பஜாஜ் பல்சர் என்250-க்கும், எஃப்250-க்கும் இடையே உள்ள வித்தியாசங்கள்!! இதை தெரிஞ்சிக்கிட்டு பைக் வாங்க பாருங்க

புதிய பல்சர் மோட்டார்சைக்கிள்களாக பல்சர் என்250 & எஃப்250 மாடல்களை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த அக்டோபர் மாத இறுதியில் அறிமுகப்படுத்தி உள்ளது. பல்சர் பைக் பிரியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த இவற்றை சமீபத்தில் டெஸ்ட் ரைடு செய்து பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது.

பஜாஜ் பல்சர் என்250-க்கும், எஃப்250-க்கும் இடையே உள்ள வித்தியாசங்கள்!! இதை தெரிஞ்சிக்கிட்டு பைக் வாங்க பாருங்க

அதன் மூலம் புதிய 250சிசி பல்சர் பைக்குகளை பற்றி நாங்கள் தெரிந்து கொண்ட விபரங்களை விமர்சனமாக பதிவிட்டுள்ளோம். இந்த நிலையில் இந்த செய்தியில் இவ்விரு புதிய பல்சர் பைக்குகளுக்கு இடையேயான ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை பிரிவு வாரியாக பார்க்கலாம்.

பஜாஜ் பல்சர் என்250-க்கும், எஃப்250-க்கும் இடையே உள்ள வித்தியாசங்கள்!! இதை தெரிஞ்சிக்கிட்டு பைக் வாங்க பாருங்க

ஸ்டைல்

முக்கியமாக தோற்றத்தில் தான் புதிய பல்சர் என்250 & எஃப்250 பைக்குகள் பெரியதாக வித்தியாசப்படுகின்றன. செமி-ஸ்போர்ட்ஸ் ரக மோட்டார்சைக்கிளாக உருவாக்கப்பட்டுள்ள எஃப்250 இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு மேலாக, பைக்கின் காற்று இயக்கவியல் பண்பை மேம்படுத்தும் வகையில் நீண்ட எதிர்காற்று தடுப்பு கண்ணாடியை பெற்றுள்ளது. அதேபோல் இந்த பைக்கில் பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகள் பைக்கின் முன்பக்க ஹெட்லேம்ப் பேனல்களில் பொருத்தப்பட்டுள்ளன.

பஜாஜ் பல்சர் என்250-க்கும், எஃப்250-க்கும் இடையே உள்ள வித்தியாசங்கள்!! இதை தெரிஞ்சிக்கிட்டு பைக் வாங்க பாருங்க

பல்சர் என்250-ஐ பொறுத்தவரையில், இது நாக்டு ஸ்ட்ரீட்ஃபைட்டர் வகையை சேர்ந்ததாகும். இதனால் இதில் என்எஸ்200-ஐ போல் மிகவும் தேவையான பேனல்கள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன. இந்த இரு பல்சர் 250 பைக்குகளில் எல்இடி டிஆர்எல்களுடன் எல்இடி பிரோஜெக்டர் ஹெட்லேம்ப் பொருத்தப்பட்டுள்ளது. டிஆர்எல் விளக்குகளின் வடிவம் இவை இரண்டிலும் சற்று வித்தியாசப்படுகின்றன.

பஜாஜ் பல்சர் என்250-க்கும், எஃப்250-க்கும் இடையே உள்ள வித்தியாசங்கள்!! இதை தெரிஞ்சிக்கிட்டு பைக் வாங்க பாருங்க

காற்று இயக்கவியலுக்கான பண்பு

இந்த விஷயத்தில், செமி-ஸ்போர்ட்ஸ் ரக மோட்டார்சைக்கிள் என்பதால் பல்சர் எஃப்250 முன்னிலை வகிக்கிறது. ஏனெனில் இதற்கேற்ப இந்த பைக்கின் முன்பக்கத்தில் பேனல்கள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் என்250 பைக்கிலும் ஆக்ரோஷமான ரைடிங் அனுபவத்தை தாராளமாக எதிர்பார்க்கலாம்.

பஜாஜ் பல்சர் என்250-க்கும், எஃப்250-க்கும் இடையே உள்ள வித்தியாசங்கள்!! இதை தெரிஞ்சிக்கிட்டு பைக் வாங்க பாருங்க

இவை இரண்டிலும் ஒரே மாதிரியாக ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி மற்றும் பிளவுப்பட்ட இருக்கை அமைப்பு வழங்கப்பட்டுள்ளன. பல்சர் எஃப்250 பைக்கில் க்ளிப்-ஆன் ஹேண்டில்பார் மற்றும் ஸ்போர்டியான ரைடிங் பொசிஷனை கொண்டுள்ளது. பல்சர் என்250 ஆனது வழக்கமான ஒற்றை-துண்டு ஹேண்டில்பாரை பெற்று வந்துள்ளது.

பஜாஜ் பல்சர் என்250-க்கும், எஃப்250-க்கும் இடையே உள்ள வித்தியாசங்கள்!! இதை தெரிஞ்சிக்கிட்டு பைக் வாங்க பாருங்க

ஹேண்ட்லிங்

மேற்கூறப்பட்ட காற்று இயக்கவியல் பண்புகளின்படி பார்க்கும்போது, என்250 அதிக வளைவுகளை கொண்ட நகர்புற பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றதாக விளங்குகிறது. மறுப்பக்கம் எஃப்250-ஐ அடிக்கடி தொலைத்தூர பயணங்களை மேற்கொள்பவர்கள் தாராளமாக தேர்வு செய்யலாம்.

பஜாஜ் பல்சர் என்250-க்கும், எஃப்250-க்கும் இடையே உள்ள வித்தியாசங்கள்!! இதை தெரிஞ்சிக்கிட்டு பைக் வாங்க பாருங்க

கெர்ப் எடை இவை இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே கொண்டுள்ளன. பல்சர் எஃப்250-இன் எடை 162 கிலோ மற்றும் எஃப்250-இன் எடை 164 கிலோ ஆகும். இந்த 2 கிலோ கூடுதல் எடைக்கு எஃப்250 பைக்கில் பொருத்தப்படும் கூடுதல் பேனல்களை காரணமாக சொல்லலாம்.

பஜாஜ் பல்சர் என்250-க்கும், எஃப்250-க்கும் இடையே உள்ள வித்தியாசங்கள்!! இதை தெரிஞ்சிக்கிட்டு பைக் வாங்க பாருங்க

இயக்கம் & செயல்படுதிறன்

தோற்றத்தில் மட்டும் தான் இவை முக்கியமாக வேறுப்பாடுகளை கொண்டுள்ளதாக ஏற்கனவே கூறிவிட்டோம். இதன்படி, இவை இரண்டிலும் ஒரே மாதிரியான 249சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜினே பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 24.5 பிஎஸ் மற்றும் 21.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

பஜாஜ் பல்சர் என்250-க்கும், எஃப்250-க்கும் இடையே உள்ள வித்தியாசங்கள்!! இதை தெரிஞ்சிக்கிட்டு பைக் வாங்க பாருங்க

புதிய பல்சர் 250 பைக்குகளில் இந்த என்ஜின் எக்ஸாஸ்ட் குழாயின் வழியாக வெளிப்படுத்தும் சத்தமானது கிட்டத்தட்ட பல்சர் 220எஃப்-இல் இருந்து வெளிவருவதை போல் உள்ளது. இவற்றில் என்ஜின் புதிய குழாய் சேசிஸில் பொருத்தப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனுக்கு இந்த புதிய பல்சர் பைக்குகளில் முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்கையும், பின்பக்கத்தில் மோனோஷாக்கையும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வழங்கியுள்ளது.

பஜாஜ் பல்சர் என்250-க்கும், எஃப்250-க்கும் இடையே உள்ள வித்தியாசங்கள்!! இதை தெரிஞ்சிக்கிட்டு பைக் வாங்க பாருங்க

விலைகள்

நாக்டு ரக மோட்டார்சைக்கிளான என்250-இன் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.1.38 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிராண்டின் கீழ் இயங்கும் கேடிஎம்-இன் 250சிசி பைக்குகளின் விலைகள் ரூ.2.5 லட்சத்தை தாண்டி உள்ள நிலையில், வெறும் ரூ.1.38 லட்சத்தில் 250சிசி பல்சர் பைக்கை அறிமுகப்படுத்த விரும்பிய பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தை நிச்சயமாக பாராட்டியே ஆக வேண்டும்.

பஜாஜ் பல்சர் என்250-க்கும், எஃப்250-க்கும் இடையே உள்ள வித்தியாசங்கள்!! இதை தெரிஞ்சிக்கிட்டு பைக் வாங்க பாருங்க

செமி-ஸ்போர்ட்ஸ் பைக்கான எஃப்250-இன் விலையும் ரூ.1.40 லட்சத்தில் இருந்தே ஆரம்பிக்கிறது. இதனால் இவை இரண்டிற்கும் இடையே விலையில் பெரியளவில் எந்த வித்தியாசமும் இல்லை. இருப்பினும் உங்களது மனம் கவர்ந்த பல்சர் 250 பைக் எது? நீங்கள் எதை தேர்வு செய்ய விரும்புகிறீர்கள் என்பதை கீழே கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

Most Read Articles
English summary
Bajaj Pulsar N250 vs F250 2021 Model - What Are The Differences?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X