பெரிய தொழிற்சாலை, ஆண்டிற்கு ரூ.120 கோடி வருவாய்... பெரிய திட்டங்களுடன் பேட்ரே இ-ஸ்கூட்டர் நிறுவனம்!!

பெரிய அளவிலான தொழிற்சாலையை கொண்டிருப்பதினால் பேட்ரே எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் தொடர்ந்து பார்ப்போம்.

பெரிய தொழிற்சாலை, ஆண்டிற்கு ரூ.120 கோடி வருவாய்... பெரிய திட்டங்களுடன் பேட்ரே இ-ஸ்கூட்டர் நிறுவனம்!!

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன பயன்பாடு இ-ஸ்கூட்டர் மூலமாகவே வளர்ச்சியடைந்து வருவது நம் அனைவருக்குமே நன்றாக தெரியும். இந்த வகையில் தற்போதைய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் பேட்ரே-வின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் வேகமாக உயர்ந்து வருகிறது.

பெரிய தொழிற்சாலை, ஆண்டிற்கு ரூ.120 கோடி வருவாய்... பெரிய திட்டங்களுடன் பேட்ரே இ-ஸ்கூட்டர் நிறுவனம்!!

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை மேலும் உயர்த்த திட்டமிட்டு வருகின்ற பேட்ரே நிறுவனம் தனது சில்லறை விற்பனை நிலையங்களை டயர்-1, டயர்-2 நகரங்களுக்கும், பெரிய மெட்ரோ நகரங்களுக்கும் விரிவுப்படுத்த பணியாற்றி வருகிறது. மேலும், ஒரே விதமான விலைகளில், அடிக்கடி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தரத்தை மாற்றி கொண்டு இல்லாமல், இந்தியாவின் நிலையான எலக்ட்ரிக் 2-சக்கர வாகன நிறுவனமாக உருவெடுக்க பேட்ரே விரும்புகிறது.

பெரிய தொழிற்சாலை, ஆண்டிற்கு ரூ.120 கோடி வருவாய்... பெரிய திட்டங்களுடன் பேட்ரே இ-ஸ்கூட்டர் நிறுவனம்!!

இதற்கிடையில் ஒருபக்கம் நாட்டில் சார்ஜிங் நிலையங்களை அதிகப்படுத்துவதையும் இந்த நிறுவனம் நோக்கமாக கொண்டுள்ளது. தயாரிப்பு பணிகள் மற்றும் ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்புகளில் அதிகளவில் முதலீடு செய்துவரும் பேட்ரே அதன் புதிய தயாரிப்புகளின் மீது தான் தற்போதைக்கு முழு கவனம் செலுத்து வருகிறது.

பெரிய தொழிற்சாலை, ஆண்டிற்கு ரூ.120 கோடி வருவாய்... பெரிய திட்டங்களுடன் பேட்ரே இ-ஸ்கூட்டர் நிறுவனம்!!

இதற்காக மறுப்பக்கம் சில்லறை & கூட்டணி நிறுவனங்களின் விற்பனை நிலையங்களை வலுப்படுத்தி கொண்டுவரும் இந்த இ-ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம் இதன் மூலமாகவே இந்தியாவில் பசுமை போக்குவரத்தினை பெற முடியும் என நம்புகிறது. விற்பனை நிலையங்களை அதிகரிப்பதன் மூலம் நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களை மேலும் நெருங்க முடியும்.

பெரிய தொழிற்சாலை, ஆண்டிற்கு ரூ.120 கோடி வருவாய்... பெரிய திட்டங்களுடன் பேட்ரே இ-ஸ்கூட்டர் நிறுவனம்!!

வாகன தயாரிப்பை மெல்ல மெல்ல அதிகரித்து வந்தால், ஏற்படும் தேவைகளை எந்தவொரு பிரச்சனையுமின்றி நிவர்த்தி செய்ய முடியும். இதன்படி, கடந்த சில மாதங்களில் பல எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்பை அதிகரித்துள்ளன.

பெரிய தொழிற்சாலை, ஆண்டிற்கு ரூ.120 கோடி வருவாய்... பெரிய திட்டங்களுடன் பேட்ரே இ-ஸ்கூட்டர் நிறுவனம்!!

அதேபோல் தங்களது தயாரிப்பு பணிகள் அதிகரிப்பட்டுள்ளது குறித்து பேட்ரே நிறுவனத்தின் நிறுவனர் நிஷல் சவுத்ரி கூறுகையில், இந்த தொழிற்சாலை விரிவாக்கம் அடுத்த இரண்டு காலாண்டுகளில் பல மடங்கு அதிகரிக்கும் என்று நாங்கள் கணித்துள்ளோம். இது இ-ஸ்கூட்டர்களின் தேவையை பூர்த்தி செய்யும்.

பெரிய தொழிற்சாலை, ஆண்டிற்கு ரூ.120 கோடி வருவாய்... பெரிய திட்டங்களுடன் பேட்ரே இ-ஸ்கூட்டர் நிறுவனம்!!

மேலும் ஆண்டுதோறும் ரூ.120 கோடி வருவாயுடன் எங்கள் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்புகளில் அதிக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். உலகதரம் வாய்ந்த தயாரிப்புகளை சேர்க்கிறோம். எங்கள் சில்லறை மற்றும் கூட்டணி நெட்வொர்க்கை வலுப்படுத்தி, இந்தியாவில் ஒரு EV சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க மேலும் உழைக்கிறோம் என்றார்.

பெரிய தொழிற்சாலை, ஆண்டிற்கு ரூ.120 கோடி வருவாய்... பெரிய திட்டங்களுடன் பேட்ரே இ-ஸ்கூட்டர் நிறுவனம்!!

பேட்ரே போன்ற எலக்ட்ரிக் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு தற்போதைக்கு உள்ள பிரச்சனைகளுள் ஒன்று, இந்தியாவில் வளர்ச்சி மிகுந்த நகரங்களின் எண்ணிக்கை குறைவு. இதனால் தான் வளர்ச்சி கண்ட சில நகரங்களையே பெரும்பாலான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தலைமையகமாக கொண்டுள்ளன.

பெரிய தொழிற்சாலை, ஆண்டிற்கு ரூ.120 கோடி வருவாய்... பெரிய திட்டங்களுடன் பேட்ரே இ-ஸ்கூட்டர் நிறுவனம்!!

சிறந்த வருடாந்திர வருவாய் கிடைக்க பெறும் வகையில், அதன்மூலம் சந்தை விரிவாக்கத்தை பயனுள்ள வகையில் பேட்ரே மேற்கொள்ளவுள்ளது. ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்பூரை சேர்ந்த பேட்ரே நிறுவனம் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவையை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

பெரிய தொழிற்சாலை, ஆண்டிற்கு ரூ.120 கோடி வருவாய்... பெரிய திட்டங்களுடன் பேட்ரே இ-ஸ்கூட்டர் நிறுவனம்!!

இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் சமீபத்தில் தான் மிக பெரிய தொழிற்சாலைக்கு மாறி இருந்தது. இது மாதத்திற்கு 4,000 யூனிட் இ-ஸ்கூட்டர்களை தயாரிக்க போதுமானது. ஆனால் இந்த எண்ணிக்கையை சுமார் 300% அதிகரிக்க வேண்டும் என்பது தான் பேட்ரேவின் இலட்சியமாகும். கடந்த ஆண்டில் இந்த நிறுவனத்தின் வருடாந்திர வருவாய் கிட்டத்தட்ட 255% அதிகரித்து இருந்தது. நடப்பு 2021ஆம் ஆண்டில் 900%-க்கும் மேல் உயர்ந்துள்ளது.

பெரிய தொழிற்சாலை, ஆண்டிற்கு ரூ.120 கோடி வருவாய்... பெரிய திட்டங்களுடன் பேட்ரே இ-ஸ்கூட்டர் நிறுவனம்!!

இத்தகைய சூழலை சரியாக பயன்படுத்தி கொள்ளும் விதமாக அடுத்த 3-4 மாதங்களில் இரு புதிய தயாரிப்புகளை களமிறக்க பேட்ரே நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பேட்ரேவின் 500 சார்ஜிங் நிலையங்கள் நாடு முழுவதும் பல இடங்களில் நிறுவப்பட்டு வருகின்றன. அதேநேரம் தற்போதைய எரிபொருள் 2-சக்கர வாகன மெக்கானிக்குகளுக்கு தங்களது எலக்ட்ரிக் வாகனங்களை பழுதுப்பார்ப்பது குறித்தும் பேட்ரே பயிற்றுவித்து வருகிறது.

Most Read Articles
English summary
Battre Electric Scooter Increases Production To 4,000 Units.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X