கவாஸாகியின் 300சிசி நிஞ்சா பைக்கிற்கு போட்டியாக 2021 பெனெல்லி 302ஆர்!! சீனாவில் அறிமுகம்

கவாஸாகி நிஞ்சா 300 பைக்கிற்கு போட்டியாக பெனெல்லி 302ஆர் மோட்டார்சைக்கிள் அதிகாரப்பூர்வ சீனாவில் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கவாஸாகியின் 300சிசி நிஞ்சா பைக்கிற்கு போட்டியாக 2021 பெனெல்லி 302ஆர்!! சீனாவில் அறிமுகம்

பெனெல்லி நிறுவனம் அதன் 302ஆர் மோட்டர்சைக்கிளின் அப்கிரேட் வெர்சனின் தயாரிப்பில் ஈடுப்பட்டு வருவது கடந்த மாதத்திலேயே இணையத்தில் கசிந்திருந்த ஆவணங்களின் மூலம் தெரிய வந்திருந்தது.

கவாஸாகியின் 300சிசி நிஞ்சா பைக்கிற்கு போட்டியாக 2021 பெனெல்லி 302ஆர்!! சீனாவில் அறிமுகம்

இந்த நிலையில் தற்போது இந்த பைக் சீனாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய 302ஆர் பைக்கில் மிக முக்கியமான மாற்றம், 302சிசி இணையான-இரட்டை என்ஜினில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த என்ஜின் தற்போது பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமானதாக அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது.

கவாஸாகியின் 300சிசி நிஞ்சா பைக்கிற்கு போட்டியாக 2021 பெனெல்லி 302ஆர்!! சீனாவில் அறிமுகம்

இந்த பிஎஸ்6 என்ஜின் அதிகப்பட்சமாக 35 பிஎஸ் மற்றும் 27 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் என பெனெல்லி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது இந்த என்ஜினின் முந்தைய வெர்சனை காட்டிலும் 3.5 பிஎஸ் குறைவு மற்றும் 0.5 என்எம் அதிகமாகும்.

இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் குறைந்திருக்கும் அதேநேரத்தில் பைக்கின் எடை 22 கிலோ குறைக்கப்பட்டு, 182 கிலோ (கெர்ப்) ஆக கொண்டுவரப்பட்டுள்ளது.

கவாஸாகியின் 300சிசி நிஞ்சா பைக்கிற்கு போட்டியாக 2021 பெனெல்லி 302ஆர்!! சீனாவில் அறிமுகம்

என்ஜினிற்கு அடுத்து மிக பெரிய மாற்றம் பைக்கின் முன்பக்க பகுதியில் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் புதிய பெனெல்லி 302ஆர் பைக் எல்இடி டர்ன் இண்டிகேட்டர்களுடன் ஒருங்கிணைக்கப்பட்ட செங்குத்தான ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்பை பெற்றுள்ளது.

கவாஸாகியின் 300சிசி நிஞ்சா பைக்கிற்கு போட்டியாக 2021 பெனெல்லி 302ஆர்!! சீனாவில் அறிமுகம்

அதேபோல் பின்பக்கமும் எல்இடி டெயில்லைட் உடன் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. காற்று துளைகள் பின் இருக்கைக்கு அடியில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் காக்பிட்டின் தோற்றமும் சற்று வித்தியாசப்படுகிறது.

அனலாக்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலில் உள்ள டிஎஃப்டி திரையின் மூலம் ஓடோமீட்டர், ஸ்பீடோமீட்டர், எந்த கியரில் பைக் இயங்குகிறது. எரிபொருளின் அளவு மற்றும் என்ஜின் வெப்பநிலை உள்ளிட்ட விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

கவாஸாகியின் 300சிசி நிஞ்சா பைக்கிற்கு போட்டியாக 2021 பெனெல்லி 302ஆர்!! சீனாவில் அறிமுகம்

2021 பெனெல்லி 302ஆர் பைக்கில் சஸ்பென்ஷனிற்கு வழக்கமான 41மிமீ யுஎஸ்டி முன்பக்க ஃபோர்க் தான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இது ப்ரீலோடு அட்ஜெஸ்ட் வசதியை பெற்றுள்ளது.

ப்ரேக்கிங் பணியை கவனிக்க முன் சக்கரத்தில் 4-பிஸ்டன் உடன் இரட்டை டிஸ்க்கும் பின் சக்கரத்தில் சிங்கிள் டிஸ்க்கும் வழங்கப்பட்டுள்ளன. ட்யுல்-சேனல் ஏபிஎஸ் நிலையாக உள்ளது. 2021 பெனெல்லி 302ஆர் பைக்கின் விலை சீனாவில் 29,800 யென்-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கவாஸாகியின் 300சிசி நிஞ்சா பைக்கிற்கு போட்டியாக 2021 பெனெல்லி 302ஆர்!! சீனாவில் அறிமுகம்

இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.3.38 லட்சமாகும். சீனாவை தொடர்ந்து இந்தியாவிலும் பிஎஸ்6 பெனெல்லி 302ஆர் பைக் அறிமுகமாகுவதற்கு வாய்ப்புள்ளது. இந்திய சந்தையில் இந்த பெனெல்லி பைக்கின் விலை ரூ.3.6 லட்சத்தில் நிர்ணயிக்கப்படலாம்.

Most Read Articles

மேலும்... #பெனெல்லி #benelli
English summary
Benelli 302 R Breaks Cover In China. Kawasaki Ninja 300 Should Be Worried.
Story first published: Friday, April 9, 2021, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X