பெனெல்லியின் புதிய 502சி க்ரூஸர் பைக்!! ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650-க்கு போட்டியாக!

ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கிற்கு போட்டியாக கொண்டுவரப்படும் பெனெல்லி 502சி க்ரூஸர் பைக்கிற்கான முன்பதிவுகள் நாளை (ஜூலை 8)-இல் இருந்து இந்தியாவில் துவங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெனெல்லியின் புதிய 502சி க்ரூஸர் பைக்!! ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650-க்கு போட்டியாக!

பெனெல்லி இந்தியா நிறுவனம் சந்தையில் புதியதாக 502சி என்ற பெயரை கொண்ட க்ரூஸர் பைக்கை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த பைக்கிற்கான முன்பதிவுகள் ஜூலை 8ஆம் தேதியில் இருந்து துவங்கப்பட உள்ளதாகவும் பெனெல்லி அதன் சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்துள்ளது.

பெனெல்லியின் புதிய 502சி க்ரூஸர் பைக்!! ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650-க்கு போட்டியாக!

பைக்கிற்கான இந்திய எக்ஸ்-ஷோரூம் விலைகள் இந்த ஜூலை மாத இறுதியில் வெளியிடப்படலாம். ராயல் என்பீல்டின் இண்டர்செப்டர் 650 பைக்கை முக்கிய போட்டி மாடலாக எதிர்கொள்ளவுள்ள இந்த பெனெல்லி பைக்கின் விலையை இந்தியாவில் ரூ.5 லட்சம் என்ற அளவில் எதிர்பார்க்கிறோம்.

பெனெல்லியின் புதிய 502சி க்ரூஸர் பைக்!! ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650-க்கு போட்டியாக!

இண்டர்செப்டரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.2.50 லட்சம் என்ற அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 2020ல் ஸ்பை படங்களில் கசிந்திருந்த க்யூ.ஜே எஸ்.ஆர்.வி500 மோட்டார்சைக்கிளின் ரீபேட்ஜ்டு வெர்சன் தான் புதிய பெனெல்லி 502சி ஆகும்.

பெனெல்லியின் புதிய 502சி க்ரூஸர் பைக்!! ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650-க்கு போட்டியாக!

இண்டர்செப்டர் 650 மட்டுமின்றி இந்த பெனெல்லி பைக்கிற்கு கவாஸாகி வல்கன் எஸ் பைக்கும் விற்பனையில் போட்டியாக இருக்கும். புதிய 502சி க்ரூஸர் பைக்கின் பெரும்பான்மையான விபரங்கள் தற்போதைக்கு வெளியிடப்படவில்லை.

பெனெல்லியின் புதிய 502சி க்ரூஸர் பைக்!! ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650-க்கு போட்டியாக!

எங்களுக்கு தெரிந்தவரையில், க்யூ.ஜே எஸ்.ஆர்.வி500-இன் அதே 500சிசி, இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்படும். ஆனால் ஆற்றல் வெளியீடு சற்று வேறுப்படலாம். இந்த என்ஜின் 8500 ஆர்பிஎம்-இல் 47 பிஎச்பி மற்றும் 6000 ஆர்பிஎம்-இல் 46 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

பெனெல்லியின் புதிய 502சி க்ரூஸர் பைக்!! ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650-க்கு போட்டியாக!

டிரான்ஸ்மிஷனுக்கு 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படலாம். 17 இன்ச்சில் முன் மற்றும் பின் சக்கரங்களை பெற்றுவரவுள்ள இந்த பெனெல்லி பைக், க்ரூஸர் தோற்றத்தில் வடிவமைக்கப்படுவதால் நிச்சயம் பயணம் அருமையானதாக இருக்கும்.

பெனெல்லியின் புதிய 502சி க்ரூஸர் பைக்!! ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650-க்கு போட்டியாக!

அதேநேரம் எல்இடி விளக்குகள் மற்றும் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரையும் நிச்சயம் இந்த 502சி க்ரூஸரில் எதிர்பார்க்கலாம். ப்ரேக்கிற்கு முன் சக்கரத்தில் ஆரம் காலிபர்களுடன் 280மிமீ பெடல் டிஸ்க்கும், பின்பக்கத்தில் 240மிமீ பெடல் டிஸ்க்கும், பயணிகளின் பாதுகாப்பிற்காக ட்யுல்-சேனல் ஏபிஎஸ் உடன் வழங்கப்பட உள்ளன.

Most Read Articles

மேலும்... #பெனெல்லி #benelli
English summary
Royal Enfield rivaling Benelli 502C cruiser India pre-bookings to open on July 8
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X