Just In
- 6 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 9 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்கு 50,000 பேர் பதிவு: பஜாஜ் தகவல்!
சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க விருப்பம் தெரிவித்து 50,000 பேர் பதிவு செய்துள்ளதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான மவுசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சந்தையில் பல புதிய நிறுவனங்கள் களமிறங்கி கலக்கத் துவங்கி இருக்கின்றன. இந்த நிலையில், இருசக்கர வாகன உற்பத்தியில் பாரம்பரியம் மிக்க பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் இந்த சந்தையில் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருடன் களமிறங்கியது.

ஆனால், முதல்கட்டமாக புனே மற்றும் பெங்களூர் நகரங்களில் மட்டுமே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்தது. இந்த நிலையில், கொரோனாவால் இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகளில் தடங்கல் ஏற்பட்டது. உதிரிபாக சப்ளையில் நிலவும் பிரச்னைகளும் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன.

இந்த சூழலில், இரண்டாம் கட்டமாக நாட்டின் பிற பகுதிகளுக்கும் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கொண்டு செல்லும் பணிகளில் பஜாஜ் ஆட்டோ ஈடுபட்டுள்ளது. அதன்படி, 28 புதிய நகரங்களில் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு செல்ல இருப்பதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மணிகன்ட்ரோல் தளத்திற்கு பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் உயர் அதிகாரி ராகேஷ் ஷர்மா பேட்டியளித்துள்ளார். அதில்,"உற்பத்தியில் உள்ள பிரச்னைகளில் இருந்து அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் மீண்டு விடுவோம் என்று நம்புகிறோம்.

இதைத்தொடர்ந்து, சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பிற நகரங்களில் அறிமுகப்படுத்தும் பணிகள் தீவிரமாக தொடங்கப்படும். அடுத்த நிதி ஆண்டு காலத்தில் 24 நகரங்களில் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம்.

மேலும், பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்து 50,000 பேர் பதிவு செய்துள்ளனர். எனவே, பிற நகரங்களில் கொண்டு செல்வதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க உள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 95 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். இந்த ஸ்கூட்டரின் அர்பன் வேரியண்ட் ரூ.1 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், பிரிமீயம் வேரியண்ட் ரூ.1.15 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது. ஏத்தர் 450எக்ஸ் மற்றும் டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக இருக்கும்.