Just In
- 7 min ago
இந்த ஆண்டு டொயோட்டாவிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் 4 புதிய கார்கள்!
- 8 min ago
நிஜ வாழ்க்கை ஹீரோ மயூர் ஷெல்கேவை விலையுயர்ந்த பைக்கால் கவுரவித்த ஜாவா... இதோட விலை எவ்ளோ தெரியுமா?
- 45 min ago
சொனெட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் கியா!! வேறலெவல் வசதிகள் அறிமுகமாகின்றன...
- 1 hr ago
மறுபடியுமா... தீயாய் பரவும் கொரோனாவால் வாகன விற்பனையில் சிக்கல்... அச்சத்தில் ஆட்டோமொபைல் துறை!
Don't Miss!
- News
கபசுரக் குடிநீர் விநியோகம்... நிர்வாகிகளிடம் தெரிந்த சுணக்கம்... முன்மாதிரியாக களத்தில் ஸ்டாலின்..!
- Movies
மாரி செல்வாராஜூடன் மீண்டும் கைகோர்க்கும் தனுஷ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கொண்டாடும் ரசிகாஸ்!
- Finance
900 வருட வரலாறுள்ள பிரம்மாண்ட சொத்தினை வாங்கிய முகேஷ் அம்பானி.. எங்கே தெரியுமா?
- Sports
‘சோற்றில் மறைக்கப்பட்ட முழு பூசணிக்காய்’.. நடராஜன் விலகலில் எழுந்த சர்ச்சை.. உண்மை காரணம் என்ன?
- Education
கோவையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா? அழைக்கும் ICAR நிறுவனம்!
- Lifestyle
கொரோனா சோதனை முடிவு நெகட்டிவாக வந்தாலும் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு ஆபத்துத்தானாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதிய நீல நிறத்தில் கொண்டுவரப்படும் பஜாஜ் பல்சர் 180!! பைக் செம்மையா இருக்கு... வீடியோ!
முற்றிலும் புதிய நீல நிறத்தில் பஜாஜ் பல்சர் 180 பைக் ஒன்று டீலர்ஷிப் வளாகத்தை வந்தடைந்துள்ளது. இது தொடர்பான வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக விற்பனை நிறுத்தப்பட்டு இருந்த பல்சர் 180 பைக்கை இந்த 2021ஆம் ஆண்டில் தான் மீண்டும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவந்து இருந்தது.

சிவப்பு & கருப்பு நிறத்தேர்வில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த பல்சர் பைக்கிற்கு விரைவில் புதிய டார்க் மேட் நீல நிறத்தை தயாரிப்பு நிறுவனம் வழங்கவுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே தற்போது புதிய நீல நிறத்தில் பல்சர் 180 பைக் ஷோரூம் ஒன்றிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
ஜெட் வீல்ஸ் என்ற யுடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இது தொடர்பான வீடியோவில் நீலம் பிரதான நிறமாக கொடுக்கப்பட்டு இருந்தாலும், பைக்கின் கிராஃபிக்ஸில் வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களையும் பார்க்க முடிகிறது.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், சிவப்பு & கருப்பு பெயிண்ட் தேர்வில் சிவப்பு நிறம் கொடுக்கப்படும் பகுதிகள் அனைத்தும் நீல நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால் என்ஜின், எக்ஸாஸ்ட் குழாய், அலாய் சக்கரங்கள், மைய பாடி பேனல், இருக்கைகள் மற்றும் மட்கார்ட் உள்ளிட்டவை கருப்பு நிறத்திலேயே தொடரப்பட்டுள்ளன.

இருப்பினும் சிவப்பு & கருப்பு கிராஃபிக்ஸை காட்டிலும் இந்த புதிய நீலம் & கருப்பு க்ராஃபிக்ஸ் அருமையானதாகவே உள்ளது. இதற்கு ஏற்றாற்போல் முன்பக்க மட்கார்ட் மற்றும் பின்பக்க ஃபெண்டரில் (பின் இருக்கைக்கு கீழே) கார்பன் ஃபைபர் டிசைன் போன்ற தொடுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் சில பாகங்களில் கருப்பு நிறம் பளபளப்பானதாக வழங்கப்பட்டுள்ளது.

எக்ஸாஸ்ட் குழாயிற்கு மேல்பகுதியில் கால் வைக்க வழங்கப்படும் தகடு கார்பன் ஃபைபரால் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. மற்றப்படி எல்இடி டெயில்லேம்ப், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஸ்போர்டியான பிளவுப்பட்ட இருக்கைகள், மேல் நோக்கி வளைக்கப்பட்ட எக்ஸாஸ்ட் குழாய் மற்றும் பிளவுப்பட்ட க்ராப் ரெயில்கள் உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் இல்லை.

2021 பஜாஜ் பல்சர் 180 பைக்கில் 178.6சிசி, ஏர்-கூல்டு, டிடிஎஸ்-ஐ எஃப் என்ஜின் வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 8500 ஆர்பிஎம்-ல் 17.02 பிஎஸ் மற்றும் 6500 ஆர்பிஎம்-ல் 14.52 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

என்ஜின் மட்டுமின்றி சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக் பாகங்களிலும் சிவப்பு & கருப்பு நிறத்தேர்வில் இருந்து புதிய நீல நிறத்தேர்வில் எந்த மாற்றமும் இல்லை. பல்சர் 180 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.08 லட்சமாக உள்ளது. நமக்கு தெரிந்தவரையில் புதிய நீல நிற வேரியண்ட்டின் விலை சிறிது அதிகரிக்கப்படலாம்.