இந்த விலையில் Benelli பைக்கா! ஹிமாலயன் பைக்கிற்கு ஆப்பு வைக்க குறைவான விலையில் TRK 251 அறிமுகம்!

பெனெல்லி (Benelli) நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த டிஆர்கே 251 (TRK 251) அட்வென்சர் ரக மோட்டார்சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இப்பைக்கிற்கு யாரும் எதிர்பார்த்திராத வகையில் குறைவான விலையை பெனெல்லி நிர்ணயித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்த விலையில் Benelli பைக்கா! ஹிமாலயன் பைக்கிற்கு ஆப்பு வைக்க குறைவான விலையில் TRK 251 மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

இந்திய இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த பைக்குகளில் ஒன்று பெனெல்லி டிஆர்கே 251 (Benelli TRK 251). இந்த மோட்டார்சைக்கிளே தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அட்வென்சர் இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தநிலையில் இப்-பைக் விற்பனைக்கான அறிமுகத்தைப் பெற்றிருக்கின்றது.

இந்த விலையில் Benelli பைக்கா! ஹிமாலயன் பைக்கிற்கு ஆப்பு வைக்க குறைவான விலையில் TRK 251 மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

இது மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதன் காரணத்தினாலேய பலர் இதன் வருகையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்பவாறு இப்-பெனெல்லி பைக் கணிசமான குறைந்த விலையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

இந்த விலையில் Benelli பைக்கா! ஹிமாலயன் பைக்கிற்கு ஆப்பு வைக்க குறைவான விலையில் TRK 251 மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

பெனெல்லி நிறுவனம் புதிய டிஆர்கே 251 பைக்கிற்கு ரூ. 2.51 லட்சம் விலை நிர்ணயித்துள்ளது. "பெனெல்லி பைக் இவ்ளோ குறைவான விலையிலா..." என இது கேள்வி எழுப்பும் வகையில் அமைந்துள்ளது. அதேநேரத்தில் குறைந்த விலையில் டிஆர்கே குறைந்த நாட்கள் வரை மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும் என்பது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கம் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது.

இந்த விலையில் Benelli பைக்கா! ஹிமாலயன் பைக்கிற்கு ஆப்பு வைக்க குறைவான விலையில் TRK 251 மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

பெனெல்லி டிஆர்கே 251 பைக்கிற்கு புக்கிங் பணிகள் ஏற்கனவே இந்தியாவில் தொடங்கிவிட்டது. ரூ. 6 ஆயிரம் முன் தொகையில் மோட்டார்சைக்கிளுக்கான புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. நெடு நீண்ட தூர பயணங்களை விரும்பும் அட்வென்சர் இருசக்கர வாகன பிரியர்களைக் கவரும் வகையில் இப்பைக் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

இந்த விலையில் Benelli பைக்கா! ஹிமாலயன் பைக்கிற்கு ஆப்பு வைக்க குறைவான விலையில் TRK 251 மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

மேலும், நீண்ட தூர பயணங்களுக்கு உதவும் வகையில் இப்பைக்கின் பின் பக்கத்தில் கேரியர் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு லக்கேஜ் உள்ளிட்டவற்றை மிக சுலபமாக ஏற்றி செல்ல முடியும். இத்துடன், இதன் இருக்கைகள் மற்றும் சஸ்பென்ஷன்கள் நீண்டு தூர பயணங்களுக்கு ஏற்றதாக பொருத்தப்பட்டுள்ளன.

இந்த விலையில் Benelli பைக்கா! ஹிமாலயன் பைக்கிற்கு ஆப்பு வைக்க குறைவான விலையில் TRK 251 மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

பெனெல்லி டிஆர்கே 251 பைக்கில் 250 சிசி, 4 ஸ்ட்ரோக், சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 25.8 பிஎஸ் மற்றும் 21.1 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. இதே வசதிக் கொண்ட பைக்கே நிறுவனத்தின் குவார்டர் லிட்டர் நியோ ரெட்ரோ ஸ்டைல் பைக்கான லியன்சினோ 250இல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்த விலையில் Benelli பைக்கா! ஹிமாலயன் பைக்கிற்கு ஆப்பு வைக்க குறைவான விலையில் TRK 251 மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

இந்த எஞ்ஜின் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனில் இயங்கும். மிகவும் பிரமாண்டமான தோற்றத்தில் காட்சியளிக்கும் இப்பைக்கில் 18 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃப்யூவல் டேங்க் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, அதிகபட்ச கிரவுண்ட் கிளியரன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒட்டுமொத்த கிரவுண்ட் கிளியரன்ஸ் 170 மிமீ அளவாகும்.

இந்த விலையில் Benelli பைக்கா! ஹிமாலயன் பைக்கிற்கு ஆப்பு வைக்க குறைவான விலையில் TRK 251 மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

மோட்டார்சைக்கிளில் சிறந்த சஸ்பென்ஷன் வசதிக்காக அப்-சைடு டவுன் ஃபோர்க் முன் பக்கத்திலும், டெலிஸ்கோபிக் காயில் ஸ்பிரிங் ஆயில் டேம்பட் சஸ்பென்ஷன் பின்பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இருசக்கர வாகனம் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

இந்த விலையில் Benelli பைக்கா! ஹிமாலயன் பைக்கிற்கு ஆப்பு வைக்க குறைவான விலையில் TRK 251 மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

குளாஸ்ஸி வெள்ளை, குளாஸ்ஸி கருப்பு மற்றும் குளாஸ்ஸி சாம்பல் நிறம் ஆகிய தேர்வுகளிலேயே புதிய பெனெல்லி டிஆர்கே 251 கிடைக்கும். இந்த மோட்டார்சைக்கிள் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பிரபல அட்வென்சர் ரக வாகனமான ஹிமாலயனுக்கு நேரடி போட்டியாக இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. ஹிமாலயன் ரூ. 2.45 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

இந்த விலையில் Benelli பைக்கா! ஹிமாலயன் பைக்கிற்கு ஆப்பு வைக்க குறைவான விலையில் TRK 251 மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

இந்த பைக்கின் வருகை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மலிவு விலை அட்வென்சர் பைக்கான எக்ஸ்பல்ஸ் 200-க்கும் போட்டியாக அமைந்திருக்கின்றது. இந்தியாவில் அட்வென்சர் இருசக்கர வாகனங்களுக்கு என தனித்துவமான டிமாண்ட் நிலவி வருகின்றது. இந்த டிமாண்டை உணர்ந்தே பெனெல்லி நிறுவனம் குறைவான விலையில் மோட்டார்சைக்கிளை விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #பெனெல்லி #benelli
English summary
Benelli launched trk 251 motorcycle in india at rs 2 51 lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X