குட் நியூஸ்... பஜாஜ் பல்சர் 180 நேக்கட் மாடல் மீண்டும் அறிமுகமாகிறது!

பஜாஜ் நிறுவனம் விரைவில் பல்சர் 180 நேக்கட் மாடலை விற்பனைக்கு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த புதிய மாடல் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

குட் நியூஸ்... பஜாஜ் பல்சர் 180 நேக்கட் மாடல் மீண்டும் அறிமுகமாகிறது!

பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் வரிசையில் பல மாடல்கள் விற்பனையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த பைக்குகளுக்கு பெரிய அளவிலான வரவேற்பு தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த நிலையில், பல்சர் வரிசை பைக்குகளை வாங்கும் இளம் வாடிக்கையாளர்களுக்கு அதிக தேர்வுகளை கொடுப்பதற்கு பஜாஜ் ஆட்டோ எப்போதுமே முக்கியத்துவம் அளித்து வருகிறது.

குட் நியூஸ்... பஜாஜ் பல்சர் 180 நேக்கட் மாடல் மீண்டும் அறிமுகமாகிறது!

அந்த வகையில், பல்சர் 180 நேக்கட் ஸ்டைல் மாடலை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக பைக்வாலே தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

குட் நியூஸ்... பஜாஜ் பல்சர் 180 நேக்கட் மாடல் மீண்டும் அறிமுகமாகிறது!

கடந்த 2019ம் ஆண்டு பல்சர் 180 நேக்கட் ஸ்டைல் பைக் விற்பனையில் இருந்து விலக்கப்பட்டது. அதற்கு மாற்றாக, பல்சர் 180எஃப் (மேலே படத்தில் இருக்கும் மாடல்) என்ற ஃபேரிங் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. பல்சர் 220எஃப் பைக் மாடலின் அதே ஸ்டைலில் பல்சர் 180எஃப் மாடல் வந்தது.

குட் நியூஸ்... பஜாஜ் பல்சர் 180 நேக்கட் மாடல் மீண்டும் அறிமுகமாகிறது!

இந்த நிலையில், பல்சர் 180 நேக்கட் ஸ்டைல் மாடல் விரைவில் வர இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த மாடலானது பல்சர் 150 பைக்கின் தோற்றத்துடன் இருக்கும்.

குட் நியூஸ்... பஜாஜ் பல்சர் 180 நேக்கட் மாடல் மீண்டும் அறிமுகமாகிறது!

மேலும், இந்த பைக்கில் ஹாலஜன் ஹெட்லைட், இரண்டு பைலட் விளக்குகள், பிகினி ஃபேரிங் அமைப்பு, வலிமையான தோற்றத்தை தரும் பெட்ரோல் டேங்க், கூர்மையான பின்புற அமைப்பு, எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

குட் நியூஸ்... பஜாஜ் பல்சர் 180 நேக்கட் மாடல் மீண்டும் அறிமுகமாகிறது!

பல்சர் 180 பைக்கில் 178.6 சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 17.02 பிஎஸ் பவரையும், 14.52 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

குட் நியூஸ்... பஜாஜ் பல்சர் 180 நேக்கட் மாடல் மீண்டும் அறிமுகமாகிறது!

புதிய பல்சர் 180 நேக்கட் மாடல் பைக் அறிமுகம் குறித்து பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்சர் வரிசையில், 125, 125 ஸ்பிளிட் சீட், 150 நியான், 150, 150 ட்வின் டிஸ்க், 180எஃப், 220எஃப், என்எஸ்160, என்எஸ்200 மற்றும் ஆர்எஸ்200 என 10 மாடல்கள் விற்பனையில் வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #bajaj auto
English summary
According to report, Bajaj is planning to launch Pulsar 180 naked style model in india very soon.
Story first published: Friday, February 12, 2021, 16:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X