யமஹா ஆர்15 பைக்கிற்கு இணையான தொழிற்நுட்பத்துடன் தயாராகும் பல்சர் 250!! விபரங்கள் கசிந்தன

யமஹா ஆர்15 மற்றும் எம்டி15 பைக்கிற்கு இணையான தொழிற்நுட்பத்தை பஜாஜ் பல்சர் 250 பைக் பெற்றுவரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

யமஹா ஆர்15 பைக்கிற்கு இணையான தொழிற்நுட்பத்துடன் தயாராகும் பல்சர் 250!! விபரங்கள் கசிந்தன

பல்சர் பைக்குகளின் வரிசையை விரிவுப்படுத்த பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சமீப காலமாக தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் விளைவாக விரைவில் விற்பனைக்கு வரவுள்ள பல்சர் 250 பைக்கை கடந்த சில மாதங்களாக சோதனை ஓட்டங்களின் போது பார்த்து வருகின்றோம்.

யமஹா ஆர்15 பைக்கிற்கு இணையான தொழிற்நுட்பத்துடன் தயாராகும் பல்சர் 250!! விபரங்கள் கசிந்தன

பல்சர் 250எஃப் என்கிற பெயரில் ஸ்போர்ட்ஸ் ரக மோட்டார்சைக்கிளாக கொண்டுவரப்பட்டாலும், பல்சர் 220எஃப் போன்று பைக்கை சுற்றிலும் பேனல்கள் சற்று குறைவாகவே வழங்கப்படவுள்ளன. இதனால் விற்பனையில் உள்ள பல்சர் 220எஃப் பைக்கிற்கு மாற்றாக புதிய 250சிசி பல்சர் பைக்கை பஜாஜ் நிறுவனம் கொண்டுவருவதாக கூறப்படுகிறது.

யமஹா ஆர்15 பைக்கிற்கு இணையான தொழிற்நுட்பத்துடன் தயாராகும் பல்சர் 250!! விபரங்கள் கசிந்தன

ஆனால் இதில் எந்தளவிற்கு உண்மை உள்ளது என்பது தெரியவில்லை. புதிய பல்சர் 250 பைக்கில் ஒற்றை-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் புதியதாக வடிவமைக்கப்பட்டு பொருத்தப்பட உள்ளதாக ஏற்கனவே கூறியிருந்தோம். டோமினார் 250 மற்றும் கேடிஎம் 250 பைக்குகளில் வழங்கப்படுவதை போன்று ஆயில்-கூல்டு என்ஜினாக இது இருக்க வாய்ப்பில்லை.

யமஹா ஆர்15 பைக்கிற்கு இணையான தொழிற்நுட்பத்துடன் தயாராகும் பல்சர் 250!! விபரங்கள் கசிந்தன

இந்த நிலையில் தற்போது இந்த புதிய 250சிசி என்ஜின், விவிஏ தொழிற்நுட்பத்தை பெற்றுவரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதே தொழிற்நுட்பம் யமஹாவின் 155சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை பெறும் ஆர்15 மற்றும் எம்டி15 பைக்குகளிலும் வழங்கப்படுகிறது.

யமஹா ஆர்15 பைக்கிற்கு இணையான தொழிற்நுட்பத்துடன் தயாராகும் பல்சர் 250!! விபரங்கள் கசிந்தன

இருப்பினும் பஜாஜ் நிறுவனம் வடிவமைப்பதால், இந்த தொழிற்நுட்பம் பல்துறையை சேர்ந்ததாகவும், செலவு குறைந்ததாகவும் இருக்கும். விவிஏ (VVA) என்பதன் முழு விரிவாக்கம், வெவ்வேறான வால்வு செயல்பாடுகள் என்பதாகும்.

யமஹா ஆர்15 பைக்கிற்கு இணையான தொழிற்நுட்பத்துடன் தயாராகும் பல்சர் 250!! விபரங்கள் கசிந்தன

இது என்ஜின் ஓட்டத்தின் வேகத்தை பொறுத்து வெவ்வேறான நேரத்தில் வால்வுகளை செயல்பட (மற்றும் மேல்நோக்கி தூக்க) அனுமதிக்கும். இதனால் குறைந்த ஆக்ஸலரேட்டர் முறுக்கலின் போதும் சரி, அதிகப்பட்ச முறுக்கலின் போதும் சரி உறுமும் சத்தத்தை பெறலாம்.

யமஹா ஆர்15 பைக்கிற்கு இணையான தொழிற்நுட்பத்துடன் தயாராகும் பல்சர் 250!! விபரங்கள் கசிந்தன

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தயாரிக்கும் தொழிற்நுட்ப வசதி ஆனது எலக்ட்ரிக் மோட்டார் ஊக்கி மற்றும் முதன்மை திருகி மூலமாக செயல்படும் வகையில் எளிமையானதாக இருக்கும். பஜாஜ் நிறுவனம் வால்வு டைமிங் கண்ட்ரோலை மூன்று நிலைகளில் வடிவமைத்துள்ளது.

யமஹா ஆர்15 பைக்கிற்கு இணையான தொழிற்நுட்பத்துடன் தயாராகும் பல்சர் 250!! விபரங்கள் கசிந்தன

முதலாவது சிறந்த ஆற்றல், இரண்டாவது மேம்பட்ட டார்க் மற்றும் மூன்றாவது மேம்பட்ட மைலேஜ் ஆகும். இந்த தொழிற்நுட்பம் எரிபொருள் செலவை குறைப்பது மட்டுமில்லாமல், தற்போதைய என்ஜின்களை சிறிய மாடிஃபை மாற்றங்களுடன் மீண்டும் பயன்படுத்த உதவியாக இருக்கும்.

யமஹா ஆர்15 பைக்கிற்கு இணையான தொழிற்நுட்பத்துடன் தயாராகும் பல்சர் 250!! விபரங்கள் கசிந்தன

இனி எதிர்காலத்தில் வெளிவரவுள்ள பஜாஜ் பல்சர் பைக்குகளில் ஏர்-கூல்டு என்ஜின்கள், புதிய விவிஏ தொழிற்நுட்பத்துடன் வழங்கப்பட உள்ளன. இந்த புதிய ட்ரெண்ட், புதிய பல்சர் 250 மோட்டார்சைக்கிளில் இருந்து துவங்கவுள்ளது.

Most Read Articles
English summary
Bajaj Pulsar 250 To Get VVA Tech Like Yamaha R15 & MT15.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X