பெனெல்லியின் 40வது இந்திய ஷோரூம்... புனேவில் திறப்பு!! பைக் மட்டுமில்லங்க, இங்க காஃபியும் குடிக்கலாம்...

பெனெல்லி இந்தியா நிறுவனம் அதன் 40வது ஷோரூமை புனேவில் புதியதாக திறந்துள்ளது. இந்தியாவின் இந்த முதல் பெனெல்லி கேஃப் ஷோரூமை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பெனெல்லியின் 40வது இந்திய ஷோரூம்... புனேவில் திறப்பு!! பைக் மட்டுமில்லங்க, இங்க காஃபியும் குடிக்கலாம்...

பெனெல்லி கேஃப் ஷோரூம் என்பதால் இங்கு பெனெல்லி பைக்குகள் மட்டுமில்லாமல் காஃபி உள்பட சில உணவு வகைகளும் விற்பனை செய்யப்படவுள்ளன. இதனால் இந்த பெனெல்லி கேஃப் ஷோரூமிற்கு வருகை தருபவர்கள் காஃபியை அருந்துவதுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பெனெல்லி பைக்குகளையும் கண்ணோட்டமிடலாம்.

பெனெல்லியின் 40வது இந்திய ஷோரூம்... புனேவில் திறப்பு!! பைக் மட்டுமில்லங்க, இங்க காஃபியும் குடிக்கலாம்...

ஜபாக் ஆட்டோ என்ற டீலர்ஷிப்பின் கீழ் செயல்படவுள்ள இந்த பெனெல்லி ஷோரூமில் லியோசினோ 500 ஸ்ட்ரீட் ஸ்க்ரம்ப்ளர், டிஆர்கே 502 மற்றும் இம்பெரீயல் 400 போன்ற பெனெல்லி பைக்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன.

பெனெல்லியின் 40வது இந்திய ஷோரூம்... புனேவில் திறப்பு!! பைக் மட்டுமில்லங்க, இங்க காஃபியும் குடிக்கலாம்...

இதில் ஸ்டீல் க்ரே மற்றும் லியாசினோ சிவப்பு என்ற இரு நிறங்களில் கிடைக்கும் லியாசினோ 500 ஸ்ட்ரீட் ஸ்க்ரம்ப்ளர் ரூ.4.6 லட்சம் மற்றும் ரூ.4.7 லட்சம் என்ற விலைகளிலும், டார்க் க்ரே மற்றும் வெள்ளை-சிவப்பு நிறங்களில் கிடைக்கும் டிஆர்கே 502 பைக் ரூ.4.8 லட்சம் மற்றும் ரூ.4.9 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலைகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

பெனெல்லியின் 40வது இந்திய ஷோரூம்... புனேவில் திறப்பு!! பைக் மட்டுமில்லங்க, இங்க காஃபியும் குடிக்கலாம்...

இம்பெரீயல் 400 இருப்பதிலேயே மலிவான பெனெல்லி பைக்காக ரூ.1.89 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இந்த விலையில் சிவப்பு, கருப்பு மற்றும் சில்வர் என்ற மூன்று விதமான நிறங்களில் இம்பெரீயல் 400 பைக்கை வாங்கலாம்.

பெனெல்லியின் 40வது இந்திய ஷோரூம்... புனேவில் திறப்பு!! பைக் மட்டுமில்லங்க, இங்க காஃபியும் குடிக்கலாம்...

மற்றவைகளை காட்டிலும் இம்பெரீயல் 400 பைக்கை இந்திய வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கவே பெனெல்லி நிறுவனம் தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக இந்த பைக்கிற்கு ரூ.4,999 என்ற குறைந்த மாதத்தவணை திட்டத்தை பெனெல்லி இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பெனெல்லியின் 40வது இந்திய ஷோரூம்... புனேவில் திறப்பு!! பைக் மட்டுமில்லங்க, இங்க காஃபியும் குடிக்கலாம்...

இந்த திட்டத்தில், இம்பெரீயல் 400 பைக்கின் விலையில் சுமார் 85 சதவீதம் வரையிலான தொகையை மாதத்தவணையாக மாற்றி கொள்ள முடியும். மேலும் இந்த 400சிசி பைக்கிற்கு 2-வருட வரம்பற்ற கிமீ உத்தரவாதத்தையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

பெனெல்லியின் 40வது இந்திய ஷோரூம்... புனேவில் திறப்பு!! பைக் மட்டுமில்லங்க, இங்க காஃபியும் குடிக்கலாம்...

மற்ற லியாசினோ 500 மற்றும் டிஆர்கே 502 பைக்குகளுக்கு 3-வருட வரம்பற்ற கிமீ உத்தரவாதத்தை பெனெல்லி நிறுவனம் வழங்குகிறது. இவற்றுடன் 24X7 பயணத்தின் போது தேவைப்படும் உதவிகளையும் தனது வாடிக்கையாளர்களுக்கு பெனெல்லி இந்தியா நிறுவனம் வழங்கி வருகிறது.

Most Read Articles

மேலும்... #பெனெல்லி #benelli
English summary
Benelli India Launches its 40th Exclusive Dealership in Pune. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X