இந்தியாவில் 42வது ஷோரூமை திறந்தது பெனெல்லி!! அடேங்கப்பா, இந்த மாநிலத்திலயா?

ஜம்மு காஷ்மீரில் பெனெல்லி நிறுவனம் புதிய ஷோரூம் ஒன்றை திறந்துள்ளது. இந்தியாவின் 42வது பெனெல்லி ஷோரூமாகியுள்ள இதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் 42வது ஷோரூமை திறந்தது பெனெல்லி!! அடேங்கப்பா, இந்த மாநிலத்திலயா?

உலகின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் பெனெல்லி, மஹாவீர் க்ரூப்பில் ஓர் அங்கமாக விளங்கும் அடிஷ்வர் ஆட்டோ ரைட் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் அதன் 42வது ஷோரூமை திறந்து வைத்துள்ளது.

இந்தியாவில் 42வது ஷோரூமை திறந்தது பெனெல்லி!! அடேங்கப்பா, இந்த மாநிலத்திலயா?

ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் தலைநகர்களுள் ஒன்றான ஜம்முவில், கிரேட்டர் கைலாஷ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய பெனெல்லி ஷோரூம் டட்ஸா மோட்டார்ஸின் டீலர்ஷிப்பின் கீழ் இயங்கும்.

இந்தியாவில் 42வது ஷோரூமை திறந்தது பெனெல்லி!! அடேங்கப்பா, இந்த மாநிலத்திலயா?

பெனெல்லியின் இந்த ஜம்மு ஷோரூமில் இம்பீரியல் 400, லியான்சினோ 500, டிஆர்கே 502 மற்றும் டிஆர்கே 502எக்ஸ் என மொத்தம் 4 மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. இதில் ரெட்ரோ-கிளாசிக் தோற்றத்தை கொண்ட இம்பீரியல் 400 பைக் 1950களில் விற்பனையில் இருந்த இத்தாலிய மோட்டோபை மோட்டார்சைக்கிள்களை போன்றதான தோற்றத்தை கொண்டது.

இந்தியாவில் 42வது ஷோரூமை திறந்தது பெனெல்லி!! அடேங்கப்பா, இந்த மாநிலத்திலயா?

மூன்று விதமான நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கும் இம்பீரியல் 400 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலைகள் இந்தியாவில் ரூ.1.9 லட்சத்தில் இருந்து ரூ.1.94 லட்சம் வரையில் உள்ளன. இந்தியாவில் தற்போதைக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பெனெல்லி பைக்காக இது விளங்குகிறது.

இந்தியாவில் 42வது ஷோரூமை திறந்தது பெனெல்லி!! அடேங்கப்பா, இந்த மாநிலத்திலயா?

இந்த பைக்கில் 374சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. பெனெல்லியின் மற்றொரு பழமை வாய்ந்த ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் ரக மோட்டார்சைக்கிள் மாடலான லியான்சினோ 500 க்ரே, லியான்சினோ சிவப்பு என இரு நிறங்களில் கிடைக்கிறது.

இந்தியாவில் 42வது ஷோரூமை திறந்தது பெனெல்லி!! அடேங்கப்பா, இந்த மாநிலத்திலயா?

இதில் லியான்சினோ சிவப்பில் பைக்கின் விலை சற்று கூடுதலாகும். பிஎஸ்6 500சிசி, 2-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் உடன் வழங்கப்படும் லியான்சினோ 500 பைக்கின் விலைகள் ரூ.4.69 லட்சம் மற்றும் ரூ.4.79 லட்சம் என உள்ளன.

இந்தியாவில் 42வது ஷோரூமை திறந்தது பெனெல்லி!! அடேங்கப்பா, இந்த மாநிலத்திலயா?

பெனெல்லியின் கிராண்ட் டூரர் மோட்டார்சைக்கிளான டிஆர்கே 502 பைக்கின் ஆரம்ப விலை ரூ.4.85 லட்சமாகும். இது டார்க் க்ரே நிறத்தில் இந்த பைக்கின் விலை. வெள்ளை மற்றும் பெனெல்லி சிவப்பு நிறங்களில் டிஆர்கே502 பைக்கின் விலை ரூ.4.95 லட்சம் என உள்ளது.

இந்தியாவில் 42வது ஷோரூமை திறந்தது பெனெல்லி!! அடேங்கப்பா, இந்த மாநிலத்திலயா?

இதிலும், இதன் அட்வென்ச்சர் வெர்சனான டிஆர்கே 502எக்ஸ் மாடலிலும் லியான்சினோ 500 பைக்கில் பொருத்தப்படுகின்ற அதே பிஎஸ்6 500சிசி, 2-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் தான் வழங்கப்படுகிறது. 500சிசி பைக்குகளுக்கான முன்பதிவு தொகையாக ரூ.10,000மும், இம்பீரியல் 400 பைக்கிற்கு ரூ.6,000மும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் 42வது ஷோரூமை திறந்தது பெனெல்லி!! அடேங்கப்பா, இந்த மாநிலத்திலயா?

இம்பீரியல் 400 மாடலின் மொத்த தொகையில் அதிகப்பட்சமாக 85 சதவீதம் வரையில் மாதத்தவணையாக மாற்றிக்க்கொள்ள முடியும். மேலும் இந்த மலிவு பெனெல்லி பைக்கை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.4,999 என்ற குறைந்த மாதத்தவணை திட்டமும் வழங்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #பெனெல்லி #benelli
English summary
Benelli, a leading worldwide manufacturer of premium bikes and Adishwar Auto Ride India – Mahavir Group, today launched its 42nd exclusive showroom in Jammu. The state-of-the-art Benelli-Jammu showroom is situated in a plush locale at the Commercial building, opposite lane no. 51, Greater Kailash, Jammu, Jammu and Kashmir 180011.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X