந்த நிறத்தில் நிச்சயமாக பார்த்திருக்க மாட்டீர்கள்!! விரைவில் விற்பனைக்கு வருகிறதாம்...

பல்சர் 150 பைக்கில் வழக்கமாக வழங்கப்படும் செமி-டிஜிட்டல் பகுதி-அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக் பாகங்கள் உள்ளிட்டவற்றில் மாற்றமிலை. இந்த 150சிசி பைக்கில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது.

பல்சர் 150 பைக்கை இந்த நிறத்தில் நிச்சயமாக பார்த்திருக்க மாட்டீர்கள்!! விரைவில் விற்பனைக்கு வருகிறதாம்...

அதேபோல் பல்சர் 150 பைக்கின் வழக்கமான 149.5சிசி ஏர்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் தான் இந்த ஸ்பெஷல் எடிசனிலும் பொருத்தப்பட்டுள்ளது. ஆறு விதமான நிறத்தேர்வுகளில் தற்சமயம் விற்பனை செய்யப்படும் பல்சர் 150 பைக்கின் புதிய மூன் வொய்ட் எடிசனின் விலை தற்போதைய விலைகளை காட்டிலும் ரூ.2,000-ல் இருந்து ரூ.3,000 வரையில் அதிகமாகவே நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது.

Most Read Articles

English summary
2021 Bajaj Pulsar 150 New White Colour At Dealer Showroom, Launch Soon.
Story first published: Monday, March 15, 2021, 23:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X