மீண்டும் கருப்பு நிறத்தில் Bajaj Pulsar RS200!! ஷோரூம்களுக்கு வந்தது!

கருப்பு நிறத்தில் Bajaj Pulsar RS200 பைக் மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதை உறுதி செய்யும் விதமாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவினை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மீண்டும் கருப்பு நிறத்தில் Bajaj Pulsar RS200!! ஷோரூம்களுக்கு வந்தது!

Bajaj Auto நிறுவனம் Pulsar RS200 மோட்டார்சைக்கிளிற்கு கிராபைட் கருப்பு நிறத்தை ஏற்கனவே வழங்கி கொண்டிருந்தது. பிறகு இடையில் இந்த ஒரு கருப்பு நிறத்தேர்வில் மட்டும் இந்த pulsar பைக் வழங்கப்படுவது நிறுத்தி கொள்ளப்பட்டது.

Image Courtesy: The Sameer vlogs

ஆனால் தற்போது The Sameer vlogs என்ற யுடியூப் சேனலில் வெளியாகியுள்ள மேலுள்ள வீடியோவில், கிராபைட் கருப்பு நிறத்தில் மீண்டும் RS200 பைக் ஷோரூம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனையில் உள்ள சூப்பர் பைக்குகளுக்கு எல்லாம் Pulsar RS200 தான் ஆரம்ப நிலை என்று சொல்லலாம்.

மீண்டும் கருப்பு நிறத்தில் Bajaj Pulsar RS200!! ஷோரூம்களுக்கு வந்தது!

அப்படிப்பட்ட இந்த Pulsar பைக்கிற்கு உமிழும் நெருப்பின் சிவப்பு, க்ரே மற்றும் மெட்டாலிக் வெள்ளை என்ற மூன்று நிறத்தேர்வுகள் முன்பு வழங்கப்பட்டு வந்தன. தற்போது நான்காவது தேர்வாக கிராபைட் கருப்பு மீண்டும் இணைந்து கொண்டுள்ளது. மீண்டும் வந்துள்ள நிறத்தேர்வில் RS200 பைக்கின் விலை எவ்வளவு என்பது தற்போதைக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

மீண்டும் கருப்பு நிறத்தில் Bajaj Pulsar RS200!! ஷோரூம்களுக்கு வந்தது!

எங்களுக்கு தெரிந்தவரையில் மற்ற நிறத்தேர்வுகளின் விலையில் (ரூ.1.61 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலை) தான் கிராபைட் கருப்பு நிறத்திலும் இந்த 200சிசி Pulsar பைக் விற்பனை செய்யப்படலாம். பிஎஸ்4 மாடலில் வழங்கப்பட்ட அதே தோற்றத்தில் தான் RS200 கருப்பு பைக் இந்த வீடியோவிலும் காட்சியளிக்கிறது.

மீண்டும் கருப்பு நிறத்தில் Bajaj Pulsar RS200!! ஷோரூம்களுக்கு வந்தது!

RS200 பைக் பிஎஸ்4-இல் இருந்து பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமானதாக மாற்றப்பட்ட போது கிராபைட் கருப்பு நிறத்தேர்வு நிறுத்தி கொள்ளப்பட்டது. Pulsar வரிசையில் தற்போதைக்கு விலைமிக்கதாக, மற்றவை அனைத்தை காட்டிலும் முரட்டுத்தனமான தோற்றத்தை கொண்டதாக RS200 விளங்குகிறது.

மீண்டும் கருப்பு நிறத்தில் Bajaj Pulsar RS200!! ஷோரூம்களுக்கு வந்தது!

பருத்த உடலமைப்புடன் சில கூர்மையான லைன்களுடன் வடிவமைக்கப்படும் இந்த பைக்கில், முன்பக்கத்தில் இரட்டை எல்இடி ஹெட்லேம்ப் வழங்கப்படுகிறது. Pulsar RS200 கருப்பு பைக்கில் புதிய பெயிண்ட்டை தவிர்த்து வேறெந்த இயந்திர மாற்றமும் கொண்டுவரப்பட்டிருக்க வாய்ப்புகள் இல்லை.

மீண்டும் கருப்பு நிறத்தில் Bajaj Pulsar RS200!! ஷோரூம்களுக்கு வந்தது!

Pulsar RS200 பைக்கில் 199.5சிசி, ஃப்யுல்-இன்ஜெக்டட், 4-வால்வு, லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 9750 ஆர்பிஎம்-இல் 24.2 பிஎச்பி மற்றும் 8000 ஆர்பிஎம்-இல் 18.7 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இதன் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

மீண்டும் கருப்பு நிறத்தில் Bajaj Pulsar RS200!! ஷோரூம்களுக்கு வந்தது!

இவற்றின் உதவியுடன் இந்த பல்சர் பைக்கில் அதிகப்பட்சமாக மணிக்கு 141கிமீ வேகத்தில் செல்ல முடியும். இந்த வேகத்தின் மூலம் தற்போதைக்கு அதி வேகமான Pulsar பைக்காக RS200 விளங்குகிறது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவைகளை இது NS200 உடன் பகிர்ந்து கொள்கிறது.

மீண்டும் கருப்பு நிறத்தில் Bajaj Pulsar RS200!! ஷோரூம்களுக்கு வந்தது!

சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளையும், பின்பக்கத்தில் நைட்ரிக்ஸ் மோனோஷாக் அப்சார்பரையும் கொண்டுள்ள இந்த ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிளில் ப்ரேக்கிங் பணியினை கவனிக்க ஏபிஎஸ் உடன் 300மிமீ மற்றும் 230மிமீ-களில் டிஸ்க்குகள் வழங்கப்படுகின்றன.

மீண்டும் கருப்பு நிறத்தில் Bajaj Pulsar RS200!! ஷோரூம்களுக்கு வந்தது!

அழுத்தப்பட்ட இரும்பினால் தயாரிக்கப்படுவதால் RS200-இல் ஹேண்ட்லிங் மிகவும் நேர்த்தியானதாக உள்ளது. ஒட்டுமொத்தமாக Pulsar RS200 கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற மோட்டார்சைக்கிளாகவே பைக் ஆர்வலர்களால் பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏபிஎஸ் இதன் முக்கிய அம்சமாகும்.

மீண்டும் கருப்பு நிறத்தில் Bajaj Pulsar RS200!! ஷோரூம்களுக்கு வந்தது!

புனேவில் சாகான் தொழிற்சாலையின் மூலம் செயல்பட்டுவரும் Bajaj Auto நிறுவனம் Pulsar 250F பைக்கின் தயாரிப்பிலும் ஈடுப்பட்டு வருகிறது. தற்போதைய Pulsar 220F பைக்கின் நீட்சியாக கொண்டுவரப்படும் Pulsar 250F பைக்கில் மிகவும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கூடுதல் பேனல்கள் வழங்கப்பட உள்ளன.

மீண்டும் கருப்பு நிறத்தில் Bajaj Pulsar RS200!! ஷோரூம்களுக்கு வந்தது!

இதற்கு முன் கிடைத்திருந்த இந்த 250சிசி பைக்கின் சோதனை ஓட்ட ஸ்பை படங்களும் அதை தான் வெளிக்காட்டி இருந்தன. ஆதலால் இது ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிளிற்கும், NS200 போன்ற நாக்டு மோட்டார்சைக்கிளிற்கும் இடைப்பட்ட தோற்றத்தை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் கருப்பு நிறத்தில் Bajaj Pulsar RS200!! ஷோரூம்களுக்கு வந்தது!

இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாத Pulsar 250F பைக்கில் புதிய 250சிசி என்ஜின் வழங்கப்படும். அதிகப்பட்சமாக 24 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இந்த என்ஜின் வழங்கப்படலாம். புதிய Bajaj Pulsar 250F பைக்கிற்கு Suzuki Gixxer SF250 போட்டியாக விளங்கும்.

Most Read Articles

English summary
Bajaj Pulsar RS200 Black Colour Is Back – First Look Walkaround.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X