சீனாவில் அறிமுகமானது பெனெல்லியின் புதிய கேஃப் ரேஸர் பைக்!! லியோன்சினோ 500 ஸ்போர்ட்...

சுமார் நான்கு வருடங்களுக்கு முன் ஐக்மா கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட பெனெல்லி லியோன்சினோ 500 ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் ஒருவழியாக சீன நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் அறிமுகமானது பெனெல்லியின் புதிய கேஃப் ரேஸர் பைக்!! லியோன்சினோ 500 ஸ்போர்ட்...

ஐக்மா கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்ட் மாடலில் இருந்து தற்போது இத்தாலியன் மோட்டார்சைக்கிள் பிராண்டான பெனெல்லியில் இருந்து வெளிவந்துள்ள லியோன்சினோ 500-இன் இந்த கேஃப் ரோஸர் எடிசனின் தோற்றத்தில் பெரிய அளவில் எந்த மாற்றம் இல்லை, கான்செப்ட் மாடலையே பெரிதும் ஒத்து காணப்படுகிறது.

சீனாவில் அறிமுகமானது பெனெல்லியின் புதிய கேஃப் ரேஸர் பைக்!! லியோன்சினோ 500 ஸ்போர்ட்...

லியோன்சினோ 500 ஸ்டாண்டர்ட் மாடலின் வழக்கமான யூனிட்டிற்கு பதிலாக இந்த ஸ்போர்ட் மாடலில் க்ளிப்-ஆன் ஹேண்டில்பார் வழங்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் கால் வைக்கும் பகுதியில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் இதனை சற்று பின்னோக்கி வழங்கி இருக்கலாம்.

சீனாவில் அறிமுகமானது பெனெல்லியின் புதிய கேஃப் ரேஸர் பைக்!! லியோன்சினோ 500 ஸ்போர்ட்...

இந்த ஸ்பெஷல் எடிசன் மோட்டார்சைக்கிளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கருப்பு நிற பேக்-க்ரவுண்ட்டை கொண்ட எல்சிடி கன்சோல் எதிர்காலத்தில் மற்ற லியோன்சினோ 500 பைக்குகளுக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் அறிமுகமானது பெனெல்லியின் புதிய கேஃப் ரேஸர் பைக்!! லியோன்சினோ 500 ஸ்போர்ட்...

அதேபோல் மற்ற லியோன்சினோ 500 பைக்குகளில் ஒரே ஒரு எக்ஸாஸ்ட் குழாயில் இரு முனைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த ஸ்போர்ட் எடிசனில் இரு குழாய்களில் முடிவடையும் எக்ஸாஸ்ட் அமைப்பை பெனெல்லி நிறுவனம் பொருத்தியுள்ளது.

சீனாவில் அறிமுகமானது பெனெல்லியின் புதிய கேஃப் ரேஸர் பைக்!! லியோன்சினோ 500 ஸ்போர்ட்...

மேலும் இவற்றுடன் இந்த மோட்டார்சைக்கிளில் வயர்-ஸ்போக்டு சக்கரங்கள் பக்கம் பெனெல்லி சென்றுள்ளது. இடதுபக்கத்தில் வழங்கப்பட்டுள்ள சிறிய பை பைக்கிற்கு ரெட்ரோ-ஸ்டைல் தோற்றத்தை வழங்குகிறது. இவை மட்டுமின்றி ஸ்டாண்டர்ட் மாடலில் இருந்து வேறுப்படும் வகையில் ப்ரெம்போ ப்ரேக்குகளை இந்த ஸ்போர்ட் எடிசன் பெற்றுள்ளது.

சீனாவில் அறிமுகமானது பெனெல்லியின் புதிய கேஃப் ரேஸர் பைக்!! லியோன்சினோ 500 ஸ்போர்ட்...

ஆனால் என்ன மாதிரியான அளவில் ப்ரெம்போ ப்ரேக் வழங்கப்பட்டு உள்ளது என்பதை தற்போதைக்கு தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை. நமக்கு தெரிந்தவரையில், லியோன்சினோ 500 பைக்கின் 320மிமீ டிஸ்க்கின் அளவில் தான் இது வழங்கப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.

சீனாவில் அறிமுகமானது பெனெல்லியின் புதிய கேஃப் ரேஸர் பைக்!! லியோன்சினோ 500 ஸ்போர்ட்...

ஆனால் பெனெல்லி லியோன்சினோ 500 ஸ்போர்ட் பைக்கில் வழக்கமான 499.6சிசி, இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த என்ஜின் இந்த ஸ்போர்ட் பைக்கில் அதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-இல் 48.94 பிஎஸ் மற்றும் 5,500 ஆர்பிஎம்-இல் 47 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் அறிமுகமானது பெனெல்லியின் புதிய கேஃப் ரேஸர் பைக்!! லியோன்சினோ 500 ஸ்போர்ட்...

இது ஸ்டாண்டர்ட் மாடலை காட்டிலும் 1.5 பிஎஸ் மற்றும் 1 என்எம் டார்க் திறன் அதிகமாகும். அதேபோல் பைக்கின் எடையும் 2 கிலோ அதிகரித்துள்ளது. பைக்கில் இருக்கையின் உயரம் 785மிமீ அளவில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கேஃப் ரேஸர் பைக்கிற்கு இன்னும் தட்டையானதாக வழங்கி இருக்கலாம்.

சீனாவில் அறிமுகமானது பெனெல்லியின் புதிய கேஃப் ரேஸர் பைக்!! லியோன்சினோ 500 ஸ்போர்ட்...

லியோன்சினோ 500 ஸ்போர்ட் பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் திட்டத்தில் பெனெல்லி நிறுவனம் தற்போதைக்கு இல்லை. ஏனெனில் இதன் ஸ்டாண்டர்ட் மாடலே இந்த ஆண்டு துவக்கத்தில் தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒருவேளை இதன் ஸ்போர்ட் எடிசன் இந்தியாவிற்கும் கொண்டுவரப்பட்டால் நிச்சயம் அது ஆச்சிரியமான விஷயமாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #பெனெல்லி #benelli
English summary
Benelli Leoncino 500 Sport Launched In China.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X