டக்குனு பார்த்த யமஹா ஆர்எக்ஸ் மாதிரி இருக்குல!! ஆனா இது ஐரோப்பிய புல்லிட் ஹீரோ 250 ஸ்க்ரம்ப்ளர் பைக்

பெல்ஜியம் நாட்டை சேர்ந்த புல்லிட் பிராண்டின் ஹீரோ 250 ஸ்க்ரம்ப்ளர் பைக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டக்குனு பார்த்த யமஹா ஆர்எக்ஸ் மாதிரி இருக்குல!! ஆனா இது ஐரோப்பிய புல்லிட் ஹீரோ 250 ஸ்க்ரம்ப்ளர் பைக்

பெல்ஜியம் நாட்டில் 50சிசி மற்றும் 125சிசி ஸ்க்ரம்ப்ளர்-ஸ்டைல் மோட்டார்சைக்கிள் தயாரிப்பினால் பிரபலமான நிறுவனம் புல்லிட். இந்த நிறுவனம் தற்போது அதன் ஹீரோ வரிசை மோட்டார்சைக்கிள்களை 250சிசி வரையில் விரிவுப்படுத்தியுள்ளது.

டக்குனு பார்த்த யமஹா ஆர்எக்ஸ் மாதிரி இருக்குல!! ஆனா இது ஐரோப்பிய புல்லிட் ஹீரோ 250 ஸ்க்ரம்ப்ளர் பைக்

இந்த வகையில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 250 ஸ்க்ரம்ப்ளர் அதன் 125சிசி வெர்சனை பெரிய அளவில் தோற்றத்தில் ஒத்து காணப்படுகிறது. இருப்பினும் என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

டக்குனு பார்த்த யமஹா ஆர்எக்ஸ் மாதிரி இருக்குல!! ஆனா இது ஐரோப்பிய புல்லிட் ஹீரோ 250 ஸ்க்ரம்ப்ளர் பைக்

இந்த புதிய ஸ்க்ரம்ப்ளர் பைக்கில் 250சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 25.8 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய இவ்வளவு பெரிய என்ஜினை பெற்றிருந்தாலும், இந்த ஹீரோ 250 பைக்கின் எடை வெறும் 148 கிலோவாக மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளது.

டக்குனு பார்த்த யமஹா ஆர்எக்ஸ் மாதிரி இருக்குல!! ஆனா இது ஐரோப்பிய புல்லிட் ஹீரோ 250 ஸ்க்ரம்ப்ளர் பைக்

இப்படிப்பட்ட குறைவான கெர்ப் எடை உடைய 250சிசி பைக்கில் ரைடிங் அட்டகாசமாக இருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. பைக்கில் கால்முட்டி பாதுகாப்பான் உடன் பெட்ரோல் டேங்க் 15 லிட்டரில் கண்ணீர்த்துளி வடிவில் வழங்கப்பட்டுள்ளது.

டக்குனு பார்த்த யமஹா ஆர்எக்ஸ் மாதிரி இருக்குல!! ஆனா இது ஐரோப்பிய புல்லிட் ஹீரோ 250 ஸ்க்ரம்ப்ளர் பைக்

இவை மட்டுமின்றி நீண்ட தட்டையான ஓட்டுனர் இருக்கை, க்ராஸ் ஃப்ரேஸ் உடன் தட்டையான ஹேண்டில்பார்கள், சிறிய பேஷ் தட்டு, உயர்த்தில் பொருத்தப்பட்ட எக்ஸாஸ்ட் குழாய் உள்ளிட்டவற்றையும் ஹீரோ 250 பைக்கில் புல்லிட் நிறுவனம் வழங்கியுள்ளது.

டக்குனு பார்த்த யமஹா ஆர்எக்ஸ் மாதிரி இருக்குல!! ஆனா இது ஐரோப்பிய புல்லிட் ஹீரோ 250 ஸ்க்ரம்ப்ளர் பைக்

சஸ்பென்ஷன் அமைப்பாக முன்பக்கத்தில் தலைக்கீழான ஃபோர்க்கும், பின்பக்கத்தில் மோனோஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன. ப்ரேக்கிங் பணியை கவனிக்க முன் & பின்பக்கத்தில் டிஸ்க் ப்ரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் ஏபிஎஸ்-உம் உள்ளது.

டக்குனு பார்த்த யமஹா ஆர்எக்ஸ் மாதிரி இருக்குல!! ஆனா இது ஐரோப்பிய புல்லிட் ஹீரோ 250 ஸ்க்ரம்ப்ளர் பைக்

பைக்கின் வயர்-ஸ்போக் சக்கரங்களில் க்னோபி டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. தோற்றத்தை பார்த்தவுடன் புல்லிட் ஹீரோ 250 ஆஃப்-ரோடு பைக் போன்று உங்களுக்கு காட்சியளிக்கலாம். ஆனால் இது அன்றாட பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய ஸ்க்ரம்ப்ளர்-ஸ்டைல் மாடலாகும்.

டக்குனு பார்த்த யமஹா ஆர்எக்ஸ் மாதிரி இருக்குல!! ஆனா இது ஐரோப்பிய புல்லிட் ஹீரோ 250 ஸ்க்ரம்ப்ளர் பைக்

கருப்பு- கோல்டு, வெள்ளை மற்றும் டைட்டானியம் என்ற மூன்று விதமான நிறத்தேர்வுகளில் புல்லிட் ஹீரோ 250 ஐரோப்பிய சந்தைக்கு மட்டும்தான் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் விலை 4,199 யூரோக்களாக (கிட்டத்தட்ட ரூ.3.77 லட்சம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Bullit Hero 250 Scrambler Unveiled
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X