ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு பஜாஜ் பல்சர் எவ்ளோ மைலேஜ் தரும்?.. அட இவ்ளோவா..! நம்பவே மாட்டீங்க!!

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு பஜாஜ் பல்சர் 125 பைக் எவ்ளோ மைலேஜ் தரும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு பஜாஜ் பல்சர் எவ்ளோ மைலேஜ் தரும்?.. அட இவ்ளோவா..! நம்பவே மாட்டீங்க!!

பஜாஜ் பல்சர் 125 பைக்கிற்கு சொந்தக் காரர் ஒருவர் அவரது பைக்கை வைத்து மைலேஜ் டெஸ்ட்குறித்த பரிசோதனையைச் செய்திருக்கின்றார். மேலும், அதுகுறித்த தகவலையும் அவர் யுட்யூப் சேனல் ஒன்றின் வாயிலாக வெளியிட்டிருக்கின்றார். இதுகுறித்த தகவலையே நாம் இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு பஜாஜ் பல்சர் எவ்ளோ மைலேஜ் தரும்?.. அட இவ்ளோவா..! நம்பவே மாட்டீங்க!!

இந்தியர்கள் பலரின் விருப்பமான பைக்காக பஜாஜ் பல்சர் 125 இருக்கின்றது. இப்பைக்கில் பஜாஜ் நிறுவனம் 124.4 சிசி திறனை வெளிப்படுத்தக் கூடிய பிஎஸ்6 எஞ்ஜினையேப் பயன்படுத்தி வருகின்றது. இது அதிகபட்சமாக 11.8 பிஎஸ் மற்றும் 10.8 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியது.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு பஜாஜ் பல்சர் எவ்ளோ மைலேஜ் தரும்?.. அட இவ்ளோவா..! நம்பவே மாட்டீங்க!!

இப்பைக்கிலேயே சரியாக ஒரு லிட்டர் பெட்ரோலை நிரப்பி அதன் மைலேஜ்குறித்த விபரத்தை இளைஞர் பரிசோதனை செய்திருக்கின்றார். பெட்ரோலை நிரப்பிய கையோடு ட்ரிப் மீட்டரின் அளவை அவர் பூஜ்ஜியமாக மாற்றினார். இதன் பின்னரே பஜாஜ் பல்சர் 125 பைக்கின் மைலேஜ் குறித்த ஆய்வை அவர் செய்தார்.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு பஜாஜ் பல்சர் எவ்ளோ மைலேஜ் தரும்?.. அட இவ்ளோவா..! நம்பவே மாட்டீங்க!!

அவ்வாறு அவர் ஆய்வு செய்ததில் சரியாக 49.8 கிமீ தூரம் வரை பைக் சென்றிருக்கின்றது. மைலேஜ்குறித்த ஆய்வின்போது மணிக்கு 60 முதல் 70 கிமீ வரையிலான வேகத்தில் அவர் பயணித்திருக்கின்றார். இதன் விளைவாகவே 49.8 கிமீ மைலேஜை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு பல்சர் 125 வழங்கியிருக்கின்றது.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு பஜாஜ் பல்சர் எவ்ளோ மைலேஜ் தரும்?.. அட இவ்ளோவா..! நம்பவே மாட்டீங்க!!

இதுவே எகனாமி லெவல்களுக்கு உள்ளாகவே வைத்து பைக்கை அவர் இயக்கியிருந்தால் 50க்கும் அதிகமான கிமீ தூரம் வரை பல்சர் 125 மைலேஜ் தந்திருக்கும் என யூகிக்கப்படுகின்றது. இருப்பினும், தற்போதைய மைலேஜ் அளவு என்பது கவரக்கூடியதாக அளவாகவே அமைந்துள்ளது. பிரீமியம் தர பைக் இத்தனை கி.மீட்டர்கள்., மைலேஜ் தருகின்றதா என்பதே பலரின் ஆச்சரியமாக அமைந்துள்ளது.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு பஜாஜ் பல்சர் எவ்ளோ மைலேஜ் தரும்?.. அட இவ்ளோவா..! நம்பவே மாட்டீங்க!!

ஆகையால், பஜாஜ் விரும்பிகளை இந்த தகவல் மேலும் பெருமைப்பட வைத்திருக்கின்றது. பஜாஜ் பல்சர் 125 தற்போது மூன்று விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. நியான் நீலம், சோலார் சிவப்பு மற்றும் பிளாட்டினம் வெள்ளி ஆகிய நிறஹ்களில் பல்சர் 125 இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு பஜாஜ் பல்சர் எவ்ளோ மைலேஜ் தரும்?.. அட இவ்ளோவா..! நம்பவே மாட்டீங்க!!

இப்பைக் இந்தியாவில் ரூ. 73,427 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மிக ஸ்டைலான மற்றும் ஸ்போர்ட்டியான தோற்றத்தை இப்பைக் கொண்டிருப்பதால் இந்திய இளைஞர்களின் அதிகம் விருப்பமான பைக்காக பல்சர் 125 இருக்கின்றது.

Image Courtesy: Suraj Verma

பல்சர் 125 ஸ்பிளிட் செய்யப்பட்ட இருக்கை தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் விலை ரூ. 76.109 ஆகும். இதனை தனித்துவமான நிற தேர்வுகளில் பஜாஜ் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. கருப்பு / வெள்ளி, கருப்பு / சிவப்பு மற்றும் நியான் பச்சை ஆகிய நிற தேர்வுகளிலேயே பல்சர் 125 பைக் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வழக்கமான பல்சர் 125 மாடலைக் காட்டிலும் அதிக ஸ்போர்டியான தோற்றத்தைக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் இந்த அதிகபட்ச விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bajaj Pulsar 125 Mileage Report Video. Read In Tamil.
Story first published: Tuesday, May 25, 2021, 6:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X