ஆஹா... வீலி, டோனட் சாகசங்களுடன் வீர பராக்கிரமங்களை காட்டிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உல்ள ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவிரிப் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது. இந்த நிலையில், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் திறன்களை காட்டும் விதமாக வீடியோ ஒன்றை அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி பவிஷ் அகர்வால் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ மற்றும் கூடுதல் தகவல்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆஹா... வீலி, டோனட் சாகசங்களுடன் வீர பராக்கிரமங்களை காட்டிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

கடந்த ஆகஸ்ட் 15ந் தேதி சுதந்திர தினத்தன்று ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்டது முதலே வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. புக்கிங்கில் அசத்திய நிலையில், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்திப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஆஹா... வீலி, டோனட் சாகசங்களுடன் வீர பராக்கிரமங்களை காட்டிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

மேலும், புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கான டெலிவிரி கொடுக்கும் பணிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், வரும் 10ந் தேதி முதல் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்ப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதனைத் தொடர்ந்து டெலிவிரியும் துவங்கப்படும் என்று தெரிகிறது.

ஆஹா... வீலி, டோனட் சாகசங்களுடன் வீர பராக்கிரமங்களை காட்டிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இந்த நிலையில், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் திறன்களை காட்டும் விதமாக வீடியோ ஒன்றை அந்நிறுவனத்தின் தலைவர் பவிஷ் அகர்வால் வெளியிட்டுள்ளார். அதில், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஸ்டன்ட் செய்யும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

வீலி, டோனட் மற்றும் இதர ஸ்டன்ட் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன. இதன்மூலமாக, ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் திறன்களை வெளி உலகுக்கு பரைசாற்றும் விதமாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் எடுத்து வெளியிட்டுள்ளது. இந்த ஸ்டன்ட் காட்சிகள் நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு அதிக உற்சாகத்தை தரும் வகையில் அமைந்துள்ளது. ஆனால், இந்த சாகசங்கள் பயிற்சி பெற்ற நிபுணர்களின் உதவியுடன் பாதுகாக்கப்பட்ட பகுதியில் வைத்து படமாக்கப்பட்டுள்ளது.

ஆஹா... வீலி, டோனட் சாகசங்களுடன் வீர பராக்கிரமங்களை காட்டிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எஸ்1 மற்றும் எஸ்1 புரோ என்ற இரண்டு மாடல்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், எஸ்1 மாடலில் 2.98kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது இந்த மாடலில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிமீ தூரம் வரை செல்ல முடியும்.

ஆஹா... வீலி, டோனட் சாகசங்களுடன் வீர பராக்கிரமங்களை காட்டிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

ஓலா எஸ்1 புரோ மாடலில் 3.97kWh பேட்டரித் தொகுப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 180 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. நடைமுறை பயன்பாட்டில் இந்த ரேஞ்ச் அளவு சற்று குறைய வாய்ப்பு இருக்கிறது.

ஆஹா... வீலி, டோனட் சாகசங்களுடன் வீர பராக்கிரமங்களை காட்டிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்திப் பணிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மிக பிரம்மாண்டமான ஆலையில் நடந்து வருகிறது. புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு விரைந்து ஸ்கூட்டர்களை டெலிவிரி கொடுக்கும் பணிகளில் ஓலா எலெக்ட்ரிக் ஈடுபட்டுள்ளது. டிமான்ட் அதிகம் இருப்பதால் ஆலையின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் முயற்சிகளிலும் ஓலா ஈடுபட்டுள்ளது.

ஆஹா... வீலி, டோனட் சாகசங்களுடன் வீர பராக்கிரமங்களை காட்டிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

அதேபோன்று, தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் தங்கு தடையின்றி பயணங்களை மேற்கொள்ள ஏதுவாக முக்கிய நகரங்களில் அதிவிரைவு சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது. இதனால், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான வரவேற்பு தொடர்ந்து சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஓலா #ola
English summary
Bavish Agarwal have shared stunt video of Ola electric scooters and test ride details.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X