பஜாஜ் பிளாட்டினா 110 பைக்கில் வெள்ளை நிற சக்கரங்கள்!! இளைஞர்களை கவர புதிய அப்டேட்கள்!

வெள்ளை நிற சக்கரங்களுடன் புதிய நீல நிறத்தை பெற்ற பஜாஜ் பிளாட்டினா 110 இஎஸ் பைக்கை விவரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

பஜாஜ் பிளாட்டினா 110 பைக்கில் வெள்ளை நிற சக்கரங்கள்!! இளைஞர்களை கவர புதிய அப்டேட்கள்!

புனேவில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டு வரும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சமீபத்தில் அதன் பெரும்பாலான மோட்டார்சைக்கிள்களின் விலைகளை உயர்த்திருந்தது.

பஜாஜ் பிளாட்டினா 110 பைக்கில் வெள்ளை நிற சக்கரங்கள்!! இளைஞர்களை கவர புதிய அப்டேட்கள்!

இதனால் சிடி, பிளாட்டினா, பல்சர் மற்றும் அவென்ஞ்சர் என பெரும்பான்மையான பஜாஜ் பைக்குகளின் விலைகள் உயர்ந்தன. அதேநேரம் கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட டோமினார் 250 பைக்கின் விலை ரூ.16,800 குறைப்பட்டது.

பஜாஜ் பிளாட்டினா 110 பைக்கில் வெள்ளை நிற சக்கரங்கள்!! இளைஞர்களை கவர புதிய அப்டேட்கள்!

இந்த நிலையில் பிளாட்டினா 110 இஎஸ் பைக்கிற்கு 2022ஆம் ஆண்டிற்கான சில அப்டேட்களை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வழங்கியுள்ளது. இதன்படி ட்ரம் & டிஸ்க் வேரியண்ட்களுக்கு தலா மூன்று என மொத்தம் ஆறு புதிய நிறத்தேர்வுகள் பிளாட்டினா 110 இஎஸ் பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ளன.

பஜாஜ் பிளாட்டினா 110 பைக்கில் வெள்ளை நிற சக்கரங்கள்!! இளைஞர்களை கவர புதிய அப்டேட்கள்!

இந்த பிளாட்டினா பைக்கை ட்ரம் ப்ரேக் உடன் வாங்கும் வாடிக்கையாளர்கள் சிவப்பு நிறத்துடன் எபோனி கருப்பு, நீல நிறத்துடன் எபோனி கருப்பு மற்றும் ஆரஞ்ச் நிறத்துடன் காக்டெயில் வைன் சிவப்பு என்ற மூன்று நிறங்களில் ஏதேனும் ஒரு நிறத்தில் பைக்கை வாங்கலாம்.

பஜாஜ் பிளாட்டினா 110 பைக்கில் வெள்ளை நிற சக்கரங்கள்!! இளைஞர்களை கவர புதிய அப்டேட்கள்!

இவை அனைத்திலும் சக்கரங்கள் கருப்பு நிறத்தில் வழங்கப்படுமாம். பிளாட்டினா 110 இஎஸ் டிஸ்க் வேரியண்ட்டிற்கு வழங்கப்பட்டுள்ள நிறங்களாக, வால்கானிக் மேட் சிவப்பு, கருப்பு மற்றும் கடற்கரை நீலம் உள்ளிட்டவை அடங்குகின்றன.

பஜாஜ் பிளாட்டினா 110 பைக்கில் வெள்ளை நிற சக்கரங்கள்!! இளைஞர்களை கவர புதிய அப்டேட்கள்!

இதில் கிட்டத்தட்ட கடந்த மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பல்சர் டாகர் எட்ஜ் பைக்குகளை போன்று இருக்கும் புதிய கடற்கரை நீல நிற பெயிண்ட்டை பெற்ற பிளாட்டினா 110 இஎஸ் பைக்கை ‘தி பெங்கால் டைகர்' என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள கீழுள்ள வீடியோவில் காணலாம்.

Image Courtesy: The Bengal Rider

ட்ரம் வேரியண்ட்களில் சக்கரங்கள் கருப்பு நிறத்தில் வழங்கப்பட, டிஸ்க் வேரியண்ட்களில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வெள்ளை நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை மேலுள்ள வீடியோவிலும் பார்க்கலாம்.

பஜாஜ் பிளாட்டினா 110 பைக்கில் வெள்ளை நிற சக்கரங்கள்!! இளைஞர்களை கவர புதிய அப்டேட்கள்!

புதிய பெயிண்ட் தேர்வுகளுடன் பிளாட்டினா 110 இஎஸ் பைக்கில் முக்கிய அம்சமாக கை விரல் பாதுக்காப்பான் ட்ரம் & டிஸ்க் என இரு விதமான வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டுள்ளன. மற்றப்படி என்ஜின் உள்பட மற்ற இயந்திர பாகங்களில் எந்த மாற்றமும் இல்லை.

பஜாஜ் பிளாட்டினா 110 பைக்கில் வெள்ளை நிற சக்கரங்கள்!! இளைஞர்களை கவர புதிய அப்டேட்கள்!

பஜாஜ் நிறுவனம் பிளாட்டினா இஎஸ் பைக்கில் 115.45சிசி, எலக்ட்ரானிக் இன்ஜெக்‌ஷன், சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை வழங்குகிறது. அதிகப்பட்சமாக 7000 ஆர்பிஎம்-இல் 8.5 பிஎச்பி மற்றும் 5000 ஆர்பிஎம்-இல் 9.81 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Bajaj Platina 110 New Colours Like Pulsar Dagger Edition.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X