வீலிங்கில் பட்டையை கிளப்பும் பஜாஜ் பல்சர் என்எஸ்160!! ஹேண்டில்பாரில் கையே வைக்க தேவையில்லை!

பஜாஜ் பல்சர் பைக்குகள் அதன் ஸ்போர்டியான இயக்கவியலினால் பிரபலமானவைகளாக உள்ளன. இந்திய ஆட்டோமொபைல் துறையில் இருசக்கர வாகனங்கள் என்று பார்த்தால், அதில் நிச்சயம் பஜாஜ் பல்சர் பெயர்பலகைக்கு ஒரு தவிர்க்க முடியாத இடம் உண்டு.

வீலிங்கில் பட்டையை கிளப்பும் பஜாஜ் பல்சர் என்எஸ்160!! ஹேண்டில்பாரில் கையே வைக்க தேவையில்லை!

இப்படிப்பட்ட பிரபலமான பஜாஜ் பல்சர் பைக்குகளில் ஒன்றான என்எஸ்160 பைக்கில் ஹேண்டில்பாரில் கை வைக்காமலே நீண்ட தூரம் முன் சக்கரம் தூக்கியவாறு (வீலிங்) இயக்கப்பட்டு புதிய சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.

வீலிங்கில் பட்டையை கிளப்பும் பஜாஜ் பல்சர் என்எஸ்160!! ஹேண்டில்பாரில் கையே வைக்க தேவையில்லை!

இந்திய சாதனை புத்தகம் மற்றும் இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் க்ளப் கூட்டமைப்பின் புத்தகத்தில் இடம்பிடித்துள்ள இந்த வீலிங் சாதனையில் மொத்தம் 186.8 மீட்டர்கள் என்எஸ்160 பைக் ஹேண்டில்பார் பிடிக்காமலேயே வீலிங் செய்யப்பட்டுள்ளது.

வீலிங்கில் பட்டையை கிளப்பும் பஜாஜ் பல்சர் என்எஸ்160!! ஹேண்டில்பாரில் கையே வைக்க தேவையில்லை!

இது முந்தைய சாதனையை காட்டிலும் கிட்டத்தட்ட 100மீ அதிகமாகும். ஏனெனில் என்எஸ்160-இன் முந்தைய வீலிங் சாதனை 89 மீட்டர்களில் தான் நிகழ்த்தப்பட்டு இருந்தது. இந்த சாதனையில் என்எஸ்160 பைக்கை இயக்கியவரின் பெயரின் ஹ்ருஷிகேஷ் மாண்ட்கே ஆகும்.

வீலிங்கில் பட்டையை கிளப்பும் பஜாஜ் பல்சர் என்எஸ்160!! ஹேண்டில்பாரில் கையே வைக்க தேவையில்லை!

இந்த சாதனையை புரிந்தது குறித்து ஹ்ருஷிகேஷ் மாண்ட்கே கருத்து தெரிவிக்கையில், பல்சர் என்எஸ்160 ஆனது ஆற்றல் மற்றும் செயல்திறனின் சுருக்கமாகும். மேலும் இந்த சாதனையை முயற்சிப்பதற்கு எனக்கு சரியான தேர்வாக இருந்தது என கூறினார்.

வீலிங்கில் பட்டையை கிளப்பும் பஜாஜ் பல்சர் என்எஸ்160!! ஹேண்டில்பாரில் கையே வைக்க தேவையில்லை!

இவர் தான் சமீபத்திலும் என்எஸ்200 பைக்கிலும் விரைவான கால்-மைல் வீலிங் சாதனை புரிந்திருந்தார். இந்த வீலிங் சாதனை தடைசெய்யப்பட்ட விமான ஓடுத்தளத்தில் முயற்சி செய்து பார்க்கப்பட்டுள்ளது.

வீலிங்கில் பட்டையை கிளப்பும் பஜாஜ் பல்சர் என்எஸ்160!! ஹேண்டில்பாரில் கையே வைக்க தேவையில்லை!

இந்த சாதனையில், வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்படும் பல்சர் என்எஸ்160 பைக் தான் எந்தவொரு கூடுதல் தொழிற்நுட்பமும் இன்றி பயன்படுத்தப்பட்டுள்ளது. வீலிங்கின் போது சாலையில் தேயாமல் இருப்பதற்காக பின்பக்க மட்கார்ட் மற்றும் நம்பர் ப்ளேட் உள்ளிட்டவை மட்டும் பைக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

வீலிங்கில் பட்டையை கிளப்பும் பஜாஜ் பல்சர் என்எஸ்160!! ஹேண்டில்பாரில் கையே வைக்க தேவையில்லை!

பல்சர் என்எஸ்200 பைக்கில் பயன்படுத்தப்படும் அதே இரும்பு சுற்றளவு ஃப்ரேம் தான் என்எஸ்160 பைக்கிலும் பயன்படுத்தப்படுகிறது. என்எஸ்200 அதன் பிரிவில் சிறந்த ஹேண்ட்லிங் பைக்காக விளங்குவது குறிப்பிடத்தக்கது.

வீலிங்கில் பட்டையை கிளப்பும் பஜாஜ் பல்சர் என்எஸ்160!! ஹேண்டில்பாரில் கையே வைக்க தேவையில்லை!

என்எஸ்200-ஐ காட்டிலும் சற்று எடை குறைவான என்எஸ்160 பைக்கில் 160.3சிசி ஏர்-கூல்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 9,000 ஆர்பிஎம்-இல் 17.2 பிஎஸ் மற்றும் 7,250 ஆர்பிஎம்-ல் 14.6 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

வீலிங்கில் பட்டையை கிளப்பும் பஜாஜ் பல்சர் என்எஸ்160!! ஹேண்டில்பாரில் கையே வைக்க தேவையில்லை!

இந்த பைக்கில் சஸ்பென்ஷன் பணியை கவனிக்க முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக்கும் வழங்கப்படுகின்றன. ப்ரேக் பணியினை 260மிமீ மற்றும் 230மிமீ-களில் உள்ள டிஸ்க்குகள் கவனிக்கின்றன.

வீலிங்கில் பட்டையை கிளப்பும் பஜாஜ் பல்சர் என்எஸ்160!! ஹேண்டில்பாரில் கையே வைக்க தேவையில்லை!

இவற்றுடன் பயணிகளின் பாதுகாப்பிற்கு சிங்கிள்-சேனல் ஆண்டி-லாக் ப்ரேக்கிங் சிஸ்டத்தையும் பஜாஜ் வழங்குகிறது. ரூ.1.11 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் என்எஸ்160 பைக்கிற்கு டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி, யமஹா எஃப்இசட்-எஸ் வி3, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் மற்றும் சுஸுகி ஜிக்ஸெர் உள்ளிட்டவை போட்டியாக உள்ளன.

Most Read Articles

English summary
Bajaj Pulsar NS160 created history by breaking the world record for the longest no-hands wheelie entering the India Book of Records and Federation of Motor Sports Club of India (FMSCI). With road tester Hrushikesh Mandke on the saddle, the record was set in the presence of a senior representative from FMSCI and an adjudicator from the India Book of Records. The no hand wheelie was executed with a record 186.8 meters breaking the existing world record of 89 meters.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X