வெள்ளை நிறம் மட்டுமில்லங்க, புதிய சிவப்பு நிறத்திலும் 2021 பஜாஜ் பல்சர் 150!! உங்களது சாய்ஸ் எது?

2021 பஜாஜ் பல்சர் 150 பைக் புதிய மேட் சிவப்பு நிறத்தில் விரைவில் விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் வெளியாகியுள்ள வீடியோவினை இந்த செய்தியில் பார்ப்போம்.

வெள்ளை நிறம் மட்டுமில்லங்க, புதிய சிவப்பு நிறத்திலும் 2021 பஜாஜ் பல்சர் 150!! உங்களது சாய்ஸ் எது?

2021 பல்சர் 150 பைக்கிற்கு பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வழங்கவுள்ள புதிய நிலவின் வெள்ளை (மூன் வொய்ட்) நிறத்தை பற்றி சமீபத்தில் தான் பார்த்தோம். பல்சர் 150 பைக் மட்டுமின்றி சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட பல்சர் 180 பைக்கிற்கும் புதியதாக நீல நிறம் வழங்கப்படவுள்ளது.

வெள்ளை நிறம் மட்டுமில்லங்க, புதிய சிவப்பு நிறத்திலும் 2021 பஜாஜ் பல்சர் 150!! உங்களது சாய்ஸ் எது?

பல்சர் 150 பைக்கை பொறுத்தவரையில், மூன் வொய்ட் நிறத்தேர்வு மட்டுமில்லாமல் புதிய மேட் சிவப்பு நிறத்தேர்வும் இந்த 150சிசி பைக்கிற்கு கொடுக்கப்படவுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையிலான வீடியோ ஜெட் வீல்ஸ் என்ற யூடியுப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கிராஃபிக்ஸில் இரண்டிற்கும் இடையே பெரிய அளவில் வித்தியாசம் இல்லை, வெள்ளை நிறம் கொடுக்கப்பட்ட இடங்களில் எல்லாம் சிவப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பெயிண்ட் தேர்விலும் மூன்று நிறங்கள் ஆக்கிரமித்துள்ளன.

வெள்ளை நிறம் மட்டுமில்லங்க, புதிய சிவப்பு நிறத்திலும் 2021 பஜாஜ் பல்சர் 150!! உங்களது சாய்ஸ் எது?

இதன்படி மூன் வொய்ட் பெயிண்ட்டில் சிவப்பு நிறம் ஆக்கிரமித்திருந்த பகுதிகளை இந்த புதிய மேட் சிவப்பு நிறத்தேர்வில் வெள்ளை நிறம் கொண்டுள்ளது. பைக்கின் முன்பக்கத்தில் வழக்கம்போல் கருப்பு நிறமே பெரும்பான்மையாக உள்ளது.

வெள்ளை நிறம் மட்டுமில்லங்க, புதிய சிவப்பு நிறத்திலும் 2021 பஜாஜ் பல்சர் 150!! உங்களது சாய்ஸ் எது?

முன்பக்கம் மட்டுமின்றி முன்பக்க மட்கார்ட், மைய பாடி பேனல், என்ஜின், எக்ஸாஸ்ட் குழாய் மற்றும் அலாய் சக்கரங்கள் உள்பட பைக்கின் பெரும்பான்மையாக பாகங்களை கருப்பு நிறமே சூழ்ந்துள்ளது. அலாய் சக்கரங்களின் ரிம்களில் வெள்ளை நிற ஸ்ட்ரிப் தென்படுகிறது.

வெள்ளை நிறம் மட்டுமில்லங்க, புதிய சிவப்பு நிறத்திலும் 2021 பஜாஜ் பல்சர் 150!! உங்களது சாய்ஸ் எது?

அதுவே மூன் வொய்ட் நிறத்தில் இந்த பகுதியில் சிவப்பு நிறம் இருந்தது குறிப்பிடத்தக்கது. கார்பன் ஃபைபர் தொடுதல்கள் முன்பக்க மட்கார்ட், மைய டூல் பாக்ஸ் பேனல் மற்றும் பின்பக்க ஃபெண்டர் உள்ளிட்ட பாகங்களில் வழங்கப்பட்டுள்ளன.

வெள்ளை நிறம் மட்டுமில்லங்க, புதிய சிவப்பு நிறத்திலும் 2021 பஜாஜ் பல்சர் 150!! உங்களது சாய்ஸ் எது?

2021 பல்சர் 150 பைக்கில் ‘150' என்ற ஸ்டிக்கரிங் டிசைன் சிறிது திருத்தியமைக்கப்பட்டுள்ளதை முன்பே கூறியிருந்தோம். மற்றப்படி 149.5சிசி ஏர்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் ஃப்யுல்-இன்ஜெக்டட் பிஎஸ்6 என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை.

வெள்ளை நிறம் மட்டுமில்லங்க, புதிய சிவப்பு நிறத்திலும் 2021 பஜாஜ் பல்சர் 150!! உங்களது சாய்ஸ் எது?

5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படும் இந்த என்ஜின் மட்டுமின்றி பல்சர் 150 பைக்கில் வழக்கமாக வழங்கப்படும் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் & அட்ஜெஸ்ட் ஆகக்கூடிய இரட்டை சுருள் சஸ்பென்ஷன் அமைப்புகளிலும், முன் மற்றும் பின் சக்கரங்களில் முறையே 280மிமீ மற்றும் 230மிமீ அளவுகளில் வழங்கப்படும் டிஸ்க் ப்ரேக்குகளிலும் எந்த மாற்றமும் இல்லை.

வெள்ளை நிறம் மட்டுமில்லங்க, புதிய சிவப்பு நிறத்திலும் 2021 பஜாஜ் பல்சர் 150!! உங்களது சாய்ஸ் எது?

பயணிகளின் பாதுகாப்பிற்கு இந்த பஜாஜ் பல்சர் பைக்கில் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது. ரூ.93 ஆயிரத்தில் இருந்து ரூ.1.04 லட்சம் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படுகின்ற பல்சர் 150 பைக்கிற்கு விற்பனையில் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160, ஹோண்டா யூனிகார்ன், யமஹா எஃப்இசட்எஸ் எஃப்ஐ உள்ளிட்ட பைக்குகள் போட்டியாக உள்ளன.

Most Read Articles

English summary
2021 Bajaj Pulsar 150 New Matte Red Colour Twin Disc Variant Launch Soon. Read In Tamil.
Story first published: Wednesday, March 17, 2021, 20:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X