இந்தியாவில் 41வது டீலர்ஷிப் மையத்தினை திறந்தது பெனெல்லி!! எந்த நகரத்தில் தெரியுமா?

பெனெல்லி இந்தியா நிறுவனம் அதன் 41வது டீலர்ஷிப் ஷோரூமை ஹவுராவில் திறந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் 41வது டீலர்ஷிப் மையத்தினை திறந்தது பெனெல்லி!! எந்த நகரத்தில் தெரியுமா?

ஸ்பீடு ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்துடனான கூட்டணியில் மேற்கு வங்காளத்தில் உள்ள ஹவுரா நகரத்தில் திறக்கப்பட்டுள்ள இந்த புதிய டீலர்ஷிப் மையத்தின் திறப்பு நிகழ்ச்சியில் பெனெல்லி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் உள்பட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் 41வது டீலர்ஷிப் மையத்தினை திறந்தது பெனெல்லி!! எந்த நகரத்தில் தெரியுமா?

டீலர்ஷிப் மையத்தினை திறந்து வைத்து பேசிய பெனெல்லி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விகாஸ் ஜபாக், ‘ஸ்பீடு ஆட்டோமொபைல்ஸ்' உடன் இணைந்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

இந்தியாவில் 41வது டீலர்ஷிப் மையத்தினை திறந்தது பெனெல்லி!! எந்த நகரத்தில் தெரியுமா?

வாடிக்கையாளர்கள் சேவையில் எங்களது (பெனெல்லி) தத்துவம் எங்கள் ஹவுரா டீலர் கூட்டணி நிறுவனத்தின் நெறிமுறைகளுடன் ஒத்து போகிறது. இந்த டீலர்ஷிப் மையத்தில் நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் விற்பனை, சேவை மற்றும் வாடிக்கையாளர்களின் அனுபவத்தின் அடிப்படையில் சிறப்பான சேவையினை வழங்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 41வது டீலர்ஷிப் மையத்தினை திறந்தது பெனெல்லி!! எந்த நகரத்தில் தெரியுமா?

இதனால் எந்தவொரு மனகசப்பும் சிரமமுமின்றி வாடிக்கையாளர்கள் பெனெல்லி பைக்குகளின் உரிமையாளர் ஆக முடியும். எங்கள் முக்கிய நோக்கம் பெனெல்லியின் 3-எஸ் வசதிகள் இந்தியா முழுவதும் இருப்பதை உறுதி செய்து, வலுவான பிராண்டாக உருவெடுப்பதே ஆகும்.

இந்தியாவில் 41வது டீலர்ஷிப் மையத்தினை திறந்தது பெனெல்லி!! எந்த நகரத்தில் தெரியுமா?

இந்த வகையில் ஹவுரா டீலர்ஷிப் மையம் எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. எங்களை பொறுத்தவரையில், டீலர்ஷிப் மையம் என்பது வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும் ஒரு இடம் மட்டுமில்லாமல், பைக் ஆர்வலர்கள் வந்து பிற எண்ணம் கொண்ட ரைடர்களுடன் தொடர்பு கொள்வதற்கான தளம் என்றும் நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்தார்.

இந்தியாவில் 41வது டீலர்ஷிப் மையத்தினை திறந்தது பெனெல்லி!! எந்த நகரத்தில் தெரியுமா?

பெனெல்லி- ஹவுரா டீலர்ஷிப் மையத்தின் தலைவர் அமிட் மகாரியா கருத்து தெரிவிக்கையில், பெனெல்லியை ஹவுராவிற்கு அழைத்து வருவதில் நாங்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். உள்ளூர் பைக் ஆர்வலர்களின் கனவுகளை நிறைவேற்ற நாங்கள் ஆவலாக உள்ளோம் என்றார்.

இந்தியாவில் 41வது டீலர்ஷிப் மையத்தினை திறந்தது பெனெல்லி!! எந்த நகரத்தில் தெரியுமா?

இத்தாலி நாட்டை சேர்ந்த பெனெல்லியின் மோட்டார்சைக்கிள்கள் மட்டுமின்றி அவற்றிற்கான ஆக்ஸஸரீ பாகங்களும் இந்த டீலர்ஷிப் மையத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன. பெனெல்லி பிராண்டில் இருந்து தற்சமயம் லியோன்சினோ 500, பெனெல்லி இம்பெரீயல் 400 மற்றும் பெனெல்லி டிஆர்கே 502எக்ஸ் என்ற மூன்று பைக் மாடல்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன.

Most Read Articles

மேலும்... #பெனெல்லி #benelli
English summary
Benelli, one of the leading worldwide manufacturer of premium bikes and Adishwar Auto Ride India – Mahavir Group, today launched its 41st exclusive showroom, in Howrah.
Story first published: Thursday, March 25, 2021, 23:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X