Just In
- 5 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 7 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 9 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 9 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Lifestyle
ஆரோக்கியத்திற்காக நீங்க சாப்பிடும் இந்த நட்ஸ் வகை உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை!
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விரைவில் பல்சர் 180 நேக்கட் ரோட்ஸ்டர் பைக்கை களமிறக்குகிறது பஜாஜ்... என்ன ஸ்டைலில் எதிர்பார்க்கலாம்?..
பஜாஜ் நிறுவனம் விரைவில் பல்சர் 180 நேக்கட் ரோட்ஸ்டர் பைக்கை விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம், அதன் பல்சர் விரைவில் புதிய மாடல் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய பைக் 180 வரிசையில் நேக்கட் ரோட்ஸ்டர் ரக மாடலாக விற்பனைக்கு வர இருக்கின்றது. இப்பைக்கின் அறிமுகம் வெகு விரைவில் அரங்கேற இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்பைக், 150 சிசி முதல் 200 சிசி வரையிலான திறனுடன் விற்பனையில் இருக்கும் பைக்குகளுக்குப் போட்டியாக விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றது. அந்தவகையில், ஹோண்டா ஹார்னட் 2.0, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160, சுசுகி ஜிக்ஸர் 155 ஆகிய பைக்குகளுக்கு இது போட்டியாக அமைய இருக்கின்றது.

இந்த பிரிவில் ஏற்கனவே டஃப் காம்படிசன் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் புதிய பைக்கை கவர்ச்சியானது மட்டுமின்றி அடக்கமான விலையிலும் விற்பனைக்குக் களமிறக்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. அந்தவகையில், இப்பைக் ரூ. 1.5 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், இந்த விலை மற்றும் துள்ளியமான அறிமுகம் பற்றிய தகவலை நிறுவனம் வெளியிடவில்லை. விரைவில் பைக் பற்றிய அனைத்து தகவல்களையும் பஜாஜ் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஓர் நேக்கட் ரோட்ஸ்டர் ரக பைக் என்பதால் தற்போது விற்பனையில் இருக்கும் பல்சர் 125 மற்றும் பல்சர் 150 ஆகிய மாடல்களுக்கு அடுத்த உயர்நிலை இடத்தில் அது அமர இருக்கின்றது.

என்னதான் இது உயர்நிலை இடத்தில் அமர்ந்தாலும் இப்பைக்கில் இடம்பெற்றிருக்கும் சில கூறுகள் சிறிய தம்பிகளான பல்சர் 125 மற்றும் பல்சர் 150 ஆகியவற்றிடம் இருந்தே இது பெற்றிருக்கின்றது. அந்தவகையில், டிஆர்எல்களுடன் கூடிய ஹாலோஜன் மின் விளக்கு, பிகினி ஃபேரிங் ஸ்டைல், டின்டட் விஷர், மஸ்குலர் ப்யூவல் டேங்க், எஞ்ஜின் கவுல், ஸ்பிளிட் ஸ்டைல் இருக்கைகள், ஸ்போர்ட்டி பில்லியன் கிராப் ரெயில்கள் ஆகியவை இப்பைக்கில் இடம்பெற்றிருக்கின்றன.

இதேபோன்று சில தனித்துவமான அம்சங்களையும் இப்பைக் பெற்றிருக்கின்றது. இதன்படி பார்த்தால் பைக்கின் அழுகிற்காக செய்யப்பட்டிருக்கும் வேலைகள் தனித்துவமானதாக காட்சியளிக்கின்றது. தொடர்ந்து, முன்பக்க வீலுக்கு டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் கேஸ் சார்ஜட் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் பின்பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

சிறப்பான பிரேக்கிங் வசதிக்காக சிங்கிள் டிஸ்க் இரு வீல்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஏபிஎஸ் வசதியும் இப்பைக்கில் இடம் பெற்றிருக்கின்றது. எஞ்ஜினைப் பொருத்தவரையில் இப்பைக்கில் 180எஃப் நியான் பைக்கில் இடம் பெற்றிருக்கும் அதே பெட்ரோல் மோட்டாரே இடம்பெற இருக்கின்றது.

இது ஓர் 178.6 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு எஞ்ஜின் ஆகும். இது அதிகபட்சமாக 16.6 பிஎச்பி மற்றும் 14.52 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இத்தகைய சிறப்பு வசதிகள் கொண்ட நேக்கட் ரோட்ஸ்டர் ஸ்டைலிலான 180 பைக்கையே பல்சர் மிக விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.