ட்ரையம்ப்பின் மலிவான ட்ரிடெண்ட் 660 பைக்கின் விலை இதுதானா? இணையத்தில் கசிந்த தகவல்

ட்ரையம்ப் ட்ரிடெண்ட் 660 பைக்கின் விலை குறித்த விபரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு முன்னதாக இணையத்தில் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ட்ரையம்ப்பின் மலிவான ட்ரிடெண்ட் 660 பைக்கின் விலை இதுதானா? இணையத்தில் கசிந்த தகவல்

சமீபத்தில் உலகளவில் அறிமுகமானதை தொடர்ந்து ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் விலை குறைவான ட்ரிடெண்ட் 660 ஸ்டீரீட் ஃபைட்டர் பைக் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது.

ட்ரையம்ப்பின் மலிவான ட்ரிடெண்ட் 660 பைக்கின் விலை இதுதானா? இணையத்தில் கசிந்த தகவல்

Image Courtesy: Pratap Ghosh

இதற்கு மத்தியில் தற்போது இணையத்தில் கசிந்துள்ள விபரத்தின்படி பார்க்கும்போது இந்த மலிவான ட்ரையம்ப் பைக் ரூ.6.95 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனையை துவங்கவுள்ளது.

ட்ரையம்ப்பின் மலிவான ட்ரிடெண்ட் 660 பைக்கின் விலை இதுதானா? இணையத்தில் கசிந்த தகவல்

ட்ரிடெண்ட் 660-இன் விலை குறித்து தயாரிப்பு நிறுவனம் சார்பில் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவராததால், தற்போது கசிந்துள்ள தகவலை எந்த அளவிற்கு நம்புவது என்று தெரியவில்லை.

ட்ரையம்ப்பின் மலிவான ட்ரிடெண்ட் 660 பைக்கின் விலை இதுதானா? இணையத்தில் கசிந்த தகவல்

ஒருவேளை இந்த விலையில் ட்ரிடெண்ட் 660 பைக் விற்பனைக்கு வந்தால், ஏற்கனவே கூறியதுபோல் இதுதான் மலிவான ட்ரையம்ப் மோட்டார்சைக்கிளாக நம் நாட்டு சந்தையில் விளங்கும். இதன் உலகளாவிய அறிமுகத்தின்போது, இந்தியாவில் இந்த பைக் சிகேடி பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு மனேசர் தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்படவுள்ளதாக ட்ரையம்ப் நிறுவனம் தெரிவித்திருந்தது.

ட்ரையம்ப்பின் மலிவான ட்ரிடெண்ட் 660 பைக்கின் விலை இதுதானா? இணையத்தில் கசிந்த தகவல்

ட்ரையம்ப் பிராண்டின் பிரபலமான மூன்று-சிலிண்டர் குடும்பத்தை கவுரவிக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள ட்ரிடெண்ட் 660 பைக்கில் எளிமையான வட்ட வடிவிலான எல்இடி ஹெட்லேம்ப்கள், கால்முட்டி பாதுகாப்பான் உடன் பெட்ரோல் டேங்க் மற்றும் நறுக்கப்பட்ட பின்பக்க வால் பகுதி உடன் உடற் வேலை மற்ற ட்ரையம்ப் பைக்குகளை காட்டிலும் குறைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ட்ரையம்ப்பின் மலிவான ட்ரிடெண்ட் 660 பைக்கின் விலை இதுதானா? இணையத்தில் கசிந்த தகவல்

அடிப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள எக்ஸாஸ்ட் குழாய், அலாய் ஸ்விங்கார்ம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் மாடர்ன் தொடுதல் உடன் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை பைக்கின் அழகை மெருக்கூட்டுபவைகளாக உள்ளன.

ட்ரையம்ப்பின் மலிவான ட்ரிடெண்ட் 660 பைக்கின் விலை இதுதானா? இணையத்தில் கசிந்த தகவல்

இந்த நாக்டு மோட்டார்சைக்கிளில் 660சிசி இன்-லைன் 3-சிலிண்டர், லிக்யூடு-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் முற்றிலுமாக புதியது கிடையாது என்றாலும், லேட்டஸ்ட் மாசு உமிழ்வு விதிக்கு இணக்கமாக அப்கிரேட் செய்ய 67 புதிய பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ட்ரையம்ப்பின் மலிவான ட்ரிடெண்ட் 660 பைக்கின் விலை இதுதானா? இணையத்தில் கசிந்த தகவல்

ஸ்லிப்பர் மற்றும் உதவி க்ளட்ச் வசதி கொண்ட 6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ள இந்த என்ஜின் 81 எச்பி மற்றும் 64 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியது. பயணிகளின் பாதுகாப்பிற்கு ஏபிஎஸ் நிலையாக இந்த பைக்கில் வழங்கப்படுகிறது.

ட்ரையம்ப்பின் மலிவான ட்ரிடெண்ட் 660 பைக்கின் விலை இதுதானா? இணையத்தில் கசிந்த தகவல்

மேட் ஜெட் ப்ளாக்- மேட் சில்வர் ஐஸ், சில்வர்-ஐஸ் மற்றும் டையப்லோ சிவப்பு மற்றும் க்ரிஸ்டல் வெள்ளை- சாப்பியர் கருப்பு என்ற மூன்று விதமான நிறத்தேர்வுகளில் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் ட்ரையம்ப் ட்ரிடெண்ட் 660 பைக்கில் மற்ற சிறப்பம்சங்களாக ரைடு-பை-வயர் சிஸ்டம், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், வண்ண டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

Most Read Articles

English summary
Triumph Trident 660 India Price Leaked Via Website, Rs 6.95 L Onwards.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X